காஞ்சிபுரம் , செங்கல்பட்டில்.. விறுவிறுவென நிரம்பும் ஏரிகள்.. இதுவரை 140 ஃபுல்!
சென்னை: காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு மாவட்டங்களில் பெய்து வரும் தொடர் மழை காரணமாக அங்குள்ள 140-க்கும் மேற்பட்ட ஏரிகள் முழு கொள்ளளவை எட்டியுள்ளது.
தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் கடந்த சில நாட்களாக பெய்து வரும் மழை காரணமாகவும் தற்போது நிவர் புயல் காரணமாகவும் நல்ல மழை பெய்து வருகிறது.
சென்னைக்கு அருகில் உள்ள மாவட்டங்களான செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மாவட்டங்களில் பலத்த மழை பெய்துவருகிறது. இதனால் இந்த இரு மாவட்டங்களிலும் அமைந்துள்ள ஏரிகள் வேகமாக நிரம்பிவருகின்றன.

செங்கல்பட்டு- காஞ்சிபுரம்
இங்குதான் உள்ளன. இந்த மாவட்டங்களில் சிறிது, பெரிதுமாக மொத்தம் 900-க்கும் மேற்பட்ட ஏரிகள் உள்ளன. இதில் காஞ்சிபுரத்தில் 500-க்கும் மேற்பட்ட ஏரிகளும், செங்கல்பட்டு மாவட்டத்தில் 350-க்கும் மேற்பட்ட ஏரிகளும் உள்ளன.

நல்ல மழை
தற்போது பெய்து வரும் பருவ மழை காரணமாக அதிக அளவில் மழையை வாரி வழங்கியதால் தற்போது இதில் சுமார் 140-க்கும் மேற்பட்ட ஏரிகள் நிரம்பியுள்ளதாக பொதுப்பணித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர். 250--க்கும் மேற்பட்ட ஏரிகளில் 75 சதவீதமும், 200-க்கும் மேற்பட்ட ஏரிகளில் 50 சதவீதம் அளவுக்கும் நீர் நிரம்பியுள்ளன.

ஏரிகள் நிரம்பின
மற்ற ஏரிகளும் கொஞ்சம், கொஞ்சமாக நிரம்பி வருகின்றன. பொதுப்பணித்துறையின் இந்த தித்திப்பான தகவல், காஞ்சிபுரம், செங்கல்பட்டு பகுதிகளை சேர்ந்தவர்களை மட்டுமில்லாது, சென்னைவாசிகளுக்கும் அளவற்ற மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஏனெனில் சென்னை மக்கள் எப்போதும் குடிநீருக்காக திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள புழல், பூண்டி ஏரியை நம்பியே உள்ளனர்.

விவசாயிகளுக்கு நம்பிக்கை
அதுவும் கைவிரித்தால் கடலூர் வீராணம் ஏரி, கல்குவாரிகளில் உள்ள தண்ணீரைத்தான் அவர்கள் நம்பி இருக்க வேண்டிய நிலை உள்ளது. தற்போது காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் ஏரிகள் நிரம்பி நம்பிக்கையை கொடுத்து வருவதால் சென்னை மக்களின் குடிநீர் தேவையை இங்கு இருந்து பூர்த்தி செய்து கொள்ள முடியும். தற்போது நிவர் புயல் காரணமாக காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்ட மக்கள் அச்சத்தில் உறைந்து இருந்தாலும், மழை காரணமாக ஏரிகள் நிரம்பியுள்ளது அப்பகுதி விவசாயிகளுக்கு நம்பிக்கையை கொடுத்துள்ளது.
-
சென்னையில் மழை வெளுக்கப்போகுது.. மொத்தமா 9 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை! அடுத்த 2 மணி நேரம் உஷார் -
நீ பாவம் பண்ணியிருக்க சேகர்பாபு... மேடையிலேயே நேருக்கு நேராக ஆ ராசா பேச்சு -
உள்ளே யாரு, அவனை வெளியே வர சொல்லு! வசமா பிடிபட்ட மனைவி.. தப்பிய கணவனை சுற்றி வளைத்த தஞ்சாவூர் போலீஸ் -
டாஸ்மாக் தனியார் மயம் ஆகிறதா? மிகப்பெரிய சீர்திருத்தம் வரப்போகிறது.. அமைச்சர் விக்னேஷ் தகவல் -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
சென்னை பஸ் ஸ்டாண்ட் புரட்சி.. களமிறக்கப்படும் புதிய டெர்மினல்கள்.. 2000+ இ-பஸ்கள்.. அடியோடு மாறுது -
டிகே சிவக்குமாருக்கு முதல் அடி! பதவியேற்ற 2 நாளில் கர்நாடக சீனியர் அமைச்சர் ராமலிங்க ரெட்டி ராஜினாமா -
ஒரே கல்லில் 2 மாங்காய்.. விசிகவை வளைக்க திமுக போட்ட மாஸ்டர் பிளான்.. தமிழக அரசியலில் பெரும் பரபரப்பு -
இன்போசிஸ், ஹெச்சிஎல் செய்த வேலையை பாத்தீங்களா.. இந்திய ஐடி ஊழியர்கள் தான் கிங்மேக்கர்! -
இனி திமுக- அதிமுக போல் தான் பாஜகவையும் பார்ப்பேன்.. புதிய இயக்கத்தை தொடங்கியதுமே அண்ணாமலை அதிரடி -
கே.என்.நேரு மீது லஞ்ச ஒழிப்புத்துறை வழக்கு.. விஜய் அரசின் முதல் ஆக்சன்.. அடித்து ஆடும் அருண் ஐபிஎஸ் -
இர்ஃபானின் பிரியாணி பக்கெட்டை பிரித்ததுமே ஆடிப்போன கஸ்டமர்ஸ்.. 4 கிலோவுக்கு இவ்வளவுதானா ஆட்டுக்கறி?












Click it and Unblock the Notifications