வருமான வரி சோதனை! ரூ. 200 கோடி வருவாயை அன்புச்செழியன் மறைத்தது கண்டுபிடிப்பு.. சிக்கலில் பிரபலங்கள்?
சென்னை: சினிமா பைனான்சியர் அன்புச்செழியன் உள்ளிட்ட திரைத்துறையினருக்குச் சொந்தமான இடங்களில் நடத்தப்பட்ட சோதனை குறித்த தகவல்கள் வெளியாகி உள்ளது.
சினிமா பைனான்சியர் அன்புச் செழியனுக்குச் சொந்தமான வீடு மற்றும் அவருடைய உறவினர்கள் வீடுகளில் கடந்த சில நாட்களுக்கு முன்பு ரெய்டு நடத்தப்பட்டது.
வரி ஏய்ப்பு செய்ததாக எழுந்து குற்றச்சாட்டைத் தொடர்ந்து சினிமா பைனான்சியர் அன்புச்செழியன் வீட்டில் முதலில் இந்த ரெய்டு தொடங்கியது.

ரெய்டு
அதன் பின்னர் சினிமா தயாரிப்பாளர்கள் கலைப்புலி எஸ்.தாணு, எஸ்.ஆர்.பிரபு, ஞானவேல் ராஜா, டி.ஜி. தியாகராஜன், சீனிவாசன் உள்ளிட்ட திரைத்துறையினருக்குச் சொந்தமான வீடு, அலுவலகங்களில் ரெய்டு தொடர்ந்தது. சென்னை, மதுரை, வேலூர் உட்பட என மாநிலம் முழுவதும் சுமார் 40க்கும் மேற்பட்ட இடங்களில் வருமான வரித்துறையினர் அதிரடி சோதனை நடத்தினர்.

முக்கிய புள்ளிகள்
அன்புச்செழியன் வீட்டில் நடத்தப்பட்ட ரெய்டு சுமார் மூன்று நாட்கள் நீடித்தது. இந்த சோதனையில் பல கோடி மதிப்புள்ள சொத்துக்கள், கணக்கில் வராத ரொக்க பணம் பறிமுதல் செய்ததாகக் கூறப்பட்டது. மேலும், அங்கிருந்து பல முக்கிய ஆவணங்களையும் கூட அதிகாரிகள் கைப்பற்றினர். ஒரே நேரத்தில் தமிழ் திரையுலகில் பல முக்கிய நபர்களுக்கு சொந்தமான இடங்களில் நடத்தப்பட்ட ரெய்டு பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

ரூ.200 கோடி வருவாய்
இந்தச் சூழலில் அன்புச்செழியன் வீட்டில் நடைபெற்ற சோதனை குறித்து வருமான வரித்துறையினர் விளக்கம் அளித்து உள்ளனர். அதில் அன்புச்செழியன் உள்ளிட்ட திரைத்துறையினர் ரூ.200 கோடி வருவாயை மறைத்தது கண்டுபிடிக்கப்பட்டது. வினியோகஸ்தர்கள் திரையரங்குகளில் இருந்து கிடைத்த வருமானத்தை மறைத்ததாகவும் வருமான வரித்துறையினர் குறிப்பிட்டு உள்ளனர்.

ரொக்கம் பறிமுதல்
சென்னை, மதுரை, கோவை உள்ளிட்ட இடங்களில் நடைபெற்ற சோதனையில் கணக்கில் வராத ரூ.26 கோடி ரொக்கம் பறிமுதல் செய்யப்பட்டதாகவும் வருமான வரித்துறையினர் தெரிவித்து உள்ளனர். மேலும், சுமார் ரூ.3 கோடி மதிப்புள்ள தங்க நகைகள் பறிமுதல் செய்யப்பட்டதாக வருமான வரித்துறையினர் கூறி உள்ளனர். இன்னும் சில இடங்களில் சோதனை தொடர்ந்து நடைபெறுவதாகவும் கூறப்பட்டு உள்ளது.
Recommended Video

யார் இவர்
மதுரையைச் சேர்ந்த அன்புச்செழியன் தமிழ் சினிமா துறையில் அசைக்க முடியாத முக்கிய பைனான்சியராக உள்ளார். கோபுரம் பிலிம்ஸ் என்ற பெயரில் படங்களை விநியோகம் செய்து வரும் அவர், டில திரைப்படங்களையும் தயாரித்து உள்ளார். சமீபத்தில் வெளியான விக்ரம் , 'தி லெஜண்ட்' படங்களை இவர் தான் வெளியிட்டு இருந்தார். முன்னதாக கடந்த 2020ஆம் ஆண்டு பிகில் திரைப்படம் வெளியான சமயத்திலேயே இவருக்குச் சொந்தமான இடங்களில் ரெய்டு நடத்தப்பட்டு இருந்தது குறிப்பிடத்தக்கது.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தலை எதிர்கொள்ள திமுகவின் இரட்டை வியூகம்.. இள ரத்தத்திற்கு முக்கியத்துவம்! -
96,000 வாக்குகள் வித்தியாசத்தில்.. தவெக வேட்பாளரை ஜெயிக்க வைத்த தொகுதிக்கு இந்த நிலைமையா? -
இந்தியாவை தாக்கும் பெரிய ஆபத்து.. விஷயம் கேட்டு எலான் மஸ்க் கூட அதிர்ந்து போனார்! பேரழிவு கன்பார்ம்? -
அதிகாலையே கணக்கில் வரவு வைக்கப்பட்ட ரூ.3000.. வந்தது மே மாதம் பேமெண்ட்.. அரசின் அசத்தல் மூவ்! -
சொத்துகளை மறைக்கும் சென்னை மேயர் பிரியா.. துணை மேயர் உள்பட 75% கவுன்சிலர்கள் 4 ஆண்டுகளாக ‘டிமிக்கி' -
அதிமுக + திமுகவிற்கு ஷாக்.. 4 மாஜி அமைச்சர்கள் - 8 எம்எல்ஏக்கள் உள்பட 60 பேர் தவெகவில் ஐக்கியம் -
அடித்து ஆடும் விஜய்.. வருகிறது ராமநாதபுரம் புதிய விமான நிலையம்.. பொருளாதார புரட்சிக்கு அடித்தளம்! -
ரஷ்யா வச்ச ஆப்பு.. தள்ளுபடிலாம் தர முடியாது.. பிரீமியம் கட்டணம்! கச்சா எண்ணெய்க்கு 425% கூடுதல் தொகை -
ரூ.15 லட்சம் கோடி பஸ்பம் ஆகும்? சரிகிறது இந்தியாவின் தங்க’ சாம்ராஜ்யம்.. நாட்டையே உலுக்கும் சம்பவம் -
"அண்ணாமலை வந்ததால் பாஜக ஒன்னும் பலமாகவில்லை".. ஒரு இதழை கூட அசைக்க முடியாது.. தமிழிசை ‘அட்டாக்' -
நாங்க தோத்துட்டோம்.. ஆனா சாகலை! விஜய்க்கு ஏதாவது ஆச்சுனா கம்பெனி பொறுப்பில்லை! மாஜி கொடுத்த வார்னிங் -
ஒரு மேயர் பதவியையாவது ஜெயிச்சு பாருங்க..நான் என் ஒரு பக்க மீசையை எடுத்துக்குறேன்! ஆர்எஸ் பாரதி சவால்












Click it and Unblock the Notifications