3 தலைமுறை கனவு.. விவசாயிகளுக்கு விடிவு காலம்! அத்திக்கடவு- அவினாசி திட்டத்தால் கிடைக்கும் பலன்கள்
சென்னை: விவசாயிகளின் பல வருட கனவான அத்திக்கடவு - அவினாசி திட்டத்தை சென்னை தலைமைச் செயலகத்தில் இருந்தபடி தமிழக முதல்வர் மு.க ஸ்டாலின் இன்று தொடங்கி வைத்தார். 1957-ம் ஆண்டே இந்த திட்டத்தின் கோரிக்கை வைப்பட்ட நிலையில் தற்போது நிறைவேற்றப்பட்டுள்ளது. அத்திக்கடவு அவினாசி திட்டத்தால் விவசாயிகளுக்கு என்னென்ன பலன்கள் கிடைக்கும் என்பது குறித்து இங்கே பார்க்கலாம்.
விவசாயிகளின் பல வருட கனவான அத்திக்கடவு - அவினாசி திட்டம் இன்று தொடங்கி வைக்கப்பட்டுள்ளது. முதல்வர் மு.க ஸ்டாலின் காணொலி வாயிலாக இந்த திட்டத்தை தொடங்கி வைத்தார். இதற்கான தொடக்க விழா பவானி காலிங்கராயன் அணைக்கட்டு முதலாவது நீரேற்று நிலையத்தில் நடைபெற்றது.

இந்த திட்டம் பயன்பாட்டிற்கு வந்ததன் மூலம் ஈரோடு, திருப்பூர், கோவை ஆகிய 3 மாவட்டங்களில் உள்ள வறட்சியான பகுதிகளில் உள்ள ஏரி, குளங்கள், குட்டைகளுக்கு குழாய்கள் மூலம் தண்ணீர் கொண்டு வந்து நிரப்பப்படும். இதனால் விவசாய கிணறுகள், ஆழ்குழாய் கிணறுகளில் நிலத்தடி நீர் மட்டம் உயர்ந்து குடிநீர் பிரச்சனைக்கும் தீர்வு காணப்படுவதோடு 3 மாவட்டங்களில் உள்ள 24,468 ஏக்கர் விவசாய நிலங்கள் பயன்பெறும். நிலத்தடி நீர்மட்டமும் உயரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த திட்டத்தை நிறைவேற்ற 1957-ம் ஆண்டே அப்பகுதி எம்எல்ஏ மாரப்ப கவுண்டர் சட்டசபையில் கோரிக்கை வைத்தார். அதன்பிறகு 1960-ம் ஆண்டு அப்போதைய முதல்வர் பக்தவத்சலம் இந்த திட்டத்துக்கு அடிக்கல் நாட்டினார். ஆனால், தொடர்ந்து பணிகள் எதுவும் நடைபெறாமல் அப்படியே இருந்தது.
தென்மேற்கு பருவமழை காலத்தில் கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் அருகே இருக்கும் பில்லூர் வனப்பகுதியில் பில்லூர் அணை நிரம்பி, பவானி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்படுகிறது. இதனால் பவானிசாகர் அணை நிரம்பி வெள்ள உபரி நீர் வெளியேறுகிறது. இந்த உபரி நீரை ராட்சதக் குழாய்கள் மூலம் ஆண்டுக்கு 70 நாட்கள் வெளியேற்றி கால்வாய் மூலம் கொண்டு சென்றால், கோவை, திருப்பூர், ஈரோடு மாவட்டங்களில் வறட்சி பாதித்த பகுதிகள் பயன்பெறும்.
அதாவது, பெருந்துறை, சென்னிமலை, நம்பியூர், கோபி, பவானிசாகர், ஊத்துக்குளி, அவினாசி, திருப்பூர் வடக்கு, அன்னூர், சூலூர், பெரிய நாயக்கன்பாளையம், சர்க்கார் சாமக்குளம், காரமடை ஆகிய 13 ஒன்றியங்களில் இருக்கும் 1,045 குளம், குட்டைகளில் 15 டிஎம்சி வரை தண்ணீரை நிரப்ப முடியும். இதன் மூலம் 24,968 ஏக்கர் விவசாய நிலங்கள் பாசன வசதி பெறும்.
இதனால், இந்த 3 மாவட்ட மக்களும் நீண்ட நெடுங்காலமாக அத்திக்கடவு - அவினாசி திட்டத்தை எதிர்பார்த்து இருந்தனர். தங்கள் வாழ்வாதாரத்திற்கு பெரிதும் பயனளிக்கும் இந்த திட்டம், கைவிடப்படுமோ என்ற அச்சம் கூட விவசாயிகளுக்கு நிலவியது. அப்பகுதி மக்களின் தொடர் கோரிக்கையின் பயனாக 2016-ம் ஆண்டு இந்த திட்டம் செயல்படுவதற்கான அறிகுறி தென்பட்டது.
அப்போது நடைபெற்ற அதிமுக ஆட்சியில் தாக்கல் செய்யப்பட்ட இடைக்கால பட்ஜெட்டில் அத்திக்கடவு - அவினாசி திட்டத்துக்கு தொடக்கம் போடப்பட்டது. இந்த திட்டத்துக்கான ஆரம்ப கட்ட பணிகளுக்கு ரூ.3 கோடியே 27 லட்சம் நிதி ஒதுக்கப்பட்டதுடன், 34 மாதங்களில் பணிகளை முடிக்கவும் திட்டமிடப்பட்டது. அதிமுக மீண்டும் ஆட்சிக்கு வந்த நிலையில், 2018-ம் ஆண்டு அத்திக்கடவு - அவினாசி திட்டத்துக்காக ரூ.250 கோடி நிதி ஒதுக்கப்பட்டு, திட்டமும் விரிவுபடுத்தப்பட்டது.
2019-ம் ஆண்டு பிப்ரவரி 28-ந்தேதி அப்போதைய முதல்வராக இருந்த எடப்பாடி பழனிசாமி, அத்திக்கடவு-அவினாசி திட்டத்துக்கு அடிக்கல் நாட்டினார். அதே ஆண்டு பணிகள் தொடங்கப்பட்டன. அதன்பிறகு, தமிழகத்தில் 2021-ம் ஆண்டு ஆட்சி மாறியது. கொரோனா பரவல், ஊரடங்கு என இடையூறுகளும் ஏற்பட இந்த பணிகள் மந்தம் அடைந்தன. அத்திக்கடவு - அவினாசி திட்டம் 20 சதவிகிதம் தான் பாக்கியுள்ளது ஆனால், 33 மாதங்கள் ஆகியும் முடிவு பெறவில்லை எடப்பாடி பழனிசாமி விமர்சித்தார்.
பல தடைகளை தாண்டி இந்த திட்டம் தற்போது பயன்பாட்டுக்கு வந்துள்ளது. கொரோனா முடிந்த பிறகும் பணிகள் மெதுவாக நடந்து வருவதாக குற்றச்சாட்டு எழுந்த அத்திக்கடவு - அவினாசி திட்டம் தொடர்பாக, கடந்த பிப்ரவரி மாதம் சட்டசபையில் பேசிய எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி, "அத்திக்கடவு - அவினாசி திட்டத்தின் 80 சதவீத பணி அ.தி.மு.க. ஆட்சி காலத்திலேயே நிறைவேற்றப்பட்டுவிட்டது.
மீதமுள்ள 20 சதவீத பணி 33 மாதங்கள் ஆகியும் முடிவடையவில்லை" என்று குற்றம்சாட்டி பேசினார். அத்திக்கடவு - அவினாசி திட்ட பணிகள் ரூ.1,916 செலவில் முடிக்கப்பட்டுள்ளன. கால்வாயின் மொத்த நீளம் 133.4 கிலோ மீட்டர் ஆகும். அதில், 3.7 கிலோ மீட்டர் சுரங்கப்பாதையில் அமைந்துள்ளது. பிரதான கால்வாய் 35.20 மீட்டர் நீளமும் அவினாசி கிளை கால்வாய் 21.65 கி.மீ. நீளமும், பெருந்துறை கிளை கால்வாய் 72.9 கி.மீ. நீளமும் கொண்டதாக உள்ளது.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications