சென்னை பாடி மேம்பாலம் அருகே! பைக் மீது மணல் லாரி மோதல்! தாய், குழந்தை பலி!
சென்னை: சென்னை பாடி மேம்பாலத்தில் இரு சக்கர வாகனம் மீது மணல் ஏற்றி வந்த டிப்பர் லாரி மோதி விபத்து ஏற்பட்டது. இதில் தாயும், குழந்தையும் தலை நசுங்கி பலியான சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை பாடியை சேர்ந்தவர் சரவணன். இவர் இரு சக்கர வாகனத்தில் மனைவி பிரியாவையும் குழந்தை கரோலினையும் (1) அழைத்து கொண்டு சென்று கொண்டிருந்தார்.
அப்போது பாடி மேம்பாலம் அருகே வந்த போது இரு சக்கர வாகனம் மீது மணல் ஏற்றி வந்த டிப்பர் லாரி மோதி விபத்து ஏற்பட்டது. இதில் இரு சக்கர வாகனத்தில் பயணம் செய்த சரவணன், பிரியா, கரோலின் ஆகியோர் கீழே விழுந்தனர்.
அப்போது எதிர்பாராதவிதமாக டிப்பர் லாரி ஏறி இறங்கியதில் பிரியா தலை நசுங்கி உயிரிழந்தார். படுகாயமடைந்த சரவணன், கரோலின் ஆகியோர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். அப்போது சிகிச்சை பலனின்றி குழந்தை கரோலின் இறந்துவிட்டது.
இந்த விபத்து குறித்து போலீஸார் விசாரணை நடத்தி வருகிறார்கள். விபத்து நடந்த இடத்தில் போக்குவரத்து காவலர்களுடன் வாகன ஓட்டிகள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
-
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ












Click it and Unblock the Notifications