8 வருஷமா.. சொந்த மகளிடம் அத்துமீறிய தந்தை! கொடுமைக்கு அம்மாவே உடந்தையாம்! தலைசுற்றிப் போன சென்னை!

Subscribe to Oneindia Tamil

சென்னை : சென்னை அருகே பெரவள்ளூரில் 12 வயது முதல் மகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில் தாய் தந்தை என இரண்டு பேர் கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.

தமிழகத்தில் பாலியல் வன்கொடுமை சம்பவங்கள் அதிகரித்து வரும் அதே வேளையில் உறவினர்களால் பாலியல் பலாத்காரத்துக்கு உள்ளாகும் சிறுமிகள் குழந்தை பெற்றெடுத்து வரும் சம்பவங்கள் பெற்றோர்களையும் சமூக ஆர்வலர்களையும் கடும் அதிர்ச்சியில் ஆழ்த்தி வருகிறது.

அதையெல்லாம் விட சிறுமிகளுக்கு பாதுகாப்பாக இருக்க வேண்டிய உறவினர்கள், சகோதரர்கள், ஏன் தந்தையே பாலியல் வன்கொடுமை செய்த சம்பவங்களும் அரங்கேறி வருவது, அதுவும் தமிழகத்தில் நடப்பது தான் வேதனையின் உச்சம்

சென்னையில் அதிர்ச்சி

சென்னையில் அதிர்ச்சி

அந்த வகையில் சென்னை அருகே பெரவள்ளூரில் 12 வயது முதல் மகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில் தாய் தந்தை என இரண்டு பேர் கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது. சென்னை பெரவள்ளூர் பகுதியைச் சேர்ந்த 20 வயது பெண் செம்பியம் உதவி கமிஷனரிடம் புகார் மனு ஒன்றை அளித்திருந்தார்.

அத்துமீறிய தந்தை

அத்துமீறிய தந்தை

அதில் தனது 12 வயது முதல் தனது தந்தை தன்னிடம் தகாத முறையில் நடந்து கொண்டதாகவும் இதனை எனது அம்மாவிடம் கூறிய போது அவர் வெளியே செல்லக்கூடாது என மிரட்டியதாகவும் எனவே எனக்கு பாலியல் தொல்லை கொடுத்த தந்தை மீதும் அவருக்கு உறுதுணையாக இருந்த தாய் மற்றும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என அந்த புகார் மனுவில் தெரிவித்து இருந்தார். இதனையடுத்து புகார் மனுவை முறையாக விசாரிக்கும்படி செம்பியம் அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசாருக்கு உத்தரவிடப்பட்டது.

அம்மா உடந்தை

அம்மா உடந்தை

இதனையடுத்து இளம் பெண்ணின் தந்தையான பெரவள்ளூர் பகுதியைச் சேர்ந்த ஸ்ரீநாத் 59 மற்றும் அவரது மனைவி காஞ்சனா 52 ஆகிய இருவரிடமும் போலீசார் விசாரணை மேற்கொண்டனர் விசாரணையில் தந்தை ஸ்ரீநாத் சிறுவயதில் மகளிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டதும் அதை அவரது மனைவியான காஞ்சனா கண்டித்து உள்ளது தெரிய வந்தது. ஆனால் போலீசாரிடம் இது குறித்து எதுவும் காஞ்சனா தெரிவிக்கவில்லை.

அதிரடி கைது

அதிரடி கைது

இதனை அடுத்து சிறு வயது முதல் தனது சொந்த மகளுக்கு பாலியல் தொல்லை தந்த தந்தையான ஸ்ரீநாத் அதனை மறைத்த அவரது மனைவி காஞ்சனா என இருவர் மீதும் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்த செம்பியம் அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார் நேற்று ஸ்ரீநாத் மற்றும் காஞ்சனா ஆகிய இருவரையும் கைது செய்து அவர்களை நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+