தாய் பத்திரம்.. செட்டில்மென்ட் பத்திரம் செய்ய போறீங்களா? பத்திரப்பதிவில் இந்த ஆவணங்கள் மிக முக்கியம்
சென்னை: வீடு - மனை உள்ளிட்ட சொத்துக்களின் உரிமை மாற்றத்தை குறிப்பிடும் ஆவணங்கள் ஏராளமாக உள்ளன.. அவற்றில் ஒருசில மட்டும் இங்கே பார்க்கலாம்.
தாய் பத்திரம் அதாவது மூலப்பத்திரம் என்பது மிகவும் முக்கியமான ஆவணம்.. முதல் முதலாக குறிப்பிட்ட சொத்தை வாங்கியவர், அதை யாரிடமிருந்து வாங்கினார், என்பதே தாய்ப்பத்திரம்.. சுமார் 100 வருடங்களுக்குமுன்பு, யார் அந்த சொத்தின் ஓனர்? அவருக்கு இந்த சொத்து எப்படி? எந்த பத்திரம் அல்லது அரசு ஆவணம் என்பதெல்லாம் அடங்கியது.

தான பத்திரம்: ஒருவருக்கு சொந்தமான சொத்துக்களை பிறருக்கு தானமாக தருவது.. இதற்காக பணம் அல்லது வேறு பிரதி பலன் போன்ற எந்தவிதமான பயனையும் எதிர்பார்க்காமல் தானமாகவே எழுதி கொடுக்கும் ஆவணம் பெயர்தான், தானப்பத்திரம் எனப்படும்.
தனக்கு சொந்தமான ஒரு காலி மனையையோ அல்லது ஒரு கட்டிடத்தையோ ரத்த சம்பந்தம் இல்லாத வேறு ஒருவருக்கு கிரையம் செய்யாமல், முழுக்க முழுக்க இலவசமாக அளிப்பதை பதிவு செய்வதற்கு பயன்படுவதுதான், இந்த தான பத்திரம்.
பாக பிரிவினை: ஒருவரது சொத்துக்களை அவருடைய வாரிசுகளுக்கு சரிசமமாக பிரிப்பதாகும்.. அதன்படி, தனித்தனியாக சம்பந்தப்பட்டவர்களது பெயருக்கு ஆவணமாக கிரயம் செய்து கொடுப்பதையே பாகப்பிரிவினை கிரய பத்திரம் என்பார்கள்.. இதற்கு ஆங்கிலத்தில் "பார்ட்டிசின் பத்திரம்" என்றும் பெயர்.. பெரும்பாலும், தந்தை வழி சொத்தில் வாரிசுகளுக்கு கிடைக்கும் சொத்துரிமைதான் பாகப்பிரிவினை.
குடும்ப உறுப்பினர்கள் சம்மதத்தின்பேரில் சமமாகவோ அல்லது வாரிசுகள் முழுமனதுடன், பிரித்து கொள்ளும் முறையாகும்.. ஒருவேளை பூர்வீக சொத்துக்களை வாரிசுகளுக்கு சமமாக பிரிக்கப்படாதபட்சத்தில், அல்லது வாரிசுகளில் யாருக்காவது ஏதாவது ஆட்சேபனை இருந்தால், அது தொடர்பாக கோர்ட்டில் கேஸ் போடலாம்.
செட்டில்மென்டு பத்திரம்: தன்னுடைய சொத்துக்களை அவரது விருப்பத்தின் அடிப்படையில், வாரிசுகளுக்கு அவரது விருப்பப்படி, பிரித்து எழுதி வைக்கப்படுவதுதான் செட்டில்மென்டு பத்திரம் ஆகும்.
உயில் பத்திரம்: ஒருவருக்கு சொந்தமான வீடு, மனை உள்ளிட்ட இதர சொத்துக்களை அவரது காலத்துக்கு பிறகு யார்யாருக்கு என்னென்ன அளவுகளில் உரிமை என்ற விவரங்களை உயில் மூலம் எழுதி வைப்பதே உயில் பத்திரம்.. தனிப்பட்ட முறையில், தன்னுடைய சுய விருப்பத்திற்கு ஏற்றவாறு எழுதுவதே உயில்.. அதுவும் சுயநினைவோடு எழுதுவார்கள்..
தான் சம்பாதித்த தனிப்பட்ட சொத்துக்களை தன்னுடைய இறப்புக்குப் பிறகு, தான் விரும்பும் நபருக்கு சிக்கல் இல்லாமல் போய்சேர வேண்டும் என்பதற்காக இப்படி எழுதுவார்கள்.. அதற்காக பூர்வீக சொத்தை, உயிலாக எழுத முடியாது. அதேபோல, தனிப்பட்ட சொத்தை மட்டுமே வாரிசுகளுக்கு உயில் எழுதவேண்டும் என்கிற அவசியமுமில்லை..
மைனர்கள்: ரத்தபந்தம் இல்லாதவர்களும் உயில் எழுதி தரலாம்.. அல்லது அறக்கட்டளைகள் போன்றவற்றுக்கும் உயில் எழுதி வைக்கலாம். ஒருவேளை உயில் எழுதி வைக்கவில்லை என்றால், சம்பந்தப்பட்ட வாரிசுகளுக்கு சொத்து தானாகவே போய் சேர்ந்துவிடும். அதேபோல, மனநிலை சரியில்லாத நிலையில் அல்லது குடிபோதையில் எழுதப்பட்ட உயில் செல்லாது. ஒருவேளை மைனர் மீது உயில் எழுதப்படுகிறதென்றால், அதற்கு கார்டியன் எனப்படும் காப்பாளர் ஒருவரை கட்டாயம் நியமிக்க வேண்டும்.
-
“மக்களை தெருநாய்களாக சித்தரித்த உங்களுக்கும் ஓட்டு போடுவாங்க”.. ராகவா லாரன்ஸுக்கு சேரன் பதில்! -
தவெக அமைச்சரவையில் இருந்து எந்நேரத்திலும் வெளியேறுவோம்.. திருமாவளவன் கருத்துக்கு வன்னி அரசு விளக்கம் -
"கலைஞர் டிவி, ஜெயா டிவிக்கு அடுத்ததாக 'வெற்றி டிவி'... ஜூன் 22-ல் லோகோ வெளியீடு? விஜய்யின் அடுத்த மாஸ்டர் மூவ் இதுதானா?" -
தவெகவில் சேர்ந்த 10 நாட்களிலேயே அரசியலில் இருந்தே விலகிய முன்னாள் MLA கோவிந்தசாமி.. பின்னணி என்ன? -
Vijay Sangeetha Divorce: சிஎம்-ஆவே இருந்தாலும் நேரில் தான் வரனும்.. வீடியோ கான்ஃப்ரன்ஸ் கோரிக்கையை நிராகரித்த நீதிமன்றம் -
6400 கி.மீ ரஷ்யா, 7200 கி.மீ ஆப்பிரிக்காவை விட நீளமானது என்று கூகுள் மேப்ஸ் எப்படி நம்ப வைக்கிறது? -
மூட்டை முடிச்சை கட்டிக்கிட்டு பெங்களூர், ஹைதராபாத் போக வேண்டியதுதான்.. பின்னோக்கி செல்லும் சென்னை! -
விஜய் வெற்றி செல்லாது? திருச்சி கிழக்கு எம்எல்ஏவாக என்னையே அறிவிக்கணும்.. ஹைகோர்ட்டில் இனிகோ மனு -
“செல்போனால் ஒரு மாநிலமே போய்விட்டது” - நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதனின் பேச்சால் சலசலப்பு! -
மகளிர் உரிமைத் தொகை ரூ.2,500! புதிய விதிமுறைகள் தயார்? ஜூன் மாதப் பட்டியலில் யாருக்கெல்லாம் வாய்ப்பு -
சி.வி.சண்முகத்துக்கு பல்வேறு பொறுப்புகளை பிச்சை போட்டதே எடப்பாடி பழனிசாமிதான்: அக்ரி கிருஷ்ணமூர்த்தி -
மனோஜ் மனைவி தனியாக வாழ காரணம் இதுதான்.. "இதை” நம்பி தான் இருக்கிறாங்க! பாரதிராஜா தம்பி உருக்கம்












Click it and Unblock the Notifications