தாய் பத்திரம்.. சொத்து பத்திரங்கள் ஏன் முக்கியம் தெரியுமா? தொலைந்த உங்க ஆவண நகல்களை பெற இதோ ஈஸி ரூட்

Subscribe to Oneindia Tamil

சென்னை: சொத்து பத்திரங்களை ஏன் கவனமாக கையாள வேண்டும் தெரியுமா? பத்திரங்கள் தொலைந்துவிட்டால், அதன் நகலை பெற முடியுமா? அதற்கான வழிமுறைகள் என்னென்ன தெரியுமா?

பாடுபட்டு உழைத்த பணத்தில், நாம் வாங்கும் ஒவ்வொரு சொத்துக்கள், நம்முடையதுதான் என்பதை எடுத்துரைக்கும் மிக முக்கியமான ஆவணம்தான் பத்திரங்கள். இந்த பத்திரங்களை எப்போதுமே நாம் பத்திரமாக வைத்து கொள்ள வேண்டும். எந்தவிதமான சொத்து பத்திரமாக இருந்தாலும் அதை கவனமுடன் கையாள வேண்டும்.

Mother Document Land Document Copies

ஆவணங்கள் : ஏனென்றால், இந்த பத்திரத்தில்தான், மூல ஆவணத்தின் விவரங்கள், தேதி, பத்திர எண், சொத்து விவரம், சொத்தின் விஸ்தீரணம், சர்வே எண்கள், உட்பிரிவு எண், கிராம எண், பெயர், போன்றவை பதிவு செய்யப்பட்டிருக்கும்.

அதனால், பத்திரம் பதிந்ததுமே, உரிமையாளரின் முழுப்பெயர், அடையாள அட்டை, ரேஷன் கார்டில் உள்ள முகவரி, சொத்தினை விற்பனை செய்தவரின் பெயர் போன்ற விவரங்களும் பதிவாகியிருக்கும்.

அடையாள அட்டைகள்: எனவே, அடையாள அட்டை, மற்றும் மூல ஆவணத்தில் பதிவாகியிருக்கும் விவரங்கள் அனைத்துமே சரியாக உள்ளதா? என்பதையும் உற்றுகவனிக்க வேண்டும்.. அனைத்து விவரங்களும் சரியாக இருக்கும் பட்சத்தில், அந்த ஆவணங்களை பத்திரப்படுத்தி வைக்க வேண்டும்.

அதற்காக பத்திரங்களை லேமினேஷன் செய்யக்கூடாது. அப்படி செய்தால், ஆவணங்களின் நம்பகத்தன்மை போய்விடும்.. அதனால், ஆவணங்களை தனித்தனியே பிரித்து வைக்க வேண்டும். ரப்பர் பேண்ட், கிளிப்புகளையும் போட்டும் வைக்ககூடாது. வெறுமனே ஆவணங்களை ஒரு பாலித்தீன் கவரில் போட்டுவைத்தாலே போதும். தண்ணீர் புகாமலும், அழுக்குகள் எளிதில் ஏறாமலும் இருக்கும்..

ஒருவேளை சந்தர்ப்ப சூழலால், சொத்து பத்திரம் எதாவது தொலைந்துவிட்டால், ஆன்லைனிலேயே அதனை பெற்றுக்கொள்ளலாம்.. ஆன்லைனில் இதற்கான வழிமுறைகள் என்னென்ன தெரியுமா? இதற்காகவே அதிகாரப்பூர்வமாக உள்ள https://tnreginet.gov.in/portal/ என்ற வெப்சைட்டிற்கு சென்று, உங்களது யூசர் ஐடி மற்றும் பாஸ்வேர்ட் தந்து நுழைந்து, ஆவண நகலை பெற்று கொள்ளலாம்.

கீழ்க்கண்ட வழிமுறைகளை கையாளவேண்டும்:

- மேற்கூறிய வெப்சைட்டிறகுள் "உள்நுழைவு" என்ற இடத்தில், உங்கள் பெயர், பாஸ்வேர்ட், மற்றும் கேப்சிபா கோடு தந்து நுழைய வேண்டும். இதுவே முதல்முறையாக இந்த வெப்சைட்டை பயன்படுத்துகிறீர்கள் என்றால், "பயனர் பதிவு" என்பதை கிளிக் செய்து உள்ளே நுழையவேண்டும்

- இப்போது ஸ்கிரீனில் கேட்கப்பட்டுள்ள விவரங்களை பூர்த்தி செய்து, கணக்கை உருவாக்க வேண்டும். பிறகு உங்கள் செல்போன் நம்பருக்கு வரும் OTP நம்பரை பதிவிட்டால், உங்களுக்கு புது கணக்கு ஓபன் ஆகிவிடும்.

- பின்னர் "மின்னணு சேவை" என்ற ஆப்ஷனை கிளிக் செய்து, "சான்றிக்கப்பட்ட நகல்" என்ற ஆப்ஷனை தேர்வு செய்து கொள்ள வேண்டும்

- "தேடல் மற்றும் சான்றளிக்கப்பட்ட நகல் விண்ணப்பிக்க" என்ற ஆப்ஷனை கிளிக் செய்து, "ஆவணத்தின் வகைப்பாடு" என்ற இடத்தில் "சொத்து சம்பந்தப்பட்ட ஆவணம்" என்ற ஆப்ஷனை தேர்வு செய்ய வேண்டும்

- "ஆவண எண்" என்பதில், உங்களுடைய வில்லங்க சான்றிதழில் உள்ள ஆவண நம்பரையும், "சார் பதிவாளர் அலுவலகம்" என்ற இடத்தில், தாங்கள் எந்த அலுவலகத்தில் பத்திரம் பதிவு செய்தீர்களோ, அந்த அலுவலகத்தினையும், "ஆண்டு" என்ற இடத்தில், எந்த ஆண்டு பத்திரம் பதிவு செய்யப்பட்டதா, அந்த ஆண்டினையும் தேர்வு செய்ய வேண்டும்

- பின்னர் ஸ்கிரீனில் தெரியும் கேப்சா கோடினை, அதிலுள்ளது போலவே, பதிவிட்டு "தேடுக" என்ற ஆப்ஷனை கிளிக் செய்தால், இப்போது தாங்கள் பதிவு செய்த ஆவணங்களின் விவரங்கள் பதிவாகிவிடும்.

- "இணையவழி விண்ணப்பிக்க" என்ற ஆப்ஷனை கிளிக் செய்து, "தனிப்பட்ட விவரங்கள்" என்ற ஆப்ஷனில் உங்களது தனிப்பட்ட விவரங்களை பூர்த்தி செய்து, "சரி" என்ற பட்டனை கிளிக் செய்தால், "கட்டண விவரங்கள்" என்ற பக்கம் ஓபன் ஆகிவிடும். இதில் செலுத்த வேண்டிய கட்டணங்களை செலுத்த வேண்டும்.

- இறுதியாக, வெப்சைட்டின் முகப்பில் "மின்னணு சேவை" என்பதை தேர்வு செய்து, "சான்றளிக்கப்பட்ட நகல்" என்ற ஆப்ஷனை கிளிக் செய்தால், "கோரிக்கை பட்டியல்" என்ற மெனு ஓபன் ஆகும். இதில், உங்களுடைய விண்ணப்பத்தின் எண், பதிவு எண், ஆவணத்தின் வகைப்பாடு, விண்ணப்ப நாள், தொகை செலுத்தப்பட்ட நிலைப்பாடு, கையொப்பட்ட ஆவணம் போன்ற அனைத்து விவரங்களுமே அதில் காணப்படும்.

இதனை நீங்கள் 2 நாள் கழித்து டவுன் லோடு செய்து கொள்ளலாம். "மின்னணு சேவை" என்ற ஆப்ஷனுக்குள் நுழைந்து, "சான்றளிக்கப்பட்ட" மற்றும் "கோரிக்கை பட்டியல்" என்ற ஆப்ஷனை கிளிக் செய்தால், கீழ் பகுதியில் கையொப்பமிட்ட இடத்தில் டவுன்லோடு ஆப்ஷன் இருக்கும். அதை கிளிக் செய்து, உங்களுக்கு தேவையான பத்திர நகல்களை டவுன்லோடு செய்து கொள்ளலாம்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+