இறந்த 7 வயது மகனின் சடலத்துடன் 3 நாள் வசித்த தாய்.. சென்னை திருநின்றவூரில் அதிர்ச்சி
சென்னை: சென்னை திருநின்றவூரில் இறந்த 7 வயது மகனுடன் அவரது தாய் 3 நாட்கள் வசித்து வந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
திருநின்றவூர் சிடிஎச் சாலையில் சரஸ்வதி என்ற ரேவதி வசித்து வருகிறார். ஹோமியோபதி மருத்துவம் பார்த்து வந்ததாக கூறப்படுகிறது. இவரது கணவர் ஜீவானந்தமிடமிருந்து பிரிந்து தனது 7 வயது மகன் சாமுவேலுடன் தனியாக வசித்து வருகிறார்.
இந்த நிலையில் கொரோனா ஊரடங்கு காரணமாக வருமானம் இல்லாததால் தனது மகன் சாமுவேல் பசி, பட்டினியால் இறந்துவிட்டதாக காவல் கட்டுப்பாட்டு அறைக்கு சரஸ்வதி தகவல் அளித்தார்.

காவல் நிலையம்
இதனை அடுத்து சம்பவ இடத்திற்கு சென்ற திருநின்றவூர் காவல் துறையினர் சரஸ்வதி வீட்டிற்கு சென்று சோதனை செய்தனர். அதில் 7 வயது சிறுவன் அழுகிய நிலையில் உயிரிழந்து கிடந்தது கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.

சடலம்
தொடர்ந்து சிறுவனின் தாயிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். சிறுவன் உயிர் இழந்து 3 தினங்களுக்கு மேல் ஆன நிலையில் எந்த தகவலையும் சொல்லாமல் அவரது தாய் சிறுவனின் உடலுடனே வசித்து வந்துள்ளார்.

உயிரிழந்த சிறுவன்
உண்மையில் சிறுவன் பசியால் உயிர் இழந்தானா அல்லது சரஸ்வதியே கொலை செய்துவிட்டு நாடகமாடுகிறாரா என்ற கோணத்தில் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். சிறுவனின் தாய் சற்று மனநலம் பாதிக்கப்பட்டவர் என கூறப்படுகிறது.

தாயின் நடவடிக்கை
இதுகுறித்து தொடர்ந்து விசாரணை நடத்தப்படுகிறது. மேலும் கடந்த 3 தினங்களாக தாயின் நடவடிக்கையில் ஏதேனும் மாற்றம் இருந்ததா என்பது குறித்தும் போலீஸார் அக்கம்பக்கத்தாரிடம் விசாரணை நடத்தி வருகிறார்கள். இறந்த 7 வயது மகனின் சடலத்துடன் 3 நாட்கள் தாய் வசித்து வந்தது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
-
சென்னை மெரினாவிற்கு வரும் ‘ரோப் கார்'.. இனி வானில் பறந்து கொண்டே பீச்சை ரசிக்கலாம்.. குட்நியூஸ் -
விஜய் அதிரடி உத்தரவு.. சென்னை அடையாளம் தெரியாத அளவுக்கு மாறப்போகுது.. 3வது மாஸ்டர் பிளான்! -
சென்னை வாடகைதாரர்கள் கவனத்திற்கு! 2026 புதிய வாடகை சட்டத்தில் மாற போகும் அந்த 5 முக்கிய விதிகள் என்ன -
பொதுப்பணித்துறை டெண்டர்களில்.. இனி முறைகேடு நடக்காது! தமிழ்நாடு அரசு எடுத்த அதிரடி மாற்றம்! -
சென்னை அம்பத்தூரில் பரபரப்பு.. 2 சிறுமிகள் கடத்தப்பட்ட வழக்கில் வாலிபர்கள் இருவர் அதிரடி கைது -
அதிகரிக்கும் பாலியல் வன்கொடுமை! கொஞ்சம் கூட பொறுப்பே இல்லையே! லதா ரஜினிகாந்த் வேதனை! -
சென்னை டாஸ்மாக் கடையில் ‘ஏ.ஐ.’ மேஜிக்! குப்பையாகும் பாட்டில்களை கொடுத்தால் கொட்டும் சில்லறை! -
எழும்பூர் டாஸ்மாக் கடையில் பாட்டிலுக்கு 10 ரூபாய் தரும் இயந்திரம்.. எப்படி வேலை செய்கிறது? -
தவெகவின் வெற்றி தொலைக்காட்சி ஆரம்பம்.. அதிகாரப்பூர்வ அறிவிப்பு.. நாஞ்சில் சம்பத் வாழ்த்து -
300 கோடி சொத்துக்காக நந்தனாவை நடுத்தெருவில் நிறுத்தினாங்களா? பாரதிராஜா குடும்பத்தில் இப்படி சிக்கலா? -
"கலைஞர் டிவி, ஜெயா டிவிக்கு அடுத்ததாக 'வெற்றி டிவி'... ஜூன் 22-ல் லோகோ வெளியீடு? விஜய்யின் அடுத்த மாஸ்டர் மூவ் இதுதானா?" -
விஜய் வெற்றி செல்லாது? திருச்சி கிழக்கு எம்எல்ஏவாக என்னையே அறிவிக்கணும்.. ஹைகோர்ட்டில் இனிகோ மனு












Click it and Unblock the Notifications