சத்யா ஞாபகம் இருக்கா? தாயார் புற்றுநோயால் மரணம்! காலை பிடித்து கதறினாரே.. குடும்பமே சிதைந்து போச்சே!
மாணவி சத்யாவின் தாய் ராமலட்சுமி உயிரிழந்துள்ளார்.
சென்னை : பரங்கிமலை ரயில் நிலையத்தில், இளைஞனால் ரயில் முன் தள்ளிவிடப்பட்டு கொலை செய்யப்பட்ட மாணவி சத்யாவின் தாய் ராமலட்சுமி, புற்றுநோய் பாதிப்பு காரணமாக இன்று உயிரிழந்தார். சத்யாவின் தந்தை மாணிக்கம், மகள் இறந்த துக்கம் தாளாமல் விஷம் அருந்தி தற்கொலை செய்துகொண்டது குறிப்பிடத்தக்கது.
ஆதம்பாக்கம் பகுதியைச் சேர்ந்த சதீஷ் என்ற இளைஞர், சத்யா தன்னுடன் பேச மறுத்ததால், ஓடும் மின்சார ரயில் முன்பு சத்யாவைத் தள்ளிவிட்டு கொலை செய்தார். மகள் இறந்த சோகம் தாங்க முடியாமல் சத்யாவின் தந்தை மாணிக்கம் விஷம் அருந்தி தற்கொலை செய்து கொண்டார்.
அடுத்தடுத்து இரண்டு பேரை பறிகொடுத்த குடும்பம் வேதனையில் துடித்தது. இந்நிலையில் சத்யாவின் தாயார் ராமலட்சுமியும் மரணமடைந்துள்ளார்.

பரங்கிமலை அதிர்ச்சி சம்பவம்
சென்னை ஆலந்தூர் காவலர் குடியிருப்பில் வசித்து வந்தவர் தலைமைக் காவலர் ராமலட்சுமி. இவரது மூத்த மகள் சத்யா, கடந்த அக்டோபர் மாதம் பரங்கிமலை ரயில் நிலையத்தில் இருந்து கல்லூரிக்கு ரயிலில் ஏறிச்செல்ல முயன்றபோது, அருகில் நின்று கொண்டிருந்த அவரது நண்பர் சதீஷ் என்ற இளைஞர், திடீரென சத்யாவை ரயில் முன் தள்ளிவிட்டதில் அவர் பரிதாபமாக உயிரிழந்தார். சதீஷ், தன்னை சத்யா காதலிக்க மறுத்ததால் 'எனக்கு கிடைக்காத சத்யா வேறு யாரையும் திருமணம் செய்து கொண்டு சந்தோஷமாக வாழக்கூடாது' என்ற எண்ணத்தில் ரயிலில் தள்ளிவிட்டது விசாரணையில் தெரியவந்தது.

ஒருதலைக்காதல்
சென்னை பரங்கிமலை ரயில் நிலையத்தில், இளைஞன் ஒருதலைக்காதலால், ஓடும் ரயில் முன்பாக மாணவி சத்யாவை தள்ளிவிட்டு கொலை செய்த சம்பவம் தமிழ்நாடு முழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது. இச்சம்பவம் தொடர்பான வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டது. பரங்கிமலை ரயில் நிலையத்தில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி காட்சிப் பதிவுகளை கைப்பற்றிய சிபிசிஐடி போலீசார், மாணவி சத்யாவை கொலை செய்த சதீஷை கைது செய்தனர்.

தந்தை மகள் உடல்கள்
தனது மகள் இறந்த துக்கம் தாளாமல், சத்யாவின் தந்தை மாணிக்கம், விஷம் கலந்து குடித்து தற்கொலை செய்துகொண்டார். சத்யாவின் தாய் ராமலட்சுமி தனது மற்ற 2 மகள்களுடன் சேர்ந்து, தனது கணவர் மாணிக்கம் மற்றும் மகள் சத்யா ஆகியோரின் உடல்களுக்கு இறுதிச் சடங்கு செய்தார். தந்தை, மகள் உடல்கள் ஒன்றன்பின் ஒன்றாக தகனம் செய்யப்பட்டது அனைவருக்கும் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.

ராமலட்சுமி உயிரிழப்பு
இந்நிலையில், புற்றுநோயால் பாதிக்கப்பட்டிருந்த சத்யாவின் தாய் ராமலட்சுமி சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். பரங்கிமலை காவல் நிலையத்தில் தலைமைக் காவலராகப் பணிபுரிந்து வந்த ராமலட்சுமி, நீண்ட நாட்களாக தனது மகளின் இழப்பை தாங்க முடியாமல் இருந்துள்ளார். தொடர்ந்து, புற்றுநோய்க்கு சிகிச்சை பெற்று வந்த நிலையில் ராமலட்சுமி இன்று உயிரிழந்தார்.

சிதைந்த குடும்பம்
மாணவி சத்யா இல்லத்திற்கு சென்னை மாநகர காவல் ஆணையர் சங்கர் ஜிவால் நேரில் சென்று ஆறுதல் கூறச் சென்றபோது, ராமலட்சுமி சங்கர் ஜிவாலின் காலை பிடித்துக்கொண்டு கதறி அழுத காட்சி அப்போது அனைவரையும் கலங்கச் செய்தது. இந்நிலையில், கணவர் மற்றும் மகளின் இறப்பால் தவித்து வந்த ராமலட்சுமியும் இன்று மரணமடைந்துள்ளார். இளைஞனின் வெறிக்கு ஒரு குடும்பமே சிதைந்து போயுள்ளது.
-
தஞ்சையில் கள்ளக்காதல்.. நள்ளிரவில் புருஷன்- சொந்த அக்காவை தீயில் கொளுத்திய அமுதா -
முதல்வர் விஜய் தொகுதியில் சூட்கேஸுக்குள் தலையில்லாத ஆண் சடலம்.. பெரம்பூர் ரயில் நிலையத்தில் ஷாக்! -
காதல் திருமணம் செய்துக்கொண்ட மகள்! பெட்ரோல் குண்டு வீசிய பாசக்கார தந்தை! நெல்லையில் ஷாக்! -
AirTrunk: 3 லட்சம் கோடி மெகா முதலீடு.. சென்னை அம்பத்தூரில் ரூ.10,000 கோடியில் அஸ்திவாரம்! -
சென்னையில் மழை வெளுக்கப்போகுது.. மொத்தமா 9 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை! அடுத்த 2 மணி நேரம் உஷார் -
சென்னை உட்பட.. 26 மாவட்டங்களை லிஸ்ட் போட்ட வானிலை மையம்! ஆட்டம் ஆரம்பம்! கனமழை வெளுக்கப்போகுது! -
காலையில் கஞ்சா பால்.. இட்லிக்கு கஞ்சா சட்னி.. பெட் ரூம் முழுக்க 70 கஞ்சா செடிகள்.. மிரண்ட போலீஸ் -
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம் -
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா












Click it and Unblock the Notifications