அம்மா மட்டுமில்லை.. மகளையும்.. கள்ளக்காதலும், கர்ப்பமும்.. கலங்கிப்போன திருவள்ளூர்!
சென்னை: ஒரு நடுத்தர வயது பெண்ணின் கள்ளக் காதலும், அதனால் அவரது மகளின் வாழ்க்கையும் எப்படி அழிந்தது என்பதை பார்த்து கலங்கிப்போயுள்ளது திருவள்ளூர்.
திருவள்ளூர் மாவட்டம், ஊத்துக்கோட்டை தாலுகா, தேவாந்தவாக்கம் கிராமத்தைச் சேர்ந்தவர் சர்ஜன்ராஜ் (50). இவர் ஸ்ரீபெரும்புதூரில் உள்ள தனியார் கம்பெனி பஸ் டிரைவராக பணியாற்றி வந்தார்.
அதே பேருந்தில் ஸ்ரீபெரும்புதூர் அடுத்த விபிஆர் சத்திரத்தை சேர்ந்த குப்புசாமி (45) என்பவர் கிளீனராக பணியாற்றி வந்துள்ளார்.

கிளீனர் மனைவியுடன் டிரைவருக்கு கள்ளக் காதல்
குப்புசாமிக்கு கோமதி (40) என்ற மனைவி உள்ளார். ஒரே பஸ்ஸில் இரண்டு பேரும் பணியாற்றி வந்ததால் நண்பர்களாக பழகி வந்தனர். அதன்பேரில் சரன்ராஜ் அடிக்கடி குப்புசாமி வீட்டிற்கு சென்று வந்துள்ளார். அப்பொது குப்புசாமியின் மனைவி கோமதிக்கும் சர்ஜன்ராஜுக்கும் தொடர்பு ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து குப்புசாமிக்கு தெரியவரவே சர்ஜன்ராஜுக்கும், குப்புசாமிக்கும் தகராறு ஏற்பட்டுள்ளது.

ஓட்டம் பிடித்த கள்ளக்காதலர்கள்
இதனைத் தொடர்ந்து, இடையூறு இல்லாமல் கள்ளக் காதல் செய்வதற்காக, சர்ஜன்ராஜ், கோமதி இருவரும் வீட்டைவிட்டு வெளியேற முடிவு செய்தனர். கோமதி தனது மகனை மட்டும் அவரது கணவர் குப்புசாமி வீட்டில் விட்டுவிட்டு 13 வயதுடைய மகளை அழைத்துக் கொண்டு சர்ஜன்ராஜுடன் ஓடிவிட்டார். பிறகு அவர்கள் திருவள்ளூர் பெரியகுப்பத்தில் ஒரு வீட்டை வாடகைக்கு எடுத்து வசித்து வந்தனர்.

கள்ளக்காதலனுடன் ஒரே வீட்டில்
கோமதி தனது மகளை திருவள்ளூரில் உள்ள ஒரு பள்ளியில் படிப்பதற்காக 8 ஆம் வகுப்பு சேர்த்திருந்தார். இந்த நிலையில் சர்ஜன்ராஜ் கடந்த வருடம் கொரோனோ ஊரடங்கின் போது கோமதி வீட்டில் இல்லாதபோது அவரது மகளை மிரட்டி பலாத்காரத்தில் ஈடுபட்டுள்ளார். கோமதி வேலைக்கு சென்ற போதெல்லாம் மீண்டும் மீண்டும் கோமதியின் மகளை சர்ஜன்ராஜ் மிரட்டி பலாத்காரம் செய்து வந்துள்ளார்.

7 மாத கர்ப்பம்
பலாத்கார கொடுமையால் உடலில் வலி ஏற்படத் தொடங்கியுள்ளது சிறுமிக்கு. உடல் வலி, வயிறு வலி பற்றி அவரது தாய் கோமதியிடம் சிறுமி கூறியுள்ளார். அவரை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று பரிசோதனை செய்துள்ளார் கோமதி. அப்பொழுது பரிசோதனை செய்த மருத்துவர் சிறுமி 7 மாதம், கர்ப்பமாக இருப்பதாக தெரிவித்துள்ளார்.

வெளியான உண்மை
இதனால் பதறிப்போனார் கோமதி. நாம்தான் இந்த வயதில் கெட்டுப்போய் அலைகிறோம், மகள் இந்த சின்ன வயசிலேயே எப்படி கெட்டுப்போனார் என்று இடிந்து போயுள்ளார். இதுகுறித்து கோமதி அவரது மகளிடம் துருவி துருவி கேட்டுள்ளார். அப்போது சர்ஜன்ராஜ் தான் தன்னை அடிக்கடி மிரட்டி பலாத்காரம் செய்ததாக கூறியுள்ளார் மகள்.

குழந்தை பிறந்தது
இதனால் அதிர்ச்சியடைந்த கோமதி திருவள்ளூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார். போலீசில் புகார் கொடுத்தது தெரியவந்ததும் சர்ஜன்ராஜ் தலைமறைவாக இருந்து வந்தார். வழக்குப்பதிவு செய்து சர்ஜன்ராஜை போலீசார் தீவிரமாக தேடி வந்தனர். இந்த சூழ்நிலையில் அவர் செல்போன் எண் மூலம் திருவண்ணாமலையில் தலைமறைவாக இருந்து வருவது தெரியவந்தது. அதன்பேரில் திருவள்ளூர் அனைத்து மகளிர் காவல் துறையினர் சர்ஜன்ராஜை கைது செய்து திருவள்ளூர் கொண்டுவந்து கோர்ட்டில் ஆஜர்படுத்தி போஸ்கோ சட்டத்தின்கீழ் புழல் மத்திய சிறையில் அடைத்தனர். இதனிடையே அந்த சிறுமிக்கு குழந்தை பிறந்ததுள்ளது. அந்த குழந்தை காப்பகத்தில் வைத்து பாதுகாக்கப்பட்டு வருகிறது.
-
தமிழக அரசால் ஆண்டுக்கு 20 ஆயிரம் கோடி வருவாய் ஈட்ட வாய்ப்பு உள்ள துறைகள்.. விவரம் -
பதவியே வேண்டாம்.. தீயணைப்பு ஆணைய தலைவர் பொறுப்பை ராஜினாமா செய்த மாஜி டிஜிபி சங்கர் ஜிவால்! -
உதயமாகும் "தமிழ்நாடு கரப்பான் பூச்சி ஜனதா கட்சி.." தேர்தல் ஆணையத்தில் பதிவு செய்ய விண்ணப்பம்! -
வாடகை வீட்டில்.. பழுதுபார்ப்பு செலவு யாருடைய பொறுப்பு? தெரிந்துக்கொள்ள வேண்டிய விஷயம்! -
பொதுப்பணித்துறை டெண்டர்களில்.. இனி முறைகேடு நடக்காது! தமிழ்நாடு அரசு எடுத்த அதிரடி மாற்றம்! -
முதியோர் சமூகமாக மாறும் தமிழ்நாடு.. இளைஞர்கள் எண்ணிக்கை சரிவு.. பெரிய சிக்கல்! வெள்ளை அறிக்கை லிஸ்ட் -
பெண்கள் வாழ தகுதியற்ற தமிழ்நாடு..? நாங்க என்ன தப்பு செய்தோம்..? அறந்தாங்கி நிஷா ஆதங்கம் -
நடுக்கடலில் உயிரிழந்த தமிழக மாலுமி.. 3 நாட்களுக்கு பிறகு ஒரு வழியாக மீட்கப்பட்ட உடல்! என்ன நடந்தது? -
ரூ.13 லட்சம் கோடி கடன்! “திமுகதான் பதில் சொல்ல வேண்டும்!” டோனை மாற்றிய திருமாவளவன் -
தமிழ்நாட்டு தலைக்கு மேல் கத்தி.. ஏடாகூடமான எல் நினோ! கொஞ்சம் பிசகினாலும் போச்சு! பறந்த வார்னிங்! -
தமிழக நிதிநிலை கவலைக்கிடம்?.. கடன் வளர்ச்சி 14.3%.. வெள்ளை அறிக்கை தகவல் -
சுழல்கள் நிறைந்த சாலக்குடி ஆற்றின் பாறை இடுக்கில் சிக்கிய தமிழக இளைஞர்! கயிறு கட்டி மீட்ட ராணுவ வீரர்!












Click it and Unblock the Notifications