நடிகை சீதா "மாட்டிக்கிட்டாராம்" அப்பா கிட்ட.. அதுவிடுங்க.. "சுயமரியாதை" பற்றி சீதா வார்த்தை.. அருமை
சென்னை: பெண்களுக்கு சுயமரியாதை மிகவும் என்றும், பெண்கள் தங்கள் சொந்தக்காலில் நிற்க வேண்டும் என்றும் நடிகை சீதா கருத்து சொல்லி உள்ளார்.
ஆண்பாவம், உன்னால் முடியும் தம்பி, வெற்றிமேல் வெற்றி, மருதுபாண்டி, ஆதி, வியாபாரி உள்ளிட்ட பல்வேறு படங்களில் நடித்தவர் நடிகை சீதா. தனக்கென ஒரு ரசிகர் பட்டாளத்தை, மிக குறுகிய நாட்களிலேயே பெற்றவர். கடின உழைப்பால், உயர்ந்தவர்.
பிரபல நடிகர்: இவர் இயக்குநரும் நடிகருமான பார்த்திபனை திருமணம் செய்து பிறகு, விவாகரத்து பெற்றுவிட்டார்.. மீண்டும் பார்த்திபனுடன் சேர்ந்து வாழலாம் என்ற எண்ணம் தென்பட்டதாகவும், ஆனால், "நீ போனது போனபடியே இருக்கட்டும்" என்று பார்த்திபன் சொன்னதாகவும் செய்திகள் மீடியாக்களில் கசிந்தன.

இப்போது வரை இருவருமே தனித்தனியாக வாழ்ந்து வந்தாலும், அவரவர் துறைகளில், முத்திரைகளை பதித்து கொண்டிருக்கிறார்கள். சிலசமயம் இவர்கள் தனித்தனியாக தரும் பேட்டிகளிலும்கூட, ஒருவர் மீது ஒருவர், மதிப்பையும், மரியாதையையும், அன்பையும் வெளிப்படுத்தியே பேசி வருகிறார்கள்.. மற்றபடி, விமர்சித்து கொள்வதோ, குற்றஞ்சாட்டுதோ கிடையாது.. இவர்களின் இந்த நாகரீக போக்கையும் தமிழக ரசிகர்கள் கவனித்தபடியே உள்ளனர்.
இந்நிலையில், ஒரு சேனலுக்கு சீதா பேட்டி தந்திருக்கிறார்... அதிலும், பார்த்திபன் மீதான மதிப்பை வெளிப்படுத்தியிருந்தார். சீதா சொல்லும்போது, "பார்த்திபன் மீதான காதல் என்னுள் முன்பேயே இருந்திருக்கிறது. அதை இல்லையென்று சொல்லிவிட முடியாது.. தினமும் போன் செய்து, அந்த 3 வார்த்தையை உடனே சொல்லிடு என்று கேட்டுக்கிட்டே இருப்பார்..
3 வார்த்தை: அதுக்கப்பறம் ஒருநாள், நான் போனில் பேசிக்கொண்டிருந்தபோது, அந்த 3 வார்த்தையை "ஐ லவ் யூ" என்று சொன்னேன்.. ஆனால், எனக்கு ஒரு லக் இருக்கிறது.. ஏதாவது ஒரு ஒரு தப்பு செய்ய வேண்டும் என்று என் மனசுக்குள்ளே நினைத்தாலே போதும், நான் எக்கச்சக்கமாக மாட்டிப்பேன்.. என் ராசியே அப்படித்தான் போல..
அன்னைக்கு முதல்முறையா ஐ லவ் யூ என்று போனில் சொல்கிறேன், அதை என் அப்பா கேட்டுட்டாரு.. முன்பெல்லாம் வீடுகளில் இன்டர்காம் இருக்குமே, அதுபோலத்தான், என் வீட்டிலும் இன்டர்காம் போன் இருந்தது.. கரெக்ட்டா நான் ஐ லவ்யூ-ன்னு சொல்லும்போது கேட்டுட்டார்.. முதல்நாள் ஐ லவ் யூ சொன்னதுமே, சண்டை ஆரம்பித்துவிட்டது.

சராசரி எதிர்பார்ப்பு: "சராசரியான பொண்ணு நான்.. உலகமே தெரியாத மிடில் கிளாஸ் பொண்ணு நான்.. அவரும் இதே நிலைமைதான்.. பணமோ, ஆஸ்தியோ, அந்தஸ்தோ இதெல்லாம் எதிர்பார்த்து போககூடிய நபராக அவரும் கிடையாது. நான் எதிர்பார்த்தது ஒரு சாதாரண எதிர்பார்ப்புதான்..
சுகாசினி ஒரு படத்தில் பாடுவாங்களே, "என் புருஷன்தான் எனக்கு மட்டும்தான்".. அந்த மாதிரி டைப்தான் நான்.. கணவன்கிட்ட அன்பு கிடைக்கணும் என்று எதிர்பார்ப்பு இருந்தது. " என்றார் சீதா.
சீதா நச்: இதற்கு பிறகு, திரைத்துறையில் பெண்களுக்கு ஏற்படும் பிரச்சனைகள் குறித்த கேள்விக்கு சீதா பதில் சொல்லியிருந்தார்.. அதில் நிறைய விஷயங்களை பேசினாலும், பெண்களுக்கான சுயமரியாதை குறித்தும், சில தகவல்களை கூறியுள்ளார்.. சீதான சொன்ன தகவலின் சுருக்கம் இதுதான்:
"சினிமாவில் மட்டுமல்ல.. பெண்களுக்கு எல்லா இடங்களிலும்தான் பிரச்சனை இருக்கிறது.. சினிமாவில் நடப்பதால், அதெல்லாம் உடனே வெளியே தெரிந்துவிடுகிறது.. சினிமாவை தவிர மற்ற இடங்களிலும் பெண்களுக்கு பிரச்சனைகள் இருக்கவே செய்கின்றன.. உதாரணமாக ஐடி பெண்களுக்கும் பிரச்சனை இருக்கிறதே.. எனவே, ஏதாவது ஒரு துறையில் பெண்கள் நிலைத்து நிற்க வேண்டும்.. சொந்தக்காலில் நிற்க வேண்டும்.. அதற்கு பிறகு தனக்கான சுயமரியாதையை காப்பாற்றி கொள்ள வேண்டும்.

சுயமரியாதை: கணவன்கள், மனைவிகளையும், அவர்களின் கருத்துக்களையும் மதிக்கணும்.. அப்படியிருந்தால், குடும்பங்களில் தம்பதிக்குள் பிரச்சனையே வராது.. அதேபோல எந்த துறைகளிலுமே பிரச்சனைகளும் வராது.. எல்லாத்தையும் விட்டுட்டு போய் கல்யாணம் செய்யணும்னு அவசியமில்லை.. தனக்குன்னு ஒன்றை வைத்து கொள்ள வேண்டும்..
துறைரீதியாக பெண்கள் காலூன்றி வரவேண்டும்.. காலையில் இருந்து சாயங்காலம்வரை, கணவனுக்காக வீட்டில் காத்துக் கொண்டிருப்பதைவிட, காலையில் இருந்து சாயங்காலம் வரை வேலைக்கு சென்றுவந்தால்தான் கணவர்மார்களே மதிப்பு தருவார்கள்.. இது நான் பார்த்த விஷயம்.. அதனால் பெண்கள் சுயமாக தங்கள் சொந்த காலில் நிற்க வேண்டும்" என்றார். பெண்களுக்கு உத்வேகம் தரும் சீதாவின் இந்த பேச்சு இணையத்தில் வைரலாகி கொண்டிருக்கிறது.
-
டோட்டலாக தனிமைப்படுத்தப்பட்ட திமுக! உச்சக்கட்ட ஹேப்பியில் பாஜக.. தவெக விஜய் அரசுக்கு சிக்கலா? -
மோடி, நிர்மலா சீதாராமன் சந்திப்பின்போது.. கூடவே போன ஜோசியர்! சலசலப்பை கிளப்பிய விஜய்! -
97 ரன்களில் அவுட்.. ஒட்டுமொத்த மைதானமும் சோகம்.. உலக சாதனையை தவறவிட்ட வைபவ் சூர்யவன்ஷி! -
முதல்வர் விஜய்யை சந்திக்க நேரம் ஒதுக்காத அமித் ஷா.. என்ன நடந்தது? -
பிரதமர் மோடிக்கு நன்றி சொன்ன முதல்வர் விஜய்.. அதைவிட முக்கியம் 4 மேஜர் கோரிக்கைகள் -
"ஆர்.எஸ்.எஸ் பேரப்பிள்ளையாக மாறிய விசிக".. திருமா மீது பொன்.ராதாகிருஷ்ணன் கடும் தாக்கு! -
நிர்மலா சீதாராமனும் விஜய் கிட்ட அதையே சொல்வாரோ? 118 மேஜிக் நம்பர்.. தவெகவை அசைக்க முடியாத பின்னணி? -
ஒரே சீசனில் 61 சிக்ஸ்.. கெய்ல் சாதனையை 15 வயது சிறுவன் முடிச்சிட்டான்! தெறிக்கவிட்ட வைபவ் சூர்யவன்ஷி -
குதிரை பேரமா? எடப்பாடி பழனிசாமிதான் அதை செய்தார்! ஒரே போடாக போட்ட அமைச்சர் அருண்ராஜ் -
தமிழக அரசின் அதிரடி அறிவிப்பு! நுகர்வோருக்கு வந்த புதிய வசதி.. வெளியானது முக்கிய அப்டேட் -
“போலீஸ் என்றால் சிரிக்க கூடாதா? இதில் என்ன பிரச்சனை?” அமைச்சர் வன்னி அரசு சரமாரி கேள்வி! -
ரயிலில் உங்க சீட்டில் வேறு யாரேனும் இருந்தால் ரூ.20,000 இழப்பீடு? இந்த உத்தரவு பற்றி தெரியுமா












Click it and Unblock the Notifications