Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

டாஸ்மாக் பக்கமே வர தயங்கும் வாகன ஓட்டிகள்.. பார் உரிமையாளர்கள் பரிதவிப்பு.. போலீஸ் செய்த மேஜிக்

Subscribe to Oneindia Tamil

சென்னை: சென்னையில் போக்குவரத்து போலீசார் தினமும் வாகன சோதனையை தீவிரமாக்கி உள்ளனர். இதனால் இரவு நேரங்களில் மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டி சிக்கினால் 10000 ரூபாய் அபராதத்தை கண்டிப்புடன் விதிக்கிறார்கள்.போலீசார் தீவிரம் காட்டத் தொடங்கியதால் பல வாகன ஓட்டிகள் பார்களுக்கு போவதையே நிறுத்திவிட்டார்கள். இதனால், போதிய வியாபாராம் இல்லாமல் பார் உரிமையாளர்கள் தவித்து போயிருக்கிறார்கள்.

தமிழ்நாட்டில் சுமார் 4,300 டாஸ்மாக் மதுக்கடைகள் செயல்படுகின்றன. இதுதவிர தமிழ்நாட்டில் மனமகிழ் மன்றங்கள் 1,480 என்கிற அளவில் செயல்படுகிறது. இதுபோன தனியார் பார்கள், ஓட்டல்கள், பப்கள் செயல்படுகின்றன. மொத்தம் உள்ள 4300 டாஸ்மாக் கடைகளில் 3 ஆயிரம் கடைகளுக்கு அருகிலேயே மது அருந்தி செல்வதற்கான பார் வசதிகள் உள்ளன. இந்த பார்களை தனியார்கள் மற்றும் அரசியல் கட்சி பிரமுகர்கள் குத்தகைக்கு எடுத்து நடத்தி வருகிறார்கள்.

Chennai tasmac traffic police

இந்நிலையில் கொரோனா காலத்துக்கு பிறகு மதுபான விற்பனை கணிசமாக சரிந்துவிட்டதாக கூறப்படுகிறது. பலர் கஞ்சா உள்ளிட்ட போதை பொருட்களில் அதிக ஆர்வம் காட்ட தொடங்கியதே இதற்கு காரணம் என்று கூறப்படுகிறது. அதேநேரம் மதுபிரியர்கள் பலர் டாஸ்மாக் கடைக்கு வருவது தொடர்ந்துகொண்டு தான் இருந்தனர். இதனால் தமிழ்நாட்டில் கலால் வரி மூலம் அரசுக்கு வரி வருவாய் கடந்த 10 வருடங்களில் கற்பனைக்கும் எட்டாத அளவிற்கு வளர்ந்துள்ளது. ஒரு காலத்தில் 20000 கோடியாக இருந்த மதுவால் வரும் லாபம் இப்போது 44 ஆயிரம் கோடியை தாண்டிவிட்டது. வரும் 2024-25ம் நிதியாண்டில் 50000 கோடியாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இப்படியான கணிப்புகள் உள்ள நிலையில், கணிப்புகளை பொய்யாக்கும் வகையில் அண்மைக்காலங்களில் மதுவிற்பனை வெகுவாக சரிந்துவிட்டது. பல டாஸ்மாக் கடைகளில் முன்பு போல் வியாபாரம் இல்லை என்று சொல்லப்படுகிறது. சென்னையை பொறுத்தவரை பல பகுதிகளில் டாஸ்மாக் கடைகளில் மதுவிற்பனை கணிசமாக குறைந்துவிட்டதாக தகவல்கள் வெளியாகி உள்ளது

இது ஒரு புறம் எனில், மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டினால் ரூ,10 ஆயிரம் அபராதம் விதிக்கப்படுகிறது. இந்த விதிமீறலில் ஈடுபடுவோரை பிடிக்க சென்னை போக்குவரத்து போலீசார் சோதனையை தீவிரப்படுத்தி உள்ளனர். எப்போதுமே சோதனை செய்வார்கள் என்றாலும், கடந்த சில மாதங்களில் மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டுவதால் விபத்துகள் அதிகம் நடக்கிறது என்பதால், சோதனையை கடுமையாக்கி உள்ளனர்.

10 ஆயிரம் ரூபாய் அபராதம் என்ற விதிமுறையின் மது அருந்துவோரை பிடிப்பதற்காக சாலை ஓரத்தில் ஆங்காங்கே ரகசியமாக நிற்கிறார்கள். முன்னால் சோதனையும் நடத்தப்படுகிறது. பின்னால் தப்பி ஓட முயன்றால், ஏற்கனவே மறைந்து நிற்கும் போலீசார் அவர்களை மடக்கிவிடுகிறார்கள். இதனால் பல மதுப்பிரியர்கள் வசமாக சிக்கி கொள்கிறார்கள். உடனே வாகனத்தை நிறுத்தி மது பரிசோதனைக்காக வைத்திருக்கும் கருவியில் சிறு குழாயை பொருத்தி ஊதச் சொல்கிறார்கள். மது அருந்தி இருப்பது உறுதி செய்யப்பட்டால் உடனடியாக ரூ,10 ஆயிரம் அபராதம் விதிக்கப்படுகிறது.

சென்னையில் அண்மைக்காலங்களில் அதிரடி நடவடிக்கையில் பலர் சிக்கி வருகிறார்கள். சென்னையில் மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டவே முடியாது என்கிற அளவில் சோதனை அதிகமாகி உள்ளது. வார இறுதி என்று இல்லை.. எல்லா நாட்களிலுமே இப்போது சோதனை தீவிரமாகி உள்ளது. இதனால் பார்களில் போய் மது அருந்துவிட்டு வீடு திரும்பியவர்கள், பார்களுக்குள் போகவே தயங்குகிறார்களாம். இதனால் மது விற்பனை முன்பு போல் இல்லாமல் குறைந்து போனதாம்..

இதனால் டாஸ்மாக் கடைகளில் பார் நடத்தி வருவோர் கவலை அடைந்துள்ளனர். இதுகுறித்து, தமிழ்நாடு பார் உரிமையாளர்கள் சங்கத் தலைவர் என்.அன்பரசன் கூறும் போது, டாஸ்மாக் கடைகளில் மது விற்பனைக்கு ஏற்ப எங்களிடம் இருந்து மாதந்தோறும் உரிமத்தொகை அரசால் வசூலிக்கப்படுகிறது. அதாவது, மாநகராட்சி பகுதியில் உள்ள டாஸ்மாக் கடை ஒன்றில், அந்த மாதம் எவ்வளவு மது விற்பனை செய்யப்பட்டு உள்ளதோ, அதில் 1.80 சதவீத தொகை அருகில் உள்ள பாரில் உரிமத்தொகையாக அரசால் வசூலிக்கப்படுகிறது. இதே தொகை பேரூராட்சி பகுதிகளில் 1.60 சதவீதம், ஊராட்சி பகுதிகளில் 1.40 சதவீதம் என்கிற அளவில் உள்ளது. இப்படி நாங்கள் மாதந்தோறும் ரூ,50 ஆயிரம் முதல் ரூ,5 லட்சம் வரை உரிமத் தொகை கட்டித்தான் பார்களை நடத்தி வருகிறோம்.

ஆனால், மது அருந்தி விட்டு வாகனம் ஓட்டினால், ரூ,10 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட தொடங்கிய பிறகு, பெரும்பாலானோர் பாரில் வந்து மது அருந்துவதை நிறுத்திவட்டனர். சிலர் கையில் வாங்கிச்சென்று வீட்டில் போய் குடிக்கிறார்கள். இதனால், பார் வைத்திருப்பவர்கள் பாதிக்கப்பட்டுள்ளார்கள். ஒரு டாஸ்மாக் கடையில் இருந்து மது பாட்டில் விற்பனை செய்யப்பட்டாலே, அதற்கு கட்ட வேண்டிய உரிமத் தொகை எங்கள் தலையில் விழுவதால் வருமானம் பெரிதும் பாதிக்கப்பட்டிருக்கிறது. இந்த விவகாரத்தில் அரசு உடனடியாக தலையிட்டு தீர்வுகாண வேண்டும். கடுமையாக்கப்பட்டுள்ள போக்குவரத்து விதிகளையும் தளர்த்த வேண்டும் என்றார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+