கொரோனாவும் காலநிலை மாற்றமும்.. எம்பி அன்புமணி விடுக்கும் எச்சரிக்கை.. விழிப்புணர்வு வீடியோ!
சென்னை: கொரோனாவும் காலநிலை மாற்றமும் என்ற தலைப்பில் காலநிலை மாற்றம் மற்றும் அதன் பாதிப்பு குறித்து பாமக எம்பி டாக்டர் அன்புமணி ராமதாஸ் வீடியோ தெரிவித்துள்ளார்.
இந்தியா முழுக்க கொரோனா தீவிரமாக பரவி வருகிறது. தமிழகத்தில் இன்று மட்டும் 1515 பேருக்கு கொரோனா ஏற்பட்டுள்ளது. மொத்தமாக 31,687 பேர் தமிழகத்தில் பாதிக்கப்ட்டுள்ளனர்.
கொரோனா பரவ தொடங்கிய காலத்தில் இருந்து அது தொடார்பாக எச்சரிக்கை விடுத்து வந்தவர்தான் பாமக எம்பி டாக்டர் அன்புமணி ராமதாஸ். தற்போது இவர் கொரோனாவும் காலநிலை மாற்றமும் என்ற தலைப்பில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.

கொரோனா எப்படி
கொரோனா காரணமாக மக்கள் பல வழிகளில் பாதிக்கப்பட்டு இருக்கிறார்கள். லட்சக்கணக்கில் மக்கள் இதனால் பலியாகி உள்ளனர். விரைவில் நாம் இதில் இருந்து மீண்டு வருவோம். கொரோனா வருவதற்கு காலநிலை மாற்றமும் ஒரு காரணம். காலநிலை மாற்றம் காரணமாக இந்த கொரோனா வைரஸ் மரபணு மாற்றம் அடைந்துள்ளது. இது மீண்டும் வர வாய்ப்புள்ளது என்று கூறுகிறார்கள்.

வைரஸ்கள்
கால நிலை மாற்றம் காரணமாக இன்னும் பல வைரஸ்கள் நம்மை தாக்க வாய்ப்புள்ளது. உலக சுகாதார மையம் இது தொடர்பாக நமக்கு எச்சரிக்கை விடுத்தது. நாம் கேட்கவில்லை. நமக்கு இப்போது இயற்கையே எச்சரிக்கை விடுத்துள்ளது. இனியாவது நாம் காலநிலை மாற்றம் குறித்து கவனம் செலுத்த வேண்டும். எல்லோரும் தெளிவாக சொல்லி உள்ளனர். பூமியின் வெப்பநிலை அதிகரித்து வருகிறது.

என்ன பிரச்சனை
இதனால் நமக்கு பல பிரச்சனைகள் ஏற்படும். 14 டிகிரி சென்டிகிரேட் என்று இருந்த வெப்பநிலை தற்போது அதிகரித்துள்ளது. பல ஆயிரம் ஆண்டுகளாக குறைவாக இருந்த வெப்பநிலை தற்போது உயர்ந்து இருக்கிறது. தொழிற்புரட்சி அதிகபடியான எரிபொருள் பயன்பாடுதான் இதற்கு காரணம் ஆகும். ஆண்டுக்கு ஆண்டு இதனால் வெப்பநிலை அதிகமாகிக் கொண்டே இருக்கிறது.

அதிக வெப்பநிலை
உலகத்தில் இதனால் பெரிய புயல்கள் வெள்ளங்கள் வருகிறது. காட்டுத்தீ வருகிறது. வெப்பமயமாதலை தடுக்கவில்லை என்றால் நாம் பெரிய பிரச்சனைகளை சந்திக்க நேரிடும். இதை நாம் இப்போதே தடுக்க போதுமான செயல்களை செய்ய வேண்டும். நாம் மட்டுமின்றி பூமியும் இதனால் பாதிக்கும். உலகில் இதே நிலை தொடர்ந்தால் நாம் மோசமான விளைவுகளை சந்திப்போம் என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும் என்று எம்பி அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
-
கூட்டுறவு வங்கி நகைக்கடன் வாங்கியோருக்கு குட் நியூஸ்! பணம் கட்டலயா? ஏலத்திலிருந்து நகை மீட்க ஈஸி வழி -
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம் -
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
"முதலமைச்சருக்கு நன்றி.. ஆனால்! எதிரியின் எதிரி நண்பனா? விஜய் ரசிகர்கள் குறித்து பேசிய அஜித் சகோதரர் -
வீரமணி ஒரே போடு.. திருச்சியில் முதலமைச்சர் விஜய் பேசிய அந்த பேச்சால் மொத்த பேருக்கும் முகச்சுளிப்பு? -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம் -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
கோவையில் அருவியாக மாறிய மேம்பாலம் .. மேட்டுப்பாளையம் ஊட்டி செல்லும் வழியில் மாறிய காட்சி -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
அரசியல் மோதலை விடுங்க.. 'கலைஞர்' கருணாநிதி பிறந்தநாளுக்கு முதல்வர் விஜய் போட்ட பதிவு!












Click it and Unblock the Notifications