குமரியார் பெண் என் மகள் போல.. வாழ்த்தினார் கலைஞர்.. நானும் வாழ்த்துகிறேன்.. கனிமொழி பலே!
கனிமொழி எம்பி தமிழிசை சவுந்தராஜனுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.
Recommended Video

சென்னை: "குமரியார் மகள் என் மகள் போல.. எப்பவுமே அவர் நல்லா இருக்கணும் என்று வாழ்த்தியவர் கலைஞர்.. அதுபோல தமிழிசைக்கு என் வாழ்த்துக்கள் என்றும் உண்டு" என்று கனிமொழி எம்பி மனசார தெரிவித்துள்ளார்.
மறைந்த திமுக தலைவர் மீது தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தராஜனுக்கு எப்போதுமே பிரியம். அதுபோலவே, கருணாநிதிக்கும் தமிழிசை மீது தனிப்பட்ட பாசம் உண்டு.
இத்தனை வருட காலம் மாநில பாஜக தலைவராக இருந்தபோதும், யாரையுமே மரியாதை குறைவாகவும், தரக்குறைவான வார்த்தைகளால் விமர்சிக்காமல் கண்ணியத்தோடு பேசி வருபவர் தமிழிசை சவுந்தராஜன். அவரது பெற்றோர் தமிழிசையை வளர்த்த விதம் அப்படி!

அடிப்படை குணம்
அதனால்தான் ஒருமுறை கருணாநிதி, "குமரியார் மகள் அரசியல் நாகரீகத்துடன் இருப்பார்" என்றும் "மக்கள் விரோத கட்சியிலே அங்கம் வகித்தாலும் அவரது அடிப்படை குணம் ஒருபோதும் மாறாது" என்றும் பாராட்டினார்.
|
ட்விட்டர் பதிவு
இந்நிலையில், தமிழிசையும், கனிமொழி எம்பியும் ஒரே தொகுதியில் போட்டியிடுகிறார்கள். 2 தினங்களுக்கு முன்பு, தொகுதி மக்கள் கேட்க விரும்பும் கேள்விகளை #AskKanimozhi என்ற ஹேஷ்டேக்கில் கேட்கலாம் என கனிமொழி ட்விட்டரில் பதிவிட்டிருந்தார். அதற்கு கனிமொழி வீடியோ மூலமாக பதிலளித்து இருந்தார்.

தமிழிசை பற்றி?
அதில் ஒரு கேள்வி, "தமிழிசை பற்றி என்ன நினைக்கிறீர்கள்" என்பது கேள்வி. அதற்கு கனிமொழி, "தமிழக பாஜக தலைவராக அன்று தமிழிசை அறிவிக்கப்பட்டபோது கலைஞரை சந்தித்து ஆசி பெற வேண்டும் என்று ஆசைப்பட்டார். அதற்கு கலைஞர், குமரி அனந்தனின் மகள் என் மகளை போன்றவர். அவர் அரசியலில் வர வேண்டும்.. அதற்கு என் வாழ்த்துக்கள் எப்போதுமே உண்டு என்று சொன்னார்.

வாழ்த்துக்கள்
அது போல கலைஞரின் மகளாக என் சார்பில் எப்போதுமே அவருக்கு வாழ்த்துக்கள் உண்டு. புதிதாக இப்போதுதான் இந்த தூத்துக்குடி தொகுதிக்கு அவர் வந்திருக்கிறார். இந்த ஊரைப் பற்றி அவர் இன்னும் நன்றாக தெரிந்து கொள்ள வேண்டும் என்று நான் விரும்புகிறேன்" என்றார்.
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து!












Click it and Unblock the Notifications