வரலாறு படைத்த நளினா.. இன்னும் உயர வாழ்த்துகிறேன்.. கனிமொழி ட்வீட்!
திருநங்கை நளினா பிரசிதாவுக்கு கனிமொழி எம்பி வாழ்த்து தெரிவித்துள்ளார்
Recommended Video
சென்னை: சென்னை லயோலா கல்லூரி மாணவர் பேரவைத் தேர்தலில் திருநங்கை நளினா பிரசிதா வெற்றிபெற்றுள்ளதற்கு கனிமொழி எம்பி வாழ்த்து கூறியுள்ளார்.
திருநங்கைகளை இந்த சமூகம் மூன்றாம் பாலினமாக அங்கீகரிக்க கனிமொழி முன்னெடுத்த முயற்சிகள் ஏராளம். இன்றும்கூட திருநங்கைகளின் நல்வாழ்வுக்காக கனிமொழி குரல் கொடுத்து வருவதையும், இவர்களில் முக்கிய பதவி, பொறுப்பினை யாரேனும் வகித்தால் அவர்களை பாராட்டாமல் கனிமொழியால் இருக்க முடிவதில்லை. அப்படித்தான் நளினாவுக்கும் இன்று பாராட்டு கிடைத்துள்ளது.

லயோலா கல்லூரியில் முதுகலை 2-ம் ஆண்டு படித்து வருபவர்தான் திருநங்கை நளினா பிரசிதா. கல்லூரி மாணவர் சங்க தேர்தலில் இவர் போட்டியிட்டு, தற்போது துணை செயலாளராகவும் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
ஒரு திருநங்கை மாணவர் தேர்தலில் வெற்றி பெறுவதும், பொறுப்பில் அமர்வதும் வரலாற்றிலேயே இதுதான் முதல் முறை! இந்நிலையில்தான் நளினாவுக்கு கனிமொழி வாழ்த்து சொல்லி உள்ளார்.
சென்னை லயோலா கல்லூரி மாணவர் பேரவைத் தேர்தலில் திருநங்கை சகோதரி நளினா பிரசிதா அவர்கள் வெற்றி பெற்றிருப்பது மிகவும் மகிழ்ச்சிகரமான செய்தி. நளினா அவர்கள் இன்னும் பல வெற்றிகளை பெற்று மென்மேலும் உயர வாழ்த்துகிறேன்.https://t.co/8FdKNhEhpg
— Kanimozhi (கனிமொழி) (@KanimozhiDMK) June 24, 2019
தனது ட்விட்டர் பதிவில், "சென்னை லயோலா கல்லூரி மாணவர் பேரவைத் தேர்தலில் திருநங்கை சகோதரி நளினா பிரசிதா அவர்கள் வெற்றி பெற்றிருப்பது மிகவும் மகிழ்ச்சிகரமான செய்தி. நளினா அவர்கள் இன்னும் பல வெற்றிகளை பெற்று மென்மேலும் உயர வாழ்த்துகிறேன்" என்று பதிவிட்டுள்ளார்
-
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்!












Click it and Unblock the Notifications