"அண்ணன்" என கனிமொழி சொன்னதுமே.. டக்கென திரும்பிய ஸ்டாலின்.. வெட்கப்பட்ட உதயநிதி.. நொறுங்கிய யூகங்கள்
திமுக எம்பி கனிமொழி பேசிய பேச்சு அரங்கையே அதிர வைத்தது.
சென்னை: இன்று நடந்த புத்தக விழாவில், கனிமொழி எம்பியின் வரவேற்புரை மிகுந்த முக்கியத்துவத்தை பெற்றுள்ளது..!
கருணாநிதி இறந்த பிறகு, கனிமொழியின் முக்கியத்துவம் கட்சிக்குள் குறைந்துவிட்டதாக ஒரு பேச்சு இருந்து கொண்டே இருக்கிறது.
தென்மண்டலத்தை அன்று அழகிரியிடம் நம்பி ஒப்படைத்தார் கருணாநிதி.. இன்று அழகிரி கட்சிக்குள் இல்லாத நிலையில், அவரை மீண்டும் சேர்த்து கொள்ள, திமுக மேலிடத்துக்கு விருப்பமில்லாத சூழலில், கனிமொழியை பேசாமல் தென்மண்டல பொறுப்பாளராக நியமித்துவிடலாமே என்று கனிமொழியின் ஆதரவாளர்கள் கோரிக்கை விடுத்து வருகிறார்கள்.

தென்மண்டலம்
இதற்கு நடுவில் உதயநிதியை மேலே கட்சிக்கு மேலே கொண்டுவந்துவிட்டு, கனிமொழிக்கு வெறும் மகளிர் அணி பொறுப்பை மட்டும் தருகிறார்கள் என்ற முணுமுணுப்பும் இருந்து கொண்டே இருக்கிறது.. அதுவும், இளைஞரணியில் பெண்களை இணைத்தது, கனிமொழிக்கு அதிருப்தியை ஏற்படுத்தியிருப்பதாகவும் சொல்லப்பட்டது.

அமித்ஷா
சில தினங்களுக்கு முன்பு கனிமொழியின் பிறந்தநாளுக்கு, உள்துறை அமைச்சர் அமித்ஷா போனை போட்டு வாழ்த்தியதை இன்று வரை விமர்சித்து கொண்டிருக்கிறது ஒரு கூட்டம்.. இப்படி சமீபகாலமாகவே கனிமொழியை கட்சி கண்டுகொள்ளவில்லை என்ற ஆதங்க பேச்சு எழுந்தபடியே உள்ள நிலையில், அனைத்து யூகங்கள், சந்தேகங்கள், வதந்திகளை தவிடுபொடியாக்கி உள்ளார் இன்றைய பேச்சில் எம்பி கனிமொழி.

வரவேற்பு
இன்று முதல்வர் ஸ்டாலினின், உங்களில் ஒருவன் சுயசரிதை புத்தக விழவில், கனிமொழிதான் அனைவரைம் வரவேற்று பேசினார்.. அப்போது அவர் பேச்சில் 2 விஷயங்கள் கவனத்தை பெரிதும் ஈர்த்தன.. கனிமொழி பேசியபோது, "கொடை, கருணை, நீதி தவறாமை, மக்களை பாதுகாத்தல், இவை நான்கும் உடைய அரசன் வேந்தர்களுக்கு ஒளிபோன்றவன்.. அப்படி ஒரு தலைவராக, முதலமைச்சராக, தமிழகத்தை முன்னடத்தி கொண்டிருக்கும் அண்ணன் தளபதி அவர்களே" என்று சொல்லிவிட்டு ஸ்டாலினை திரும்பி பார்த்தார் கனிமொழி.. அப்போது ஸ்டாலின் முகத்தில் லேசான புன்னகை எட்டிப்பார்த்தது.

உதயநிதி வெட்கம்
பிறகு, முக்கிய தலைவர்களை வரவேற்று பேசி கொண்டே வந்த கனிமொழி, "இளைஞரணி செயலாளர், சட்டமன்ற உறுப்பினர், உதயநிதி அவர்களை வரவேற்கிறேன்.. தொடர்ந்து நீட் ஒழிப்பிற்காக குரல் கொடுத்து களமாடக்கூடிய, அவரது நெஞ்சுக்கு நீதியிலும் அந்த குரல் தொடர்ந்து ஒலிக்கட்டும்" என்று கனிமொழி சிரித்து கொண்டே சொன்னதுமே, துர்கா ஸ்டாலினும், அவருக்கு பக்கத்திலேயே உட்கார்ந்திருந்த உதயநிதி, தயாநிதி மாறன் எல்லாருமே சிரித்தனர்.. உதயநிதி முகத்தில் வெட்கம் வந்து போனது.. கையெடுத்து நன்றியும் சொல்லி கொண்டார்.. மகனை பற்றி கனிமொழி பேசியதையெல்லாம் ஸ்டாலின் புன்னகைத்தவாறே கவனித்து கொண்டிருந்தார்.

தளபதி ஸ்டாலின்
"மக்களை மதிக்கும் முதல்வராக, அதே நேரத்தில் உங்களில் ஒருவராக என மக்களை மதிக்கும் தலைவராக, மக்கள் கேட்கும் முன்பே அவர்களின் மனதை அறிந்து செயல்படும் தளபதி அவர்கள், இன்று தன் சுயசரிதையின் முதல் பாகத்தை வெளியிடுகிறார்" என்று முதல்வரின் புத்தகத்தின் சிறப்பை பற்றி பேசி கொண்டிருந்த கனிமொழியின் குரல் திடீரென, கம்ம தொடங்கியது.. காரணம், கருணாநிதி பற்றி உருக்கத்துடன் பேச ஆரம்பித்தார்.

உருக்கம்
"ஆயிரமாயிரம் கண்கள் இருக்கும் இந்த அரங்கில் இதையெல்லாம் பார்த்து பெரிதுவக்கும் 2 கண்களை தேடுகிறேன்.. உங்களை வாரி அணைத்து உச்சிமுகர்ந்த "வாழ்க உன் பணி ஸ்டாலின்" என்று கரகரத்த குரலில் கொஞ்சும் அப்பாவை தேடுகிறேன்.. அவர் இங்கு இல்லை.. ஆனால், இங்கிருக்கும் உடன்பிறப்புகள் அனைவரது முகத்திலும், அவர்கள் முகத்தில் பெருமையிலும், பூரிப்பிலும் பொங்கி வழிகிறது அப்பாவின் அன்பு.." என்று சொன்னபோது, கனிமொழியின் குரல் தழுதழுத்தது.. ஸ்டாலினின் கண்களும் பணித்தன.. ஆயிரம்தான் அரசியல் என்றாலும், பதவி பொறுப்பு என்றாலும், "ரத்த பாசம்" என்று வந்துவிட்டால், அதற்கு கருணாநிதியின் வாரிசுகள் மட்டும் விதிவிலக்கா என்ன?!
-
நமக்கு புடிச்சவங்க, வாழ்க்கையை விட்டு போயிடுவாங்கன்னு தெரிஞ்சும்.. உருக்கமாக திரிஷா வெளியிட்ட வீடியோ! -
அதை சொல்ல யாருக்கும் அருகதை இல்லை.. வீட்டிலும், ஆபீஸிலும் இதுதான் நடக்குது செல்வராகவன் ஆதங்கம் -
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
தங்கத்தில் இனி 1 மில்லி கிராம் கூட ஏமாற்ற முடியாது! 7 மாவட்டத்துக்கு ஹேப்பி! அரசின் பாதுகாப்பு கவசம் -
வங்கி கணக்கில்.. அரசு அனுப்பிய ரூ.2000! உங்களுக்கு வந்துடுச்சா.. மொபைலிலேயே செக் செய்வது எப்படி? -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
வைகோவால் 25 சீட் போச்சு.. அன்புமணியால் திமுகவுக்கு 50 சீட் காலி.. 2016இல் விஜயகாந்த் விழுந்த கதை! -
தேமுதிக 10 தொகுதிகளில் போட்டி.. 21 ஆண்டு வரலாற்றில் மிகக் குறைவான சீட்களில் நிற்பது இந்த முறைதான்! -
ஆதார் கார்டு வைத்திருப்போருக்கு குட் நியூஸ்.. பிஎம் ஸ்வநிதி திட்டத்தில் ₹50,000 கடன் கிடைக்குமா? -
வேளச்சேரி - பரங்கிமலை MTRS.. 80 நிமிடப் பயணம் வெறும் 15 நிமிடம்.. எஸ்ஜி சூர்யாவின் நிஜ அனுபவம் -
சர்க்கரை அட்டைதாரர்களுக்கு சூப்பர் வசதி… ரேஷன் கடைக்கு போறீங்களா? தமிழக அரசின் திடீர் உத்தரவு -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி












Click it and Unblock the Notifications