ஜோகோவிச் தெரியுமா? பாஜகவுக்கும் ஒருநாள் இதே கதிதான்! ஆருடம் கணித்து சொன்ன கார்த்தி சிதம்பரம்
சென்னை: "பாஜகவை எதிர்த்தால் ஊழல்வாதி, அவர்களுடன் சேர்ந்தால் புனிதர்களா? பாஜக ஜோகோவிச் போல தோற்றுப்போகும்" என காங்கிரஸ் எம்பி கார்த்தி சிதம்பரம் விமர்சித்துள்ளார்.
அடுத்த ஆண்டு நடைபெற உள்ள நாடாளுமன்ற தேர்தலில் பாஜகவை வீழ்த்த எதிர்க்கட்சிகள் ஒன்று சேர்ந்து வருகின்றன. அந்த வகையில் தேசிய தலைவர்கள் பங்கேற்கும் இரண்டாவது கூட்டம் இன்று பெங்களூரில் நடைபெறுகிறது. இதில் திமுகவும் பங்கெடுக்கிறது. இந்நிலையில், "பாஜகவை எதிர்த்தால் ஊழல்வாதி, அவர்களுடன் சேர்ந்தால் புனிதர்களா?" என கார்த்தி சிதம்பரம் எம்பி கேள்வி எழுப்பியுள்ளார்.

மேலும், "நாடாளுமன்ற தேர்தலை பொறுத்த அளவில் காங்கிரஸ் தலைமையில் வலுவான கூட்டணி அமைய தற்போது கூட்டங்கள் நடைபெற்று வருகின்றன. இது ஒரு நல்ல முயற்சி. தொடர்ந்து எதிர்க்கட்சிகள் ஆலோசனை கூட்டம் நடத்தினால்தான் கூட்டணிக்கான தளம் அமையும். அதேநேரம் எதிர்க்கட்சிகளிடம் முரண்பாடுகள் இருக்கிறது என்பதை நான் ஏற்றுக்கொள்கிறேன். இது பேச்சுவார்த்தை மூலமே களையப்படும்.
பாஜகவின் மதவாத அரசியலுக்கு எதிராக, மதச்சார்பற்ற இந்தியாவை உருவாக்குவதற்கான ஒற்றை புள்ளியில் எதிர்க்கட்சிகள் இணைய வேண்டும். பாஜகவை எதிர்ப்பவர்கள் ஊழல்வாதிகள் என்று விமர்சிக்கப்படுகிறார்கள். இது கொச்சையான விமர்சனமாகும். மகாராஷ்டிராவில் அஜித் பவார் உடன் இருந்தவர்களை ஊழ்வாதிகள் என்று பாஜக விமர்சித்திருக்கிறது. ஆனால், இதே அஜித் பவாரை தனது கட்சியில் இணைத்துக்கொண்டது.
பாஜகவில் இணைபவர்கள் புனிதர்களாக மாறிவிடுகிறார்களா என்ன? பாஜக ஜோகோவிச் போலதான் தோற்கும். வரலாற்று புள்ளிவிவரங்கள், அனுபவம், திறமையை வைத்து பார்த்தால் விம்பிள்டன் போட்டியில் ஜோகோவிச்தான் ஜெயித்திருக்க வேண்டும். ஆனால், வெற்றிபெறவில்லையே! அதேபோல கடந்த இரண்டு மக்களவை தேர்தலில் வென்றதாலேயே பாஜக மீண்டும் 2024ம் ஆண்டு தேர்தலில் வெற்றி பெறும் என்று சொல்ல முடியாது" என்று கூறியுள்ளார்.
கடந்த மாதம் பாட்னாவில் நடைபெற்ற கூட்டத்தில் 17 எதிர்க்கட்சிகள் பங்கேற்றிருந்த நிலையில், இந்த முறை 24 அரசியல் கட்சிகள் பங்கேற்கின்றன. புதியதாக, வைகோ தலைமையிலான ம.தி.மு.க., இ.ஆர்.ஈஸ்வரன் தலைமையிலான கொ.தே.ம.க., தொல். திருமாவளவன் தலைமையிலான வி.சி.க., இடதுசாரிக் கட்சிகளான ஆர்.எஸ்.பி, பார்வர்டு பிளாக், கேரளத்தில் முக்கிய கட்சியாக இருக்கும் ஐ.யூ.எம்.எல்., கேரள காங்கிரஸ் (ஜோசப்), கேரள காங்கிரஸ் (மணி) ஆகிய கட்சிகள் புதியதாக இந்த கூட்டத்தில் பங்கெடுக்கின்றன என்பது குறிப்பிடத்தக்கது.
-
தனியார் பள்ளிகள் லஞ்சம் தரவேண்டாம்.. அதற்கு பதிலாக.. ராஜ்மோகன் உத்தரவால் வரப்போகும் மாற்றம் -
ராஜ்மோகன் மெகா அறிவிப்பு.. அரசு பள்ளி மாணவர்களுக்கு சிறப்பு திட்டம்.. 5000 அரசுப் பள்ளிகளுக்கு ஜாக்பாட்! -
"மேயர் பதவி கொடுத்தா தான் வருவேன்!" அழகிரி மகள் நிபந்தனை.. சிடிஆர் நிர்மல்குமார் வைத்த செக்! -
"நீட் வேண்டாம்.. +2 மார்க் அடிப்படையில் மருத்துவ சேர்க்கை.." பிரதமர் மோடியிடம் விஜய் வைத்த கோரிக்கை! -
தாய்லாந்திலிருந்து காஸ்ட்லி கஞ்சா கடத்திய கேரள அழகி கைது! ரூ 11 கோடி மதிப்பில் போதை பொருள் பறிமுதல் -
பிராய்லர் சிக்கன் சாப்பிட்டால் சிறுமிகள் சீக்கிரம் பருவமடைகிறார்களா? 65 சாப்பிடலாமா? FSSAI விளக்கம்? -
கங்கை அமரன் போட்ட போடு! பாரதிராஜாவின் 500 கோடி சொத்தில் வெடித்த சர்ச்சை! நீலாங்கரை பங்களா யாருக்கு -
யாரோட பிடிலையும் திருவண்ணாமலை கிடையாது.. செய்யாறில் ஆதவ் அர்ஜுனா பேசியது என்ன? -
தமிழக சட்டமன்ற வரலாற்றில் தவறான முன்னுதாரணம்.. சபாநாயகர் முடிவுக்கு விகே சசிகலா எதிர்ப்பு -
டாஸ்மாக்கில் பாட்டிலுக்கு 10 ரூபாய் பிரச்சனைக்கு தீர்வு.. இயந்திரங்களை நிறுவ அரசு திட்டம்.. சாத்தியமா? -
அரசியலுக்கு வருகிறேன்! முடிவை அறிவித்தார் லாரன்ஸ்! விஜய்யின் தவெகவா? அண்ணாமலை இயக்கமா? -
இந்துக்களின் கயிறு உறுத்துகிறா? முதல்வர் விஜய் அதிகாரத்தை இழக்க நேரிடும்.. வானதி சீனிவாசன் வார்னிங்












Click it and Unblock the Notifications