வாங்க சாப்பிடலாம்.. இருக்கட்டும் பரவாயில்லப்பா.. பாசத்தை பரிமாறி கொண்ட துரைமுருகனும், ஓபிஎஸ் மகனும்

துரைமுருகனை ரவீந்திரநாத் குமார் எம்பி சந்தித்து பேசி உள்ளார்

Subscribe to Oneindia Tamil

Recommended Video

    Duraimurugan Press meet | வைகை அணை திறப்பு : உசிலம்பட்டியில் துரைமுருகன் மகிழ்ச்சி- வீடியோ

    சென்னை: "வீட்டுக்கு சாப்பிட வாங்க" என்று எம்பி ரவீந்திரநாத் கூப்பிட.. "பரவாயில்லைப்பா.." என்று அன்புடன் மறுத்துள்ளார் திமுக மூத்த தலைவர் துரைமுருகன்.

    ஜெயலலிதா இருந்தபோது அதிமுகவின் நிலைமையே வேறு.. கட்சி பொறுப்பாளர்கள் எதிர்க்கட்சிகளுடன் பேசுவது என்பது அபூர்வம்.. தெரிந்தவர்களாக இருந்தாலும்சரி, நண்பர்களாக இருந்தாலும் சரி.. அவங்க வீட்டு விசேஷங்களில் கலந்து கொள்வதற்கு கூட நடுங்குவார்கள்.

    அதையும் மீறி யாராவது கலந்து கொண்டாலோ, நெருக்கம் காட்டினாலோ, "அடிமட்ட உறுப்பினர் பதவியில் இருந்து" என்ற அறிக்கை மின்னல் வேகத்தில் வந்து விழும். அதனால் திமுக-அதிமுக தரப்பினர் நேருக்கு நேர் பார்த்தால்கூட முகத்தை திருப்பி செல்லும் நிலை இருந்தது.

    பழக்கம்

    பழக்கம்

    ஆனால் இப்போது அப்படி ஒரு நிலை இல்லை. பயம், நடுக்கங்கள் உடைந்து விழுந்து கொண்டிருக்கின்றன. கட்சியின் பொறுப்பாளர்கள் சர்வ சாதாரணமான இயல்புடன் நடந்து கொள்கிறார்கள். குறிப்பாக எடப்பாடி பழனிசாமி முதல்வரான பிறகுதான் இந்த பழக்கம் ஆரம்பமாகி உள்ளது.

    தேனி

    தேனி

    அதன் அரசியல் நாகரீகம் தேனியிலும் தென்பட்டுள்ளது. தேனி ஆட்சியர் அலுவலகத்தில் தமிழக சட்டசபை பொதுக்கணக்கு குழுவினர் ஆய்வு நடத்தினர். அப்போது பொதுகணக்கு குழுவின் தலைவர் துரைமுருகனுடன் தேனி தொகுதி அதிமுக எம்பி ரவீந்திரநாத் குமார் சந்தித்து பேசினார்.

    விரல்நுனி விவரம்

    விரல்நுனி விவரம்

    துரைமுருகனை பொறுத்தவரை திமுகவில் சீனியர்.. பொதுப்பணித்துறை என்றாலே அதன் அமைச்சராக இருந்த துரைமுருகன்தான் இன்றுவரை தமிழக மக்கள் நினைவில் வந்து போவார். துறை சம்பந்தப்பட்ட ஒவ்வொரு விஷயத்தையும் விரல் நுனியில் வைத்திருப்பார். அதுமட்டுமில்லை.. மாற்று கட்சியினருடன் நட்பு பாராட்டும் அரசியல் தலைவர்களில், துரைமுருகன் ரொம்பவும் முக்கியமானவர்.

    ஜோக்

    ஜோக்

    சட்டசபையில் துரைமுருகன் ஜோக் அடித்தால், எல்லா கட்சிக்காரர்களும் பேதங்களை மறந்து சிரித்துவிடுவார்கள். இப்போது தன்னை சந்தித்து பேசிய ஓபிஎஸ் மகனை "ரொம்ப நல்லா வரணும்" என்று மனசார வாழ்த்தி உள்ளார். ரவீந்திரநாத்தும் துரைமுருகனுக்கு சால்வை அணிவித்து தனது வணக்கத்தை தெரிவித்துள்ளார்.

    சால்வை

    சால்வை

    இருவருமே கிட்டத்தட்ட 30 நிமிஷம் சிரித்தபடியே பேசியிருக்கிறார்கள். தனிப்பட்ட விவகாரம், மற்றும் அரசியல் ரீதியாக இவர்கள் பேசியிருக்கலாம் என்கிறார்கள். ஆனால் இருவரும் சந்தித்து கொண்டதும், சால்வை போர்த்தியதும், சிரித்து சிரித்து பேசியதும் போட்டோக்களாக வெளிவந்து அனைவரையும் வியக்க வைத்துள்ளது. இப்படித்தான் போன மாசம் ஓபிஎஸ்கூட, தேனியில் நடந்த அரசு விழாவில் திமுக எம்ஏக்கள் ஆண்டிபட்டி மகாராஜன், பெரியகுளம் சரவண குமாருடன் உட்கார்ந்து சிரித்தபடியே பேசினார்.

    விருந்து

    விருந்து

    அப்படியேதான் இந்த சம்பவமும் உள்ளது. இதில் என்ன ஹைலைட் என்றால், மதிய விருந்துக்கு வீட்டுக்கு சாப்பிட வருமாறு துரைமுருகனை ரவீந்திரநாத் கூப்பிட.. அதற்கு "பரவாயில்லைப்பா.." என்றுகூறி இருக்கிறார் துரைமுருகன். ஆக மொத்தம்.. திமுக மூத்த தலைவரும், அதிமுக எம்பியும் இப்படி ஜாலியாக பேசியதை பார்க்கும்போது, அரசியல் நாகரீகம் இன்னும் மக்கி போகாமல் உயிர்ப்புடனே இருக்கிறது என்று நமக்கு தெரிகிறது.

    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+