ஐயா உங்க தோட்டத்தில் கூட மாம்பழம் பழுக்கலையா?.. என்ன பண்ணலாம்.. திமுக எம்பி நக்கல்
சென்னை: முக்கனிகளில் உங்கள் தோட்டத்தில் பலா, வாழை இருக்கு. ஆனால் மாம்பழம் பழுக்கவில்லையா. என்ன செய்யலாம். பேசாம சின்னத்தை மாற்றிடலாமா என திமுக எம்பி செந்தில்குமார் பாமக நிறுவனர் ராமதாஸை கிண்டல் செய்துள்ளார்.
நாட்டில் எந்த பிரச்சினை என்றாலும் முதலில் வந்து குரல் கொடுப்பது பாமக நிறுவனர் ராமதாஸ்தான். ஆனால் நாடாளுமன்றத் தேர்தலில் பாஜகவுடன் கூட்டணியில் உள்ளார்.
இதனாலோ என்னவோ டெல்லியில் சிஏஏவுக்கு எதிராக நடக்கும் வன்முறைகளுக்கு அவர் குரல் கொடுப்பதில்லை என்ற பேச்சு எழுந்துள்ளது.

போராட்டம்
தமிழக பட்ஜெட் கூட்டத் தொடரில் சிஏஏ, என்ஆர்சி, என்பிஆருக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றக் கோரி சென்னையில் வண்ணாரப்பேட்டையில் முஸ்லீம் அமைப்புகள் போராட்டம் நடத்தி வருகின்றனர். ஆனால் இந்த போராட்டம் குறித்து ராமதாஸ் ஒரு ட்வீட் கூட போடவில்லை. அந்த போராட்டத்தில் முஸ்லீம் அமைப்புகள் மீது போலீஸார் தடியடி நடத்தினர். இதைக் கூட ராமதாஸ் கண்டிக்கவில்லை என்ற பேச்சு உள்ளது.

கருத்து
ஆனால் தைலாபுரம் தோட்டத்து மலர்கள் 7. எனக்கும் உங்களுக்கும் மிகவும் பிடித்த மஞ்சள் மலர்கள். தைலாபுரம் தோட்டத்து மலர்கள்: 8. வண்ண வண்ண மலர்கள். தைலாபுரம் தோட்டத்தில் முக்கனிகளில் இரு கனிகளைத் தரும் பலா, வாழை மரங்கள் போன்ற ட்வீட்டுகளையே போட்டுள்ளாரே தவிர மற்ற போராட்டங்கள் குறித்து எந்த கருத்தையும் அவர் போடவில்லை.

தொப்பி போடாத இஸ்லாமியர்
டெல்லியில் இத்தனை கலவரம் நடந்து கொண்டிருக்கையில் ராமதாஸ் ஒரு ட்வீட்டையும் போடவில்லை. இதை கண்டித்து திமுக எம்பி செந்தில்குமார் ஒரு கேள்வி கேட்டுள்ளார். தனது ட்விட்டர் பக்கத்தில் அவர் டெல்லி எரிகிறது.. இஸ்லாமியர்கள் கண்மூடித்தனமாக தாக்கப்படுகிறார்கள்.. இஸ்லாமியர்களுக்கு ஒன்று என்றால் முதல் ஆள் ஆக வீதிக்கு வருவேன் சொன்ன ரஜினிகாந்த் எங்கே? தொப்பி போடாத இஸ்லாமியர் டாக்டர் ராமதாஸ் எங்கே? இஸ்லாமியர்களுக்கு எந்த பாதிப்பும் வராது என்று சொன்ன முதலமைச்சர் எடப்பாடி எங்கே? என கேள்வி எழுப்பியுள்ளார்.
|
வன்முறை
டெல்லியில் 20-க்கும் மேற்பட்டோர் வன்முறையில் கொல்லப்பட்ட நிலையில் பாமக நிறுவனர் ராமதாஸ் தனது ட்விட்டரில் தைலாபுரம் தோட்டத்தில் முக்கனிகளில் இரு கனிகளைத் தரும் பலா, வாழை மரங்கள்! என புகைப்படத்தை போட்டுள்ளார். இதை டேக் செய்து திமுக எம்பி செந்தில்குமார் தனது ட்விட்டரில் ஐயா
@drramadoss
முக்கனி - மா, பலா, வாழை.
பலா, வாழை உங்க தோட்டத்தில் இங்கே இருக்கு.
மா Lemon எங்கே ?
ஐயா உங்க தோட்டத்தில் கூட மாம்பழம் பழுக்கவில்லையா.Winking face
என்ன ஐயா பண்ணலாம்.
சின்னத்தை மாற்றி விடலாமா
என கேள்வி எழுப்பியுள்ளார். இவரது ட்வீட்டை பெரும்பாலானார் ரசித்தும் எதிர்க் கருத்தையும் தெரிவித்துள்ளனர். இன்னும் சிலர் சீசன் அடுத்த மாதம் தான் தொடங்கும்.... தர்மபுரி மாவட்டத்தில் இருந்து கொண்டு இது கூடவா தெரியாது..... Twitter -ரை விட்டு கொஞ்சம் தொகுதிக்கும் போங்க சார் தெரியும் என ஒரு ட்விட்டர் பயன்பாட்டாளர் கேட்டுள்ளார்.
-
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம்












Click it and Unblock the Notifications