திமுகவிடம் கேட்டது கிடைத்ததா! வந்து விழுந்த கேள்வி! சற்று ஜெர்க் ஆன கம்யூனிஸ்ட் எம்பி சுப்பராயன்
சென்னை: திமுக- இந்திய கம்யூனிஸ்ட் கட்சி இடையே தொகுதி பங்கீட்டில் உடன்பாடு எட்டப்பட்டிருக்கிறதா என்பது குறித்து திருப்பூர் எம்பி சுப்பராயன் தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றத் தேர்தலையொட்டி கூட்டணி கட்சிகளுக்கான தொகுதிப் பங்கீடு பணிகளை திமுக தீவிரப்படுத்தியுள்ளது. கடந்த சனிக்கிழமை நடந்த தொகுதி பங்கீட்டு பேச்சுவார்த்தையில் இந்திய யூனியன் முஸ்லீம் லீக், கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி ஆகிய கட்சிகளுக்கு தலா ஒரு தொகுதி ஒதுக்கப்பட்டது.

இதற்கான உடன்பாடு சனிக்கிழமையே கையெழுத்தானது. அதன்படி இந்தியன் யூனியன் முஸ்லீம் லீக் கட்சி ராமநாதபுரத்திலும் , கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி நாமக்கல்லிலும் போட்டியிடுகிறது.
இந்த நிலையில் கடந்த 3-ஆம் தேதி திமுகவுடன் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி பேச்சுவார்த்தை நடத்தியது. அப்போது இரு கட்சியினரிடையே உடன்பாடு எட்டப்படவில்லை. இதையடுத்து கடந்த 26ஆம் தேதி இரண்டாம் கட்ட பேச்சுவார்த்தை நடந்தது.
இந்திய கம்யூனிஸ்ட்: இதில் ஏற்கெனவே 4 விருப்பத் தொகுதிகளை கேட்டு திமுகவிடம் பட்டியலை கொடுத்துள்ளனர். இந்த நிலையில் இன்றைய தினம் திமுக- இந்திய கம்யூனிஸ்ட் இடையே 3-ஆவது கட்ட பேச்சுவார்த்தை இன்று தொடங்கியது. கம்யூனிஸ்ட் கட்சி எம்பி சுப்புராயன், கோவை எம்பி நடராஜன், பழனிசாமி உள்ளிட்டோர் நடத்திய இந்த பேச்சுவார்த்தையில் உடன்பாடு எட்டப்படவில்லை என தெரிகிறது.
இந்த இறுதி கட்ட பேச்சுவார்த்தை நடந்த நிலையில் திருப்பூர் எம்பி சுப்பராயன் செய்தியாளர்கள் சந்தித்தார். அவர் கூறுகையில் பொய்யும் புனைச்சுருட்டு உள்பட சகல அஸ்திரங்களையும் பாஜக பயன்படுத்திக் கொண்டிருக்கிறது. இவற்றிற்கு தீர்வு அளிக்க சாரதியாக நின்று கொண்டிருப்பது திமுக.
மதசார்பற்ற கூட்டணி : அதன் தலைமையில் அமைந்துள்ள மதசார்பற்ற கூட்டணி சகல நிச்சயமாக பாஜக அதன் சார்ந்த அணிகளும் முற்றிலும் வேரறுக்கப்படும். அதில் உறுதியான நம்பிக்கை இந்திய கம்யூனிஸ்டுக்கு உள்ளது. தமிழகத்தில் பாஜக காலூன்ற வாய்ப்பே இல்லை. இன்று தொகுதி பங்கீட்டு பேச்சுவார்த்தை நடத்தினோம். அது நிறைவான கட்டத்தை நெருங்கியுள்ளது.
திருப்பூர் எம்பி: முதல்வர் ஸ்டாலினின் பிறந்த நாள் கொண்டாட்டங்களுக்கு பிறகு தொகுதி உடன்பாடு நல்லபடி நடக்கும். எங்களுக்கு திருப்தி ஏற்படும் வகையில் அது உடன்பாடாகியிருக்கிறது. தொகுதி பங்கீட்டு பேச்சுவார்த்தையில் மனரீதியில் இசைவு ஏற்பட்டுள்ளது. தற்போதுள்ள திருப்பூர், கோவை ஆகிய தொகுதிகளையும் கேட்டுள்ளோம். தற்போதைக்கு தொகுதிகளை அறிவிக்கும் நிலையை அடையவில்லை என்றார்.
4 தொகுதிகளா: கடந்த 2019ஆம் ஆண்டு திருப்பூர், கோவை ஆகிய இரு தொகுதிகள் கம்யூனிஸ்ட் கட்சிகளுக்கு ஒதுக்கப்பட்டது. இந்த முறை இந்திய கம்யூனிஸ்ட் கட்சி 4 தொகுதிகளை கேட்பதாக தெரிகிறது. இதுகுறித்து திமுக வட்டாரங்களில் கேட்ட போது காங்கிரஸ், விசிக, மார்க்சிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட் உள்ளிட்ட கட்சிகள் கூடுதலாக இடங்களை ஒதுக்கச் சொல்லி கேட்கிறார்கள். இதனால்தான் பேச்சுவார்த்தையில் இழுபறி ஏற்பட்டுள்ளது. கம்யூனிஸ்ட் கட்சிக்கு அவர்கள் ஏற்கெனவே போட்டியிட்டு வென்ற திருப்பூர், கோவையே ஒதுக்கப்பட வாய்ப்பிருக்கிறது என்றனர். எனவே 2 தொகுதியா இல்லை கம்யூனிஸ்ட் கேட்டது போல் 4 தொகுதிகள் கிடைக்கின்றனவா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.
-
மாணிக்கம் தாகூர் ராஜினாமா.. என்னதான் ஆச்சு காங்கிரசுக்கு? கண்டுக்கொள்ளாத ராகுல் காந்தி -
அதிமுகவை பாஜக விலைக்கு வாங்கிவிட்டது.. திருவாரூரில் தேர்தல் பரப்புரையை தொடங்கிய ஸ்டாலின்! ‘அட்டாக்' -
சுந்தர்.சி வேட்பாளர் ஆனதற்கு எதிர்ப்பு.. புதிய நீதி கட்சியின் அமைப்புச் செயலாளர் திடீர் விலகல்! -
181–189 தொகுதிகளில் வெற்றி.. மீண்டும் வெல்லும் திமுக கூட்டணி.. அதிமுக – தவெகவிற்கு ஷாக் தந்த சர்வே -
உசிலம்பட்டி ஐயப்பன் சசிகலா கட்சியில் இணைந்தார்.. அதே தொகுதியில் வேட்பாளராக அறிவிப்பு! -
பொருளாக தராமல் ரூ.8,000 கூப்பன் கொடுப்பது ஏன்? மக்களிடம் முதல்வர் ஸ்டாலின் சொன்ன விளக்கம்! -
அதிமுகவை நம்பி சாத்தூரில் களமிறங்கும் நயினார் நாகேந்திரன்.. கைகொடுக்குமா முக்குலத்தோர் வாக்குகள்? -
திமுக vs அதிமுக! கேம் சேஞ்சராக போகும் டாப் 5 வாக்குறுதிகள்! தேர்தல் முடிவையே மாற்றும் பிரம்மாஸ்திரம் -
திமுக, அதிமுக, தவெக தேர்தல் வாக்குறுதிகள்.. தமிழ்நாட்டின் வருமானம் என்ன.. நிறைவேற்ற முடியுமா? -
யாரு? எங்க? பாஜகவில் பரபர பஞ்சாயத்து! அதிமுகவால் கடுப்பான டெல்லி! மொடக்குறிச்சியில் அண்ணாமலை போட்டி? -
Election Exclusive: அந்த பக்கம் சசிகலா..இந்த பக்கம் ராமதாஸ்! எடப்பாடிக்கு எல்லா பக்கமும் சிக்கல் தான்! 2026 ரொம்ப கஷ்டம் -
ஆதவ் அர்ஜுனா மாமியாரிடம் ரூ.300 கோடி வாங்கிய எடப்பாடி.. பகீர் கிளப்பிய கேசி பழனிசாமி












Click it and Unblock the Notifications