பெருங்குடி ரோட்டோரம்.. பந்தா இல்லை.. அலட்டல் இல்லை.. ஆச்சரியப்பட்ட மக்கள்.. அட நம்ம தமிழச்சி!
ரோட்டோர கடையில் தமிழச்சி தங்கபாண்டியன் டிபன் சாப்பிட்டார்
Recommended Video
சென்னை: "யார் அது.. எம்பி தமிழச்சியா.. இங்க என்ன பண்றாரு" என்று பொதுமக்கள் ஆச்சரியத்துடன் பார்த்து கொண்டே சென்றனர். அப்படி ஒரு போட்டோக்கள்தான் இணையத்தில் வைரலாகின்றன.
வாரிசு அடிப்படையில் சீட் தரப்பட்டது என்ற விமர்சனங்களை எல்லாம் தாண்டி தெருத்தெருவாக வாக்கு சேகரித்தவர் தமிழச்சி.
தங்கபாண்டியன். கட்சியில் முக்கிய புள்ளியாக இருந்த தங்கபாண்டியனின் மகள், முன்னாள் அமைச்சர் தங்கம் தென்னரசுவின் அக்கா என்ற பந்தங்களை தாண்டி, பூமழை தூவி இவரை தொகுதி மக்கள் வரவேற்கவும் செய்தனர்.

தென்சென்னை
20 வருடமாக இலக்கிய பணியில் தன்னை ஈடுபடுத்தி கொண்டாலும், தமிழச்சியின் அரசியல் வருகையும் தவிர்க்க முடியாத ஒன்றுதான். அதனால்தான் தென்சென்னையில் அபார வெற்றி பெற்றுள்ளார். இப்போது எம்பியாகவும் உயர்ந்துவிட்டார். அரசியலிலும் சரி, இலக்கியத்திலும் சரி.. தமிழச்சிக்கென்று ஒரு அடையாளமும், ரசிகர் கூட்டமும் உள்ளது. சரளமான ஆங்கிலத்தில் இவர் ஆற்றிய கன்னிப்பேச்சுக்கு கைதட்டுகள் அதிகம்!

திடீர் வருகை
இப்படிப்பட்ட ஒரு பிரபலத்தை திடீரென சென்னையின் ரோட்டோரக் கடையில் பார்த்தவர்களுக்கு கொஞ்சம் அதிர்ச்சிதான். தமிழச்சிக்கே உரிய நேர்த்தியான உடை, பூ, என்று பளிச்சென மக்களுக்கு அடையாளம் காட்டி விட்டது. பெருங்குடி ரோட்டோரம் உள்ள அந்த கடைக்கு திடீரென இரவு வந்தார் தமிழச்சி.

தள்ளுவண்டி
தள்ளுவண்டி கடைகளில் எப்பவுமே இரவு நேரத்தில் கூட்டம் இருந்தாலும், அதையும் பொருட்படுத்தாமல் அங்கு வந்து உட்கார்ந்தார். எம்பியை பார்த்ததும் தள்ளு வண்டி கடைக்காரருக்கு கையும் ஓடலை, காலும் ஓடலை.. அங்கிருந்த ஒரு ஸ்டூலை எடுத்து போடவும் உட்கார்ந்து கொண்டார்.

முட்டை தோசை
ஒரு பந்தா இல்லை, ஒரு அலட்டல் இல்லை, ஒருகெடுபிடி இல்லை.. கூலாக உட்கார்நதுஒரு முட்டை தோசை, ஒரு பொடி தோசை ஆர்டர் செய்தார். சாப்பிட்டு கொண்டிருந்தவர்களில் சிலர் இதை செல்போனில் படம் பிடித்துக் கொண்டனர்.

பிரபலம்
இந்த பகுதிக்கு பிரச்சார சமயத்தில் தமிழச்சி வந்தபோது, தள்ளுவண்டி கடைகளையும், அங்கு மக்கள் விருப்பமாக சாப்பிட்டு கொண்டிருப்பதையும் பார்த்துள்ளார். அதனால், நேரம் கிடைக்கும்போது, ஒருநாள் இப்படி தள்ளுவண்டி கடையில் உட்கார்ந்து சாப்பிட வேண்டும் என்று ஆசைப்பட்டுள்ளார் தமிழச்சி.

வைரல்
அப்படி ஒரு நேரம் கிடைக்கவும்தான், பெருங்குடி தள்ளுவண்டி கடை பக்கம் காரில் வந்து இறங்கிவிட்டார். திருப்தியாக சாப்பிட்டுவிட்டு, ஹாயாக கிளம்பி சென்றார். ரோட்டோர கடையில் முட்டைதோசை சாப்பிட்ட தமிழச்சியின் இந்த போட்டோக்கள்தான் இணையத்தில் வைரலாகி வருகின்றன.
-
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்!












Click it and Unblock the Notifications