திமுக பொருளாளர் பதவிக்கு...டிஆர் பாலு வேட்புமனு தாக்கல்!!
சென்னை: அண்ணா அறிவாலயத்தில் திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ் பாரதியிடம் திமுக பொருளாளர் பதவிக்கு எம்.பி. டி.ஆர்.பாலு வேட்புமனு தாக்கல் செய்தார். திமுகவில் இந்தப் பதவிக்கு இதுவரை டி.ஆர். பாலு மட்டும்தான் வேட்புமனு தாக்கல் செய்துள்ளார்.
திமுக எம்.பியாக இருக்கும் டி.ஆர். பாலு திமுகவின் பொருளாளர் பதவிக்கு போட்டியிடலாம் என்று கூறப்பட்டு வந்தது. இந்த நிலையில் அறிவாலயத்தில் இன்று வேட்புமனு தாக்கல் செய்தார். திமுக பொருளாளர் மற்றும் பொதுச்செயலாளர் தேர்தல் நடக்கும் என்று அறிவிக்கப்பட்டு இருந்த நிலையில் இன்று வேட்புமனு தாக்கல் துவங்கியுள்ளது. வரும் 5ஆம் தேதி வரை வேட்புமனு தாக்கல் செய்யலாம்.

தமிழகத்தில் சட்டசபை தேர்தல் அடுத்த ஆண்டு நடக்கவிருக்கும் நிலையில் அனைத்துக் கட்சிகளும் தயாராகி வருகின்றன. கடந்த மார்ச் மாதம் திமுக பொதுச்செயலாளராக இருந்த க. அன்பழகன் காலமானார். இதையடுத்து அந்தப் பதவி காலியானது.
கொரோனா பொதுமுடக்கம் காரணமாக பொதுச்செயலாளர் தேர்வில் தாமதம் ஏற்பட்டது. இந்த நிலையில் பொருளாளர் பதவியை துரைமுருகன் ராஜினாமா செய்தார். இதன்காரணமாக இதனால் இந்தப் பதவியும் காலியானது. திமுகவைப் பொறுத்த வரை இந்த இரண்டு பதவிகளும் முக்கியமானவை.
இந்தப் பதவிகளுக்கான தேர்தலை முன்னிட்டு, பொதுச்செயலாளர் பதவிக்கு துரைமுருகன் விருப்பமனு தாக்கல் செய்தார். பொருளாளர் பதவிக்கு ஏ.வ.வேலு, டி.ஆர்.பாலு, ஆ.ராசா ஆகியோரில் ஒருவர் தேர்ந்தெடுக்கபடலாம் என்று கூறப்பட்டு வந்தது. இதை ஆ. ராசா மறுத்தார். இந்த நிலையில் இன்று பொருளாளர் பதவிக்கு டி.ஆர். பாலு வேட்புமனு தாக்கல் செய்தார்.
தலைமை அலுவலகத்தில் ரூ.1000 கட்டணம் செலுத்தி வேட்புமனு பெறலாம், திமுக பொருளாளர், பொதுச்செயலாளர் பதவிக்கு போட்டியிடுவோர் வேட்புமனு கட்டணமாக ரூ.25 ஆயிரம் செலுத்த வேண்டும் என்று திமுக தலைமையகம் அறிவித்து இருந்தது. வரும் 5 ஆம் தேதியன்று மாலை 4 மணிக்கு இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியிடப்படும் என்றும் திமுக தெரிவித்துள்ளது.
-
"கடைசி மூச்சு வரை உங்களுக்காக உழைப்பேன்!" - கலைஞர் கருணாநிதியின் இறுதிப் பேருரை.. என்ன பேசினார்? -
‘அல்காரிதம்’ புரியாததால் வந்த வினை! தவெகவின் அலையைக் கணிக்கத் தவறிய டிஆர்பி ராஜா.. அடியோடு மாறுதாம்! -
உதயநிதிக்கு ஸ்டாலின் சொன்ன நோ! செயல் தலைவர் பதவி கிடையாது.. கூர்க் ரகசிய மீட்டிங்கில் முடிவு? -
அரசியல் சதுரங்கத்தின் அசாத்திய மூளை.. நவீன தமிழகத்தின் சிற்பி! யார் இந்த ‘கலைஞர்’ கருணாநிதி? -
அரசியல் மோதலை விடுங்க.. 'கலைஞர்' கருணாநிதி பிறந்தநாளுக்கு முதல்வர் விஜய் போட்ட பதிவு! -
ராஜாக்கள் மந்திரியானால் இப்படித்தான்! டி.ஆர்.பி ராஜாவுக்கு எதிராக கிளம்பிய மா.செ.க்கள்! -
ஏற்கனவே கொதிக்குது.. ஆத்திரத்தில் திமுக! தூபம் போட்ட துரை! பனையூருக்கு பறக்கும் எழும்பூர் எக்ஸ்ப்ரஸ் -
திமுகவுடன் உறவு தொடரும்.. கம்யூனிஸ்ட்கள் அதிரடி முடிவு.. சண்முகம் பளீச்.. விஜய் ஷாக் -
MDMK quit?: திமுக கூட்டணியில் மதிமுக தொடருமா? கிளைமாக்ஸ் ஜூன் 27-ஆம் தேதி? -
உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட திமுக நிர்பந்தித்தது! ஜூன் 27ல் முக்கிய முடிவு! கொதித்து பேசிய வைகோ -
கை கால் ஆட்டி பேசி..சட்டமன்றத்தில் எங்க போச்சு BRO உங்க BODY LANGUAGE விஜய்யை விடாமல் அடித்த ஆ.ராசா! -
திமுகவை குறை கூறுவதால்.. சட்டம் ஒழுங்கு பிரச்சனையை மக்கள் மறக்க மாட்டார்கள்.. கனிமொழி கொடுத்த பதில்!












Click it and Unblock the Notifications