அரசியல் கறை படியாதவர்.. எல்லோரையும் முன்னேற்றியவர்.. வசந்த குமார் மறைவு.. கமல்ஹாசன் இரங்கல்!
சென்னை: நடுத்தரக் குடும்பங்களின் வலியறிந்து, வியாபாரத்தை வளர்த்தவர் எம்பி வசந்த குமார் என்று மக்கள் நீதி மய்யம் தலைவர் நடிகர் கமல்ஹாசன் இரங்கல் தெரிவித்துள்ளார்.
காங்கிரஸ் எம்பி வசந்த குமாரின் மறைவிற்கு வரிசையாக தலைவர்கள் இரங்கல் தெரிவித்து வருகிறார்கள். எல்லோருடனும் இயல்பாக, நட்பாக பழக கூடியவர் வசந்த குமார். அரசியல் கடந்த பலரோடு நட்பாக பழக கூடியவர் வசந்த் குமார்.

கன்னியாகுமரி நாடாளுமன்ற எம்பி வசந்த் குமார் கொரோனா காரணமாக பாதிக்கப்பட்டு அதற்கு சிகிச்சை பெற்று வந்தார். இன்று அவரின் உடல்நிலை மோசம் அடையவே சென்னையில் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி மரணம் அடைந்தார்.
இவரின் மறைவிற்கு திரையுலகிலும், அரசியல் உலகிலும் பலரும் இரங்கல் தெரிவிக்கும் நிலையில் மக்கள் நீதி மய்யம் தலைவர் நடிகர் கமல்ஹாசன் இரங்கல் தெரிவித்துள்ளார்.
கமல்ஹாசன் தனது டிவிட்டில், நடுத்தரக் குடும்பங்களின் வலியறிந்து, வியாபாரத்தை வளர்த்தவர். தன்னுடைய வளர்ச்சியோடு தன்னை சுற்றியிருந்தோரையும் முன்னேற்றியவர். அரசியலிலும் கறை படியாது வாழ்ந்து, மறைந்த திரு. வசந்தகுமார் அவர்களின் மறைவு தமிழகத்திற்கே இழப்பு, என்று மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.
-
மதசார்பற்ற கொள்கை.. மாநில உரிமைகளில் சமரசமே கிடையாது.. மீண்டும் அழுத்தமாக சொன்ன முதல்வர் விஜய் -
CBSE: மொபைல்களில் ஸ்கேன் செய்யப்பட்ட விடைத்தாள்கள்! குற்றச்சாட்டுகளை அடுக்கும் ராகுல் காந்தி! -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்!












Click it and Unblock the Notifications