Air India flight: சென்னையில் ஜஸ்ட் மிஸ்ஸில் உயிர் தப்பிய எம்பிக்கள்.. மரண பயணத்தை காட்டிய ஏர் இந்தியா விமானம்!

Subscribe to Oneindia Tamil

சென்னை: ஏர் இந்திய விமானத்தில், காங்கிரஸ் மூத்த தலைவர் கே.சி.வேணுகோபால் மற்றும் எம்பிக்கள் சிலர் திருவனந்தபுரத்தில் இருந்து டெல்லி நோக்கி பயணித்திருந்தனர். இந்த விமானம் மிகப்பெரிய விபத்திலிருந்து தப்பியிருக்கிறது.

இதனால் விமானத்தில் பயணித்த எம்பிக்கள் உட்பட நூற்றுக்கணக்கான பயணிகள் பத்திரமாக தரையிறங்கியிருக்கின்றனர். சமீப காலமாக விமான பயணம் குறித்த அச்சம் எழுந்திருக்கும் நிலையில், ஏர் இந்தியா விமானம் விபத்திலிருந்து தப்பியிருப்பதாக தகவல் வெளியாகியிருப்பது, விமான பயணத்தின் மீதான அச்சத்தை அதிகரித்திருக்கிறது.

Air India flight KC Venugopal

இது குறித்து வேணுகோபால் தனது எக்ஸ் பக்கத்தில் தெரிவித்திருப்பதாவது, "திருவனந்தபுரத்தில் இருந்து டெல்லி செல்லும் ஏர் இந்தியா விமானம் AI 2455ல், நானும், பல நாடாளுமன்ற உறுப்பினர்களும், நூற்றுக்கணக்கான பயணிகளும் பயணித்த நிலையில், இன்று ஒரு பெரும் விபத்திலிருந்து அதிர்ஷ்டவசமாகத் தப்பியது.

தாமதமான புறப்பாடு ஒரு பயங்கரமான பயணமாக மாறியது. விமானம் புறப்பட்ட சிறிது நேரத்திலேயே, இதுவரை இல்லாத அளவுக்குக் கடுமையான காற்றழுத்தச் சரிவில் சிக்கியது. சுமார் ஒரு மணி நேரத்திற்குப் பிறகு, விமானி சிக்னல் கோளாறு காரணமாக விமானம் சென்னையை நோக்கித் திருப்பிவிடப்பட்டதாக அறிவித்தார்.

தரையிறங்குவதற்கு அனுமதி வேண்டி, கிட்டத்தட்ட இரண்டு மணிநேரம் விமானம் வட்டமிட்டது. முதல் முறை தரையிறங்க முயன்றபோது, அதே ஓடுபாதையில் மற்றொரு விமானம் இருந்ததாகக் கூறப்பட்டது. அந்த நொடியில், விமானியின் விரைவான முடிவால் விமானம் மீண்டும் மேலே உயர்த்தப்பட்டது, இதனால் விமானத்தில் இருந்த அனைவரின் உயிரும் காப்பாற்றப்பட்டது. இரண்டாவது முயற்சியில் விமானம் பாதுகாப்பாகத் தரையிறங்கியது.

நாங்கள் விமானியின் திறமையாலும், அதிர்ஷ்டத்தாலும் காப்பாற்றப்பட்டோம். பயணிகளின் பாதுகாப்பு அதிர்ஷ்டத்தைச் சார்ந்து இருக்கக்கூடாது. இந்தச் சம்பவத்தை அவசரமாக விசாரித்து, பொறுப்பானவர்கள் மீது நடவடிக்கை எடுக்கவும், இதுபோன்ற தவறுகள் மீண்டும் நடக்காமல் இருக்கவும், விமான போக்குவரத்து ஆணையம் மற்றும் அமைச்சகத்தை நான் கேட்டுக்கொள்கிறேன்" என தெரிவித்திருக்கிறார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+