யார் இந்த "மிஸ்டர் வேர்ல்டு" மணிகண்டன்.. பல பெண்களா? தீவிரமாக தேடும் போலீஸ்
சென்னை: திருமணம் செய்துகொள்வதாகக் கூறி பல பெண்களை ஏமாற்றியதாக எழுந்த புகாரில் "மிஸ்டர் வேர்ல்டு" மணிகண்டன் மீது சென்னை எஸ்ஆர்எம்சி அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார் நான்கு பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
2019ம் ஆண்டு "மிஸ்டர் வேர்ல்டு" பட்டம் பெற்றவர் மணிகண்டன். இவர் அப்போது இந்தியா முழுவதும் பேசப்படும் பிரபலமாக மாறினார். அதன்பின்னர், இன்ஸ்டாவில் 2கே கிட்ஸ் மத்தியில் பிரபலமாக மாறிய மணிகண்டன் சொந்தமாக அம்பத்தூரில் தனியாக ஜிம் வைத்து நடத்தி வருகிறார்.

இந்நிலையில் கடந்த 2021ஆம் ஆண்டு மணிகண்டன் ஏற்கனவே கவிதா என்ற ஒரு பெண்ணை திருமணம் செய்துக்கொண்டு சந்தியா என்ற பெண்ணுடன் நெருங்கி பழகி பணமோசடியில் ஈடுபட்டதாக கூறி பூந்தமல்லி அனைத்து மகளிர் போலீசார் மணிகண்டனை கைது செய்து சிறையில் அடைத்தனர். இதனிடையே மணிகண்டன் ஜிம்மிற்கு வரும் பெண்களையும், இன்ஸ்டாகிராமிலும் உடலமைப்பை காட்டி மயக்கி பெண்களிடம் பணம் பறிப்பதை வாடிக்கையாக வைத்திருந்ததாக போலீஸில் புகார் அளித்த சந்தியா என்பவர் குற்றம்சாட்டி இருந்தார்.
இதனையடுத்து சிறையில் இருந்த தனது கணவர் மணிகண்டனை கவிதா ஜாமீனில் வெளியே எடுத்துள்ளார்.. கடந்த 2022ஆம் ஆண்டு சிறையில் இருந்து ஜாமீனில் வெளியே வந்த மணிகண்டன் தனது மனைவி கவிதாவுடன் வசித்து வந்துள்ளார். இதனிடையே மீண்டும் தனது லீலைகளை மணிகண்டன் ஆரம்பித்ததாக புகார் எழுந்தது. இதனிடையே கடந்த மாதம் மனைவி கவிதா யூடியூப்பில் கணவர் மணிகண்டன் கலந்து கொண்ட நிகழ்ச்சியை பார்த்த போது தனது மனைவி என வேறொரு பெண்ணை மணிகண்டன் காண்பித்தாராம்.
இதனால் அதிர்ச்சி அடைந்த கவிதா நியாயம் கேட்ட போது, மணிகண்டன் மிரட்டினாராம். இதனால் விரக்தி அடைந்த கவிதா ஆவடி காவல் ஆணையர் அலுவலகத்தில் மணிகண்டன் மீது புகார் கொடுத்திருக்கிறார். ஆனால் புகார் மீது போலீசார் நடவடிக்கை எடுக்கவில்லையாம். இதனிடையே கணவர் மணிகண்டன் கவிதாவிடம் புகாரை வாபஸ் பெறுமாறு மிரட்டி வந்தாராம். இதனால் மனமுடைந்த கவிதா, கணவன் மற்றும் அவரது குடும்பத்தினர் கொடுமை காரணமாக தற்கொலை கடிதம் எழுதி வைத்துவிட்டு கடந்த 3 வாரம் முன்பு தூக்க மாத்திரைகளை உட்கொண்டு தற்கொலைக்கு முயன்றுள்ளார்.
இதனிடையே ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த அவர், . மணிகண்டன் மீது வரதட்சணை கொடுமை மற்றும் தன்னை விட்டு வேறொரு திருமணம் செய்து கொண்டு மோசடி செய்ததாக ஆவடி காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார். தனது வாழ்வில் நடந்ததாக பல்வேறு விஷயங்களை கவிதா குறிப்பிட்டிருந்த நிலையில், மோசடி செய்து சிறைக்கு சென்று வந்த பிறகு தன்னிடம் மன்னிப்பு கேட்டு சில மாதங்கள் முறையாக வாழ்ந்த மணிகண்டன், திடீரென போதைப் பழக்கத்திற்கு அடிமையாகி தன்னை அடிக்க ஆரம்பித்ததாக குற்றம்சாட்டினார். முறையாக உடற்பயிற்சி மையத்தை கவனிக்காததால் காலி செய்ய வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டதாகவும், தற்போது அம்மா வீட்டிற்கு வந்து மணிகண்டனை பிரிந்து வாழ்ந்ததாகவும், பல பெண்களிடம் தனது கணவருக்கு தொடர்பு உள்ளதாகவும் கவிதா புகாரில் கூறியிருந்தார்..
இதனிடையே இந்த பிரச்சனையில் சிறை சென்று ஜாமினில் வெளியே வந்த மணிகண்டனை போலீசார் மீண்டும் தேடி வருகிறார்கள்.ஏனெனில் திருமணம் செய்துகொள்வதாகக் கூறி பல பெண்களை ஏமாற்றியதாக எழுந்த புகாரில் "மிஸ்டர் வேர்ல்டு" மணிகண்டன் மீது சென்னை எஸ்ஆர்எம்சி அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார் நான்கு பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
-
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது? -
இடைத்தேர்தலில் பொது வேட்பாளர்களை நிறுத்தி வெற்றி பெறச் செய்வோம்.. விஜய்க்கு அன்புமணி எச்சரிக்கை -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
எடப்பாடி வீட்டிற்கு வந்த எஸ்பி வேலுமணி.. சிவி சண்முகம் மட்டும் மிஸ்ஸிங்.. தனித்துவிடப்படுகிறாரா?












Click it and Unblock the Notifications