ஒய்ஜி மகேந்திரனின் தாயார் ராஜலட்சுமி பார்த்தசாரதி உடல் நலக்குறைவால் காலமானார்
Recommended Video
சென்னை: ஒய்ஜி மகேந்திரனின் தாயார் ராஜலட்சுமி பார்த்தசாரதி உடல்நலக்குறைவால் இன்று சென்னை அப்போலோ மருத்துவமனையில் காலமானார்.
சென்னை பத்ம சேஷாத்திரி பால பவன் பள்ளி நிறுவனர் ராஜலட்சுமி பார்த்தசாரதி. வயது 93. உடல்நலக்குறைவு காரணமாக சென்னை கிரிம்ஸ் ரோடு அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருந்தார். இந்நிலையில் மாரடைப்பு காரமணாக ராஜலட்சுமி பார்த்தசாரதி இன்று காலமானார்.

ராஜலட்சுமி பார்த்தசாரதியின் உடல் சென்னை திநகரில் உள்ள பத்ம சேஷாத்திரி பால பவன் பள்ளியில் பொதுமக்களின் அஞ்சலிக்காக வைக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இறுதி சடங்குகள் நாளை மாலை 4 மணிக்கு சென்னை பெசன்ட் நகரில் நடைபெறும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
. Legend Smt Rajalakshmi Parthasarathy age93 mother of Actor #Ygmahendra passes away today. Cremation tomorrow at 4 PM ..
— RIAZ K AHMED (@RIAZtheboss) August 6, 2019
May her soul rest in peace 🙏🏽 pic.twitter.com/OcxY49BLFh
இவர் கடந்த 1958ம் ஆண்டு இந்த பள்ளியை துவக்கி நடத்தி வருகிறார். இவர் பள்ளி நடத்தும் முன்பு செய்தியாளராக பணியாற்றி உள்ளார்
மறைந்த ஒய்ஜி பார்த்த சாரதியின் மனைவியான ராஜலட்சுமி பார்த்தசாரதிக்கு ஒய்ஜி மகேந்திரன் மற்றும் ஒய்ஜி ராஜேந்திரன் என இரண்டு மகன்கள் உள்ளனர். ஒய்ஜி மகேந்திரன் பிரபல நடிகர் ஆவார். இவர் நடிகர் ரஜினிகாந்தின் நெருங்கிய நண்பரும் ஆவார். மறைந்த பிரபல இயக்குனர் பாலாஜி ராஜலட்சுமி பார்த்தசாரதியின் சகோதரர் ஆவார். ராஜலட்சுமி பார்த்தசாரதியின் கல்விச்சேவை பாராட்டி மத்திய அரசு பத்மஸ்ரீ விருது கொடுத்து கௌரவித்துள்ளது
ராஜலட்சுமி பார்த்தசாரதியின் மறைவுக்கு அரசியல் பிரமுகர்கள், திரை உலகினர் உள்பட பலரும் இரங்கல் தெரிவித்து வருகிறார்கள்.












Click it and Unblock the Notifications