எம்எஸ்எம்இ பந்த்.. ஒரே நாளில் ரூ.9000 கோடி போச்சு.. தமிழக அரசு பேச்சுவார்த்தை.. நல்ல செய்தி வருமா?
சென்னை: வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ள சிறு, குறு நிறுவனங்களுடன் அமைச்சர் தா.மோ.அன்பரசன் இன்று பேச்சுவார்த்தை நடத்தவுள்ளார். சிட்கோ வளாகத்தில் பேச்சுவார்த்தை நடைபெறவுள்ளது. தொழில்துறையினருக்கு உயர்த்திய மின்கட்டணத்தை திரும்பப் பெறுதல் உள்ளிட்ட 6 கோரிக்கையை வலியுறுத்தி நடைபெற்ற போராட்டம் காரணமாக ஒரே நாளில் ரூ. 9000 கோடி அரசுக்கு இழப்பு ஏற்பட்டது.
தொழில்துறையினருக்கு உயர்த்திய மின்கட்டணத்தை திரும்பப் பெறுதல் உள்ளிட்ட 6 கோரிக்கையை வலியுறுத்தி மாநிலம் முழுவதும் தமிழ்நாடு தொழில் அமைப்புகள் சார்பில் நேற்றைய தினம் ஒரு நாள் வேலை நிறுத்த போராட்டம் நடத்தினர்.

40,000 சிறு,குறு, நடுத்தர தொழில் நிறுவனங்கள் மாநிலம் முழுவதும் இந்த வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டன. ஈரோட்டில் தமிழ்நாடு தொழில்துறை மின்நுகர்வோர் கூட்டமைப்பினர் வேலைநிறுத்தத்திலும், பண்ருட்டியில் 300க்கும் மேற்பட்ட முந்திரி தொழிற்சாலைகளும் மூடப்பட்டன.
மதுரையில் சிறு, குறு தொழில் நிறுவனங்கள் போராட்டத்தில் பங்கேற்றன. திருப்பூரில் பனியன், நிட்டிங், பிரிண்டிங் என 10,000 நிறுவனங்கள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டன. சென்னை, மதுரை, ஈரோடு, கோவை, நாமக்கல், திருவள்ளூர், திருப்பூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருச்சி, உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் வேலை நிறுத்தப்போராட்டம் நடைபெற்றது. இந்த வேலை நிறுத்தப்போராட்டம் காரணமாக தமிழ்நாடு முழுவதும் ரூ.9000 கோடி உற்பத்தி இழப்பு ஏற்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.
இதனையடுத்து சிறு, குறு நிறுவனங்கள் போராட்டம் குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உடன் அமைச்சர் தா.மோ.அன்பரசன் ஆலோசனை மேற்கொண்டார். தொழில் நிறுவனங்களுக்கு மேலும் சலுகைகள் அறிவிக்கலாமா என்பது குறித்து ஆலோசனை செய்ததாக தகவல் வெளியானது.
இந்த நிலையில் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ள சிறு, குறு நிறுவனங்களுடன் அமைச்சர் தா.மோ.அன்பரசன் இன்று பேச்சுவார்த்தை நடத்தவுள்ளார். சிட்கோ வளாகத்தில் பேச்சுவார்த்தை நடைபெறவுள்ளது. பேச்சுவார்த்தைக்குப் பிறகு மின்கட்டண குறைப்பு பற்றிய அறிவிப்பு வெளியாகலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
-
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம் -
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது? -
இடைத்தேர்தலில் பொது வேட்பாளர்களை நிறுத்தி வெற்றி பெறச் செய்வோம்.. விஜய்க்கு அன்புமணி எச்சரிக்கை -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை!












Click it and Unblock the Notifications