சென்னை விமான நிலையத்திலிருந்து கிளாம்பாக்கம், இசிஆருக்கு மாநகர பேருந்துகள்! இனி பேரமே பேச வேண்டாம்

Subscribe to Oneindia Tamil

சென்னை: சென்னை விமான நிலையத்தில் இருந்து வரும் பயணிகளின் வசதிக்காக மாநகர பேருந்துகளை இயக்க வேண்டும் என்ற பயணிகளின் நீண்ட நாள் கோரிக்கை தற்போது நிறைவேற்றப்பட்டுள்ளது. விமான நிலையத்திலிருந்து அக்கரை வரையும், கிளாம்பாக்கம் வரையும் சென்னை மாநகர அரசு பேருந்துகள் நேற்று முதல் இயக்கப்பட்டு வருகின்றன.

airport

சென்னை விமான நிலையத்திற்கு நாள்தோறும் ஆயிரக்கணக்கான பயணிகள் வந்து செல்கிறார்கள். இவர்கள் தங்கள் சொந்த இடங்களுக்கு செல்ல பெரும்பாலும் டாக்ஸிகளையே நாட வேண்டிய நிலை இருந்தது. சிலர் தங்கள் உறவினர்களை வரவழைத்து அவர்களது வாகனங்களில் செல்வர்.

பலர் அங்கிருக்கும் டாக்ஸிகளிலேயே தங்களது வீடுகளுக்கும் உறவினர்கள் வீடுகளுக்கும் பயணிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் டாக்ஸி டிரைவர்கள் அதிக அளவில் பணம் வாங்குவதாக குற்றச்சாட்டு எழுந்தது. அப்படி கொடுக்காமல் பேரம் பேசினால் அவர்கள் பயணிகளை தரக்குறைவாக பேசுவதாகவும் சொல்லப்பட்டது.

அரசு பேருந்துகள்

இதனால் சென்னை விமான நிலையங்களில் இருந்து அரசு பேருந்துகளை இயக்கினால் உதவியாக இருக்கும் என நீண்ட காலமாக கோரிக்கை விடுக்கப்பட்டது. அதன்பேரில் விமான நிலையத்தில் இருந்து கிளாம்பாக்கம், ஓம்ஆர், இசிஆர் அக்கரைக்கு மாநகர பேருந்துகளை இயக்க தமிழக அரசு திட்டமிட்டது.

விமான நிலையம் டூ கிளாம்பாக்கம்

அதன்படி எம்ஏஏ 1 (சென்னை விமான நிலையம் டூ கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் வரை) 8 பேருந்துகள் 15 நிமிட இடைவெளியில் இயக்கப்படுகிறது. பல்லாவரம், குரோம்பேட்டை, தாம்பரம், வண்டலூர் உள்ளிட்ட பகுதிகள் வழியாக செல்லும்.

ஏர்போர்ட் டூ அக்கரை

அது போல் தடம் எண் எம்ஏஏ 2 (சென்னை விமான நிலையம் டூ அக்கரை இசிஆர் சாலை) 7 பேருந்துகள் 30 நிமிட இடைவெளியில் இயக்கப்படுகிறது. இது பல்லாவரம், 200 அடி ரேடியல் ரோடு, ஓஎம்ஆர் சாலை, துரைப்பாக்கம், சோழிங்கநல்லூர் வழியாக இயக்கப்படுகிறது.

விமான நிலையம் - அக்கரை

சென்னை விமான நிலையம்- அக்கரை இடையே மாநகர பேருந்து ஒவ்வொரு 30 நிமிட இடைவெளியில் இயக்கப்படுகிறது. இந்த பேருந்து, சென்னை விமான நிலையத்தில் இருந்து புறப்பட்டு, பல்லாவரம், பல்லாவரம் மேம்பாலம் வழியாக, கீழ்கட்டளை சந்திப்பு, ஈச்சங்காடு, பள்ளிக்கரணை சந்திப்பு, துரைப்பாக்கம், ஓஎம்ஆர் சாலை, இசிஆர் சாலை வழியாக அக்கரை செல்ல இருக்கிறது.

புதிய மாநகர பேருந்துகள்

இந்த புதிய மாநகர பேருந்துகள் இயக்கப்படுவதால் பயணிகளுக்கு மிகுந்த வசதியாக இருக்கும் என்று கூறப்படுகிறது. மேலும் இந்த பேருந்துகள் இரவு பகல் என்று 24 மணி நேரமும் இயக்கப்படும் என தெரிகிறது. இந்த பேருந்துகளை நேற்றைய தினம் அமைச்சர் தாமோ அன்பரசன் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

ஆதம்பாக்கம் என்ஜிஓ

மேலும் ஆதம்பாக்கம் என்ஜிஓ காலனியில் இருந்து கிளாம்பாக்கம் கலைஞர் நுற்றாண்டு பேருந்து முனையம், தாம்பரத்திலிருந்து தெற்கு மலையம்பாக்கம் மற்றும் அனகாபுத்தூரிலிருந்து - பிராட்வே உள்ளிட்ட வழித்தடங்களிலும் தடம் எண் 66M தாம்பரத்திலிருந்து தெற்கு மலையம்பாக்கம் வரை 1 மகளிர் விடியல் பயண பேருந்து (வழி- பல்லாவரம், அனகாபுத்தூர், குன்றத்தூர், கொல்லச்சேரி, 400 அடி சாலை, மலையம்பாக்கம்) இயக்கப்படுகிறது. தடம் எண்.18எஸ் ஆதம்பாக்கம் என்ஜிஓ காலனி பேருந்து நிலையத்திலிருந்து - கிளாம்பாக்கம் வரை 2 மகளிர் விடியல் பயண பேருந்துகள் (வழி- கக்கன் பாலம், பிருந்தாவன் நகர், வானுவம்பேட்டை, தில்லை கங்கா நகர், மீனம்பாக்கம், தாம்பரம்) இயக்கப்படுகிறது. தடம் எண்.60 அனகாபுத்தூரிலிருந்து பிராட்வே வரை 1 மகளிர் விடியல் பயண பேருந்து (வழி- பல்லாவரம், மீனம்பாக்கம், கிண்டி, சைதாப்பேட்டை, நந்தனம் தேனாம்பேட்டை) இயக்கப்படுகிறது.

பெங்களூர், ஹைதராபாத்திலும்

இது போல் விமான நிலையங்களில் நீண்ட தூரம் செல்லும் பயணிகளிடம் கட்டண கொள்ளையை தடுக்க பெங்களூர், ஹைதராபாத் விமான நிலையங்களில் அரசு பேருந்துகள் இயக்கப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+