சட்டென களம் இறங்கிய எம்டிசி.. இதுதான் சூப்பர் முடிவு.. சென்னை சிந்தாதிரிப்பேட்டையில் விறுவிறுப்பு
சென்னை: சென்னையில் சிந்தாதிரிப்பேட்டை- வேளச்சேரி இடையே மட்டுமே பறக்கும் ரயில் இயக்கப்படுவதால், சென்ட்ரல் மற்றும் சிந்தாதிரிப்பேட்டை ரயில் நிலையங்களில் மக்கள் கூட்டம் அலைமோதுகிறது.பயணிகளின் வசதிக்காக, நேற்று முதல் கூடுதல் பேருந்து சேவைகளை சென்னை மாநகர போக்குவரத்து கழகம் இயக்கி வருகிறது.
சென்னை எழும்பூர் - கடற்கரை இடையே 4-வது புதிய ரயில் பாதை அமைக்கும் கடந்த 27ம் தேதி முதல் தொடங்கியது. கடற்கரை மற்றும் வேளச்சேரி இடையேயான பறக்கும் ரயில் வழித்தடத்தை ஒட்டியே 4வது ரயில் பாதை அமைக்கப்படுவதால் வேளச்சேரி - கடற்கரை பறக்கும் ரயில் வழித் தடத்தில் கடற்கரை - சிந்தாதிரிப்பேட்டை இடையே ரயில் சேவை ரத்து செய்யப்பட்டுள்ளது.

இப்போது பறக்கும் ரயில்கள் வேளச்சேரியில் இருந்து சிந்தாதிரிப்பேட்டை வரை மட்டுமே இயக்கப்படுகின்றன. வேளச்சேரி - சிந்தாரிப்பேட்டை வழித்தடத்தில் காலை மற்றும் மாலை நேரங்களில் பீக் அவர்ஸ் எனப்படும் நேரங்களில் 25 நிமிடங்களுக்கு ஒரு முறையும், மற்ற நேரங்களில் அரைமணி நேரத்திற்கு ஒருமுறையும் ரயில்கள் இயக்கப்படுகிறது. 120 ரயில் சேவைகள் தடலாடியாக 80 சேவைகளாக குறைக்கப்பட்டுள்ளது. இதனால் பயணிகள்க கடும் அவதி அடைந்துள்ளனர். சேப்பாக்கம் மற்றும் சிந்தாதிரிப்பேட்டை இடையே ஒருவழியில் மட்டுமே ரயில்களை இயக்க முடியும் என்பதால் ரயில் சேவை குறைக்கப்பட்டுள்ளது.
ரயில் சேவை குறைக்கட்ட காரணத்தால் சிந்தாதிரிப்பேட்டை ரயில் நிலையத்தில் காலை, மாலையில் பயணிகள் கூட்டம் அலைமோதுகிறது. இந்நிலையில் பொதுமக்களின் கூட்ட நெரிசலை குறைக்க பீக் அவர்ஸில், 10 நிமிடத்துக்கு ஒரு ரயில் சேவை இயக்க வேண்டும் என்று கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. மேலும் ரயிலை விட்டு இறங்கிய உடன் அதிக பயணிகள் எழும்பூர் அல்லது சென்டரல் செல்வார்கள் என்றால் அந்த பகுதிக்கு கூடுதல் பேருந்துகளை இயக்கவும் பயணிகள் கோரிக்கை விடுத்தனர்.
இந்நிலையில் பயணிகளின் கோரிக்கையை ஏற்று சிந்தாதிரிப்பேட்டை ரயில் நிலையத்தில் இருந்து நேற்று காலை முதல் கூடுதலாக 80 பேருந்து சேவைகள் அதிகரித்துள்ளது மாநகர போக்குவரத்து கழகம்.

இதுகுறித்து மாநகர போக்குவரத்து கழக அதிகாரிகள் கூறும் போது, சிந்தாதிரிப்பேட்டை மற்றும் சென்ட்ரல் மற்றும் எழும்பூரில் இருந்து பயணிகளுக்கு தடையின்றி பேருந்து வசதி கிடைக்க உரிய ஏற்பாடு செய்துள்ளோம். ஏற்கெனவே, சிந்தாதிரிப்பேட்டை ரயில் நிலையம் வழியாக சென்ட்ரல், பாரிமுனை, திருவொற்றியூர், அண்ணாசதுக்கம், கடற்கரை நிலையம் வழியாக தினமும் 391 பேருந்துகள் இயக்கப்படுகிறது.
இதுதவிர, சிந்தாதிரிப்பேட்டை ரயில் நிலையத்தில் இருந்து கடந்த 27-ம் தேதி முதல் சென்ட்ரல், கோட்டை, சென்னை கடற்கரை ரயில் நிலையத்தை இணைக்கும் வகையில் தினமும் 140 சேவைகள் கூடுதலாக இயக்கி வருகிறது.
இருப்பினும், பயணிகள் கூட்டம் அதிகமாக இருப்பதால், 29-ம் தேதி(நேற்று) காலை முதல் 80 சேவைகள் அதிகரித்து, 220 பேருந்து சேவைகளாக இயக்கி வருகிறது. இன்னும் அதிகமாக பேருந்து சேவைகள் தேவை என்றாலும் இயக்க தயாராக உள்ளோம். தேவைக்கு ஏற்ப, பேருந்து சேவைகள் அதிகரிப்போம்" என்றார்.
-
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
எல்லாமே முக்கிய தலைகள் ஆச்சே.. விஜய் முன்னிலையில்.. மொத்தமாக தவெகவில் இணையும் அதிமுக தலைவர்கள்! -
திருவண்ணாமலை செய்யாறு வீடுகளில் மின்சார மீட்டர்கள் பழுதுக்கு அணில் காரணம்.. மின்சார வாரியம் பதில் -
கேட்கும்போதே நெஞ்சம் உறைகிறது.. சஹாரா பாலைவன மணலில் பழுதான லாரி. தாகத்துடன் அநியாயமாய் மாண்ட 49 பேர் -
விழுப்புரத்தில் திருமாவளவன் திறக்க இருந்த அம்பேத்கர் சிலை.. இரவோடு இரவாக அகற்றப்பட்டது ஏன்? -
சென்னை ரோட்டை கண்ணில் ஒத்திக்கலாம்.. பெங்களூர் நிலைமை படுமோசம்.. டிகே சிவகுமார் என்ன செய்வார்? -
"திமுக இல்லாதது கவலையளிக்கிறது.." ரொம்பவே வருத்தப்பட்டு பேசிய திருமாவளவன்.. என்ன மேட்டர்? -
வாண்டடா வண்டில ஏறிய செ.பா! ஹார்ட் டிஸ்க் திருட்டு என்றதும் பதற்றம் ஏன்? சிடிஆர் நிர்மல்குமார் கேள்வி -
விலகிய 113 ஒன்றிய செயலாளர்கள்.. தவெகவின் ஆபரேஷனால் மிரண்ட அறிவாலயம்! ஸ்டாலின் எடுத்த முக்கிய முடிவு -
"16 ஆண்டுகளுக்கு பின் தாய் வீட்டிற்கு.." வேல்முருகன் எமோஷ்னலாக சொல்ல.. சட்டென குறுக்கிட்ட அன்புமணி -
அதிமுக + திமுகவிற்கு ஷாக்.. 4 மாஜி அமைச்சர்கள் - 8 எம்எல்ஏக்கள் உள்பட 60 பேர் தவெகவில் ஐக்கியம் -
அன்னைக்கே சொன்னாரே டிடிவி தினகரன்! நெருங்கும் கிளைமாக்ஸ்? பாஜக ஸ்கெட்ச்? கொத்து கொத்தாக ஓடும் தலைகள்












Click it and Unblock the Notifications