இனி பஸ், மின்சார ரயில், மெட்ரோ ரயிலில்.. பயணிக்கும் முறை மாறுது! நடத்துநர்கள் தரப்போகும் சர்ப்ரைஸ்
சென்னை: பெருநகரப் போக்குவரத்துக் கழகம் (MTC) விரைவில் சிங்கார சென்னை அட்டைகளை பேருந்து நடத்துநர்களிடமிருந்தே நேரடியாக வாங்க பயணிகளுக்கு அனுமதி வழங்கவுள்ளது. இதன் மூலம் அட்டைகளின் பயன்பாடு எளிதாகும்.
சிங்கார சென்னை அட்டை
தேசிய பொது போக்குவரத்து அட்டை (NCMC) திட்டத்தின் கீழ் அறிமுகப்படுத்தப்பட்ட இந்த அட்டை, எம்.டி.சி பேருந்துகள் மற்றும் சென்னை மெட்ரோ ரயில்களில் ஒரே அட்டையைப் பயன்படுத்தி பயணிக்க வழிவகை செய்கிறது.

இதுவரை கிட்டத்தட்ட 50,000 அட்டைகள் வழங்கப்பட்டுள்ளன. எஸ்பிஐ மற்றும் ஏர்டெல் நிறுவனங்கள் இந்த அட்டைகளை வெளியிடுகின்றன. அடுத்த மாதம் முதல் நடத்துநர்கள் மூலம் இந்த அட்டைகள் விநியோகிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நடவடிக்கை தினசரி பயணிகளுக்கு மிகவும் பயனுள்ளதாக அமையும். இது போக சென்னையில் போக்குவரத்தை எளிமையாக்க புதிய செயலி விரைவில் அறிமுகம் செய்யப்பட உள்ளது.
சென்னையில் மாநகர பேருந்துகள், புறநகர் மின்சார ரயில்கள், மெட்ரோ ரயில் என அனைத்திலும் ஒரே டிக்கெட்டில் பயணிக்கும் வகையில் புதிய செயலியை அடுத்த மாத இறுதியில் அறிமுகம் செய்கிறது CUMTA. இந்த செயலி மூலம் எந்தெந்த பகுதிகளுக்கு எப்படி செல்ல வேண்டும், எந்த வகை போக்குவரத்தை பயன்படுத்தினால் விரைவாக செல்ல முடியும் என்பது உள்ளிட்ட பல்வேறு தகவல்கள் APP-ல் இடம் பெறும் என தகவல் வெளியாகி உள்ளது.
சென்னையில் பேருந்து, புறநகர் ரயில், மெட்ரோ ரயில் என்று அனைத்திலும் பயணம் செய்ய ஒரே டிக்கெட் கொண்டு வரப்பட்டு உள்ளது. இதற்காக தனியாக செயலி உருவாக்க சென்னை ஒருங்கிணைந்த போக்குவரத்து குழுமம் டெண்டர் விடப்பட்ட நிலையில், அந்த பணிகள் முடிந்துள்ளன. QR கோடு மூலம் அனைத்து பொது போக்குவரத்துகளிலும் ஒரே டிக்கெட்டில் பயணம் செய்யலாம் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.
பஸ் டிக்கெட்
அதன்படி முதல் கட்டமாக சென்னை மாநகரப் போக்குவரத்துக் கழகப் பேருந்துகளுக்கு ஜூலை முதல் வாரத்தில் தானியங்கி பயணச்சீட்டு வழங்கும் முறை கொண்டு வரப்பட்டு உள்ளது. வரும் நாட்களில் மற்ற நகரங்களுக்கு இந்த திட்டம் விரிவுபடுத்தப்படும்.
2025 ஆம் ஆண்டு ஜூலை மாதத்திற்குள் சென்னையில் உள்ள பேருந்துகளில் எல்லாம் பயணிகள் தகவல் அமைப்பு வழங்கப்படும். அதாவது பேருந்துகளில் தானியங்கி மூலம் எந்த நிறுத்தம் என்ற அறிவிப்பு வெளியிடப்படும். இது போக உலக வங்கி மற்றும் ஜெர்மன் வங்கியான KfW ஆகியவற்றிலிருந்து நிதியுதவியுடன் 1,500 மின்சார பேருந்துகளை வாங்க திட்டமிட்டுள்ளதாகவும் மாநகராட்சி நிர்வாக இயக்குனர் கூறுகிறார்.
சென்னை மாநகர மதிப்பீட்டின்படி, சென்னை மாநகரப் போக்குவரத்து அமைப்புக்கு மொத்தம் 5,000 பேருந்துகள் தேவைப்படுவதாகவும், இதனால் பேருந்துகள் எண்ணிக்கையை அதிகரிக்கும் செயல்முறை தொடங்கப்பட்டுள்ளதாகவும் MTC நிர்வாகம் தெரிவித்துள்ளது.
புதிய டிக்கெட் முறை
அதன்படி விரைவில் பயணிகளுக்கு பயணிகள் தகவல் அமைப்பு (பிஐஎஸ்) வழங்கப்படும். அதேபோல் தானியங்கி டிக்கெட் அமைப்பும் வழங்கப்படும். பேருந்துகளில் இருக்கும் கருவி ஒன்றை ஸ்கேன் செய்து நாம் டிக்கெட் எடுக்கலாம். மாநகர பேருந்து கார்டுகள் எதிர்காலத்தில் வழங்கப்படும். அதை இதில் டேப் செய்தும் டிக்கெட் எடுக்கலாம்.
நாம் செல்லும் தூரத்திற்கு ஏற்றபடி டிக்கெட் வழங்கப்படும். வெளிநாடுகளில் இப்படி டேப் செய்யும் முறை ஏற்கனவே அமலில் உள்ளது. அதே முறை சென்னையிலும் கொண்டு வரப்பட உள்ளது.
மெட்ரோ வழங்க உள்ள ஸ்மார்ட் கார்டுகளை இப்படிப்பட்ட பேருந்துகளிலும் பயன்படுத்தும் வசதி விரைவில் வர உள்ளது. சென்னையில் ஒரு இடத்தில் இருந்து இன்னொரு இடத்திற்கு செல்ல பேருந்து, மெட்ரோ, மின்சார ரயில் உள்ளிட்ட மூன்று ஆப்ஷன்கள் மக்களுக்கு உள்ளன. ஆனால் இது மூன்றிற்கும் மக்கள் தனி தனியாக டிக்கெட் எடுத்து வருகிறார்கள். மக்கள் தனித்தனியாக பயணச்சீட்டு பயன்படுத்தும் நிலையில் இவை அனைத்துக்கும் ஒரே பயணச்சீட்டை பயன்படுத்தும் முறையை கொண்டு வர தமிழ்நாடு அரசு முடிவு செய்துள்ளது. அதாவது ஒரே டிக்கெட்டை பயன்படுத்தி இந்த மூன்றிலும் பயணிக்க முடியும்.
-
அப்போ உரிமை தொகை நிறுத்தப்படுமா? "தமிழக நிதி நிலைமை மோசம்! ஆனால்.." நிதியமைச்சர் கொடுத்த விளக்கம் -
இனி யாரும் தப்ப முடியாது.. 16 நாட்களில் 16 ஆயிரம் வழக்குகள்.. ரூ.3.13 கோடி வசூல்! -
தமிழ்நாடுக்கு போட்டியாக கிளம்பிய குஜராத்.. விஜய்-க்கு நேரடி சவால்! -
ஆண்டுக்கு ரூ.67,000 கோடி வட்டி கட்டும் தமிழ்நாடு.. வெள்ளை அறிக்கையில் தகவல் -
நடுக்கடலில் உயிரிழந்த தமிழக மாலுமி.. 3 நாட்களுக்கு பிறகு ஒரு வழியாக மீட்கப்பட்ட உடல்! என்ன நடந்தது? -
"தமிழ்நாட்டின் வருவாயில் 3-ல் 1 ரூபாய் வட்டிக்கு மட்டுமே செல்கிறது.." வெள்ளை அறிக்கை ரிப்போர்ட் -
மகாராஷ்டிரா, குஜராத், கர்நாடகாவைவிட தமிழக மொத்த உள்நாட்டு உற்பத்தி குறைவு.. வெள்ளை அறிக்கை -
4874 EV சார்ஜிங் நிலையங்கள் ரூ.2000 கோடியில்! தமிழகத்தில் எங்கே தெரியுமா? மத்திய அரசின் மாஸ் பிளான் -
ராஜ்மோகன் கொடுத்த நெத்தியடி.. தனியார் பள்ளிகளுக்கு செக்.. அரசியல் பலம், பண பலம் இனி வேலைக்கு ஆகாது! -
தமிழக நிதிநிலை கவலைக்கிடம்?.. கடன் வளர்ச்சி 14.3%.. வெள்ளை அறிக்கை தகவல் -
தமிழகத்தில் பிறக்கும் குழந்தையின் மீது கடன் சுமை! 4 முக்கிய காரணங்களை சொன்ன வெள்ளை அறிக்கை -
தவெகவின் வெற்றி தொலைக்காட்சி ஆரம்பம்.. அதிகாரப்பூர்வ அறிவிப்பு.. நாஞ்சில் சம்பத் வாழ்த்து












Click it and Unblock the Notifications