கேலி கிண்டல்களுக்கு செவிசாய்க்க வேண்டாம்...அதிமுகவை தோற்கடிப்பதே இலக்கு - கருணாஸ் கடிதம்
முக்குலத்தோர் புலிப்படை தொண்டர்களுக்கு உருக்கமான கடிதம் ஒன்றை எழுதியிருக்கிறார் கருணாஸ். சட்டசபைத் தேர்தலில் அதிமுகவை நிராகரிப்போம் என்றும் தெரிவித்துள்ளார்.
சென்னை: தேர்தலில் போட்டியிடாத சூழலில் நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் சோர்வடைய வேண்டாம் எனவும் இந்த அரசியல் வெற்றிடம் தரும் கேலி கிண்டல்களுக்கு செவிசாய்க்க வேண்டாம் எனவும் உருக்கமான கடிதம் ஒன்றை எழுதியிருக்கிறார் கருணாஸ். ஐந்தாண்டுகள் வீண் என சொல்லும் அரசியல் மூடர்களுக்கு செவி சாய்க்க வேண்டாம் எனவும் தெரிவித்துள்ளார். அதிமுகவை நிராகரித்து தோற்கடிப்பதே நமது இலக்கு என்றும் குறிப்பிட்டுள்ளார்.
கடந்த 2016ஆம் ஆண்டு சட்டசபைத் தேர்தலில் அதிமுகவின் இரட்டை இலை சின்னத்தில் போட்டியிட்டு வெற்றி பெற்றார் கருணாஸ். சசிகலா ஆதரவு நிலையில் இருந்த கருணாஸ்க்கு நடைபெற உள்ள சட்டசபைத் தேர்தலில் அதிமுக கூட்டணியில் இடம் கிடைக்கவில்லை. கூட்டணிக்கு அழைப்பார்கள் என்று எதிர்பார்த்த கருணாஸ், அதிமுக கூட்டணியில் இருந்து விலகினார்.
திமுகவிற்கு ஆதரவு தருவதாகவும் கூறினார். அங்கேயும் அழைப்பில்லாமல் போகவே, திமுக ஆதரவு நிலையையும் கை விட்டார். சட்டசபைத் தேர்தலில் போட்டியிடப்போவதில்லை என்றும் கூறியுள்ளார்.

கருணாஸ் கடிதம்
இந்த நிலையில் கருணாஸ் தனது ஆதரவாளர்களுக்கு உருக்கமான கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். நடைபெறவிருக்கின்ற சட்டசபைத் தேர்தலில் முக்குலத்தோர் சமுதாயத்திற்கு துரோகம் இழைத்த அண்ணா திமுகவை நிராகரித்து தோற்கடிக்க முக்குலத்தோர் புலிப்படை சபதமேற்று உள்ளது. இந்த தேர்தலில் முக்குலத்தோர் புலிப்படை சார்பாக யாரும் போட்டியிடவில்லை.

முக்குலத்தோர் வாக்குகள்
234 தொகுதிகளிலும் வசிக்கும் முக்குலத்தோர்களிடம் நமது கோரிக்கை அதிமுக எதிர்ப்பு உள்ளிட்டவை குறித்து சமூக வலைதளங்கள் , ஊடகங்கள் வழியாக மக்களிடம் கொண்டு செல்ல தலைமை வலியுறுத்துகிறது. அண்ணா திமுகவை தோற்கடிக்க அந்தந்த தொகுதிகளில் களநிலவரத்திற்கு ஏற்றவாறு நிர்வாகிகள் பணியாற்ற தலைமை அறிவுறுத்துகிறது.

கேலி கிண்டல் செவிசாய்க்க வேண்டாம்
தேர்தலில் போட்டியிடாத சூழலில் நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் சோர்வடைய வேண்டாம் எனவும் இந்த அரசியல் வெற்றிடம் தரும் கேலி கிண்டல்களுக்கு செவிசாய்க்க வேண்டாம் எனவும் , ஐந்தாண்டுகள் வீண் என சொல்லும் அரசியல் மூடர்களுக்கு செவி சாய்க்க வேண்டாம் என தலைமை கேட்டுக் கொள்கிறது.

இளைஞர்கள் அரசியல் பணி
இந்தத் தேர்தலில் திராவிட இயக்கங்களால் அரசியல் அனாதையாக்கப்பட்ட முக்குலத்தோர் சமுதாயம் அதன் இளைஞர்கள் அரசியல் அதிகாரத்தையும் அரசியலின் தன்மையையும் புரிந்து எதிர்காலத்தில் எவரும் முக்குலத்தோர் அல்லாத அரசியல் நிலையை நினைத்து பார்க்க முடியாதபடி அரசியல் பணியாற்ற முன்வரவேண்டும். இடஒதுக்கீட்டால் ஏற்படும் இழப்பு, எதிர்கால மாணவர்களின் வேலைவாய்ப்பு இழப்பு குறித்து சமூக வலைத்தளங்களில் அதிகம் பரப்ப இளைஞர்கள் அறிவுறுத்தப்படுகிறது.

அதிமுகவை நிராகரிப்போம்
ஒரு அமைப்பின் அல்லது மனிதனின் வாழ்வில் சுப நிகழ்வுகளில் உடனிருப்பதை விட துக்க நிகழ்வுகளில் , கஷ்டகாலத்தில் தோளோடு தோள் கொடுப்பது மட்டுமே வரலாற்றில் பதியப்படும் முக்குலத்தோர் புலிப்படையின் இக்கட்டான சூழ்நிலையில் சோதனைகளை வென்று எதிர்காலத்தில் சாதனைகளை படைப்போம் என்பதை நிர்வாகிகள் தொண்டர்களான உங்கள் மீது தலைமைக்கு முழு நம்பிக்கை இருக்கிறது . 2021ல் இழந்த மரியாதையை அதிமுகவை நிராகரித்து தோற்கடிப்பதே நமது
இலக்கு என்றும் கருணாஸ் அந்த கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications