சினிமா தயாரிப்பாளர் ரவீந்தர் சந்திரசேகருக்கு பெரிய சிக்கல்.. மோசடி வழக்கில் மும்பை போலீசார் சம்மன்!
சென்னை: திரைப்பட தயாரிப்பாளர் ரவீந்தர் சந்திரசேகருக்கு மும்பை போலீசார் சம்மன் அனுப்பியுள்ளனர். ஆன்லைன் வர்த்தகத்தில் அதிக லாபம் பெற்றுத் தருவதாக கூறி ரூ.5.24 மோசடி செய்த புகாரில் கைதானவரிடம் நடத்திய விசாரணையில் ரவீந்தருக்கு தொடர்பு உள்ளது தெரியவந்தது.
பங்குச் சந்தையில் அதிக லாபம் பெற்றுத் தருவதாக மும்பையில் அஜய் ஜெகதீஷ் கபூர் என்பவரிடம் ரூ.5.24 கோடி மோசடி செய்ததாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. ரூ.5.24 கோடி மோசடி புகாரில் சினிமா தயாரிப்பாளர் ரவீந்தர் சந்திரசேகரை கைது செய்ய மும்பை போலீசார் சென்னை வந்தனர்.

ரவீந்தர் சந்திரசேகரின் உடல்நிலை காரணமாக அவரை கைது செய்யாமல் மும்பை போலீசார் சம்மன் கொடுத்துச் சென்றதாகத் தகவல் வெளியாகியுள்ளது. இது சினிமா வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. ஏற்கனவே மோசடி புகாரில் சிக்கி சிறை சென்றவர் ரவீந்தர் சந்திரசேகர்.
சென்னை அசோக் நகரில் லிப்ரா ப்ரொடக்ஷன் என்ற சினிமா தயாரிப்பு நிறுவனத்தை நடத்தி வரும் ரவீந்தர் சந்திரசேகர், தன்னிடம் 16 கோடி ரூபாய் மோசடி செய்ததாகக் கூறி சென்னையைச் சேர்ந்த தொழிலதிபர் பாலாஜி என்பவர் கடந்த 2023 ஆம் ஆண்டு சென்னை மத்திய குற்றப் பிரிவில் புகார் அளித்திருந்தார்.
அதில், நகராட்சி திடக்கழிவுகளை இயக்க ஆற்றலாக மாற்றும் திட்டம் ஒன்றை ஆரம்பிக்க உள்ளதாகவும், 200 கோடி ரூபாய் மதிப்பிலான அந்தத் திட்டத்தில் முதலீடு செய்தால், இரட்டிப்பு லாபம் வரும் என்று ஆசை வார்த்தைகளைக் கூறி, தன்னை திட்டமிட்டு திட்டத்தில் முதலீடு செய்ய வைத்து பணத்தைத் திருப்பி தராமல் மோசடி செய்ததாகவும் புகார் கூறியிருந்தார்.
இந்த புகாரின் மீது வழக்குப்பதிவு செய்த மத்திய குற்றப்பிரிவு போலீசார், 2023 செப்டம்பர் மாதம் ரவீந்தர் சந்திரசேகரைக் கைது செய்தனர். பின்னர் அவர் நிபந்தனை ஜாமீனில் வெளியே வந்தது குறிப்பிடத்தக்கது. பின்னர் பிக்பாஸ் சீசன் 8ல் போட்டியாளராகப் பங்கேற்று இருந்தார் ரவீந்தர் சந்திரசேகர்.
-
தவெகவின் வெற்றி தொலைக்காட்சி ஆரம்பம்.. அதிகாரப்பூர்வ அறிவிப்பு.. நாஞ்சில் சம்பத் வாழ்த்து -
300 கோடி சொத்துக்காக நந்தனாவை நடுத்தெருவில் நிறுத்தினாங்களா? பாரதிராஜா குடும்பத்தில் இப்படி சிக்கலா? -
"கலைஞர் டிவி, ஜெயா டிவிக்கு அடுத்ததாக 'வெற்றி டிவி'... ஜூன் 22-ல் லோகோ வெளியீடு? விஜய்யின் அடுத்த மாஸ்டர் மூவ் இதுதானா?" -
விஜய் வெற்றி செல்லாது? திருச்சி கிழக்கு எம்எல்ஏவாக என்னையே அறிவிக்கணும்.. ஹைகோர்ட்டில் இனிகோ மனு -
மகளிர் உரிமைத் தொகை ரூ.2,500! புதிய விதிமுறைகள் தயார்? ஜூன் மாதப் பட்டியலில் யாருக்கெல்லாம் வாய்ப்பு -
SP Velumani: உங்க சங்காத்தமே வேண்டாம்.. சிங்கப்பூர் சென்ற SP வேலுமணி.. எடப்பாடிக்கு பைனல் மெசேஜ் -
சாய்பாபா காலனி பிரச்சனை ஓவர்.. சிங்காநல்லூருக்கும் விடிவு காலம்.. தவெக ஆட்சியில் பிறந்த நம்பிக்கை -
மனித மூளையை உலுக்கக்கூடிய ஒரு விஷயம்.. ஏஐ குறித்து சத்ய நாதெல்லா பதிவு.. கமல் பதில் -
ஸ்டாலின் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும்.. அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நோட்டீஸ் -
தமிழ்நாடுக்கு போட்டியாக கிளம்பிய குஜராத்.. விஜய்-க்கு நேரடி சவால்! -
நீலாங்கரை வீட்டிற்குள் நுழைந்த மாஸ் பிரபலம்! அண்ணன் விஜய்யை கண்டதுமே கட்டிப்பிடித்து உருகிய சிம்பு -
குத்துவிளக்கு ஏற்ற சொன்னா இப்படியா செய்வது? Narcissistic Behaviour ப்ரோ! விஜய்யை வறுத்த அதிமுக












Click it and Unblock the Notifications