ஒரே ஊரில் 100 பேருக்கு கழுத்து வீக்கம்.. MUMPS பாதிப்பு! காத்திருக்கும் ஆபத்து? அம்மை என அலட்சியம்!
சென்னை: திண்டுக்கல் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக பொன்னுக்கு வீங்கி நோய் பரவல் பள்ளி குழந்தைகள் இடையே அதிகமாக பரவி வருகிறது. குறிப்பாக ஒரே கிராமத்தில் 100க்கும் மேற்பட்டோருக்கு பாதிப்பு உள்ள நிலையில், அம்மை நோய் என வீட்டிலேயே சிகிச்சை அளித்து வருகின்றனர் பெற்றோர்கள். அம்மை நோய் கிட்டத்தட்ட ஒழிக்கப்பட்டு விட்ட நிலையில் 'மம்ப்ஸ்' வைரஸ் பாதிப்பை அலட்சியம் செய்தால், ஆண்களுக்கு ஆண்மை குறைவு, பெண்களுக்கு கருப்பை குறைபாடுகளும் வரும் என எச்சரிக்கின்றனர் மருத்துவர்கள்.
தமிழகத்தில் கடந்த சில நாட்களாகவே மம்ப்ஸ் எனும் பொன்னுக்கு வீங்கி நோய் பரவல் அதிகரித்து வருகிறது. குறிப்பாக திண்டுக்கல் மாவட்டத்தில் பல பகுதிகளில் பொண்ணுக்கு வீங்கி நோய் பரவல் அதிகரித்து வருகிறது.

கிராமப் பகுதிகளிலும் நகர பகுதிகளிலும் பள்ளி குழந்தைகளை குறிவைத்து இந்த நோய் பரவல் அதிகரித்து வருகிறது. குறிப்பாக திண்டுக்கல் மாவட்டம் பெரியகோட்டை அருகே இருக்கும் பில்லநாயக்கன்பட்டி என்ற கிராமத்தில் ஒரே நேரத்தில் நூற்றுக்கும் மேற்பட்டோருக்கு இந்த பாதிப்பு இருக்கிறது.
மேலும் அரசு பள்ளி மாணவர்கள், அங்கன்வாடி குழந்தைகள் தான் அதிகம் பாதிக்கப்பட்டிருக்கின்றனர். ஒரே வீட்டில் 2,3 பேருக்கும், ஒரு தெருவில் 10 முதல் 15 பேருக்கும் இந்த பாதிப்பு இருக்கிறது. ஆனால் பெற்றோர்களோ இது அம்மை நோய் பாதிப்பு, கன்னத்தம்மை வந்திருக்கிறது என வேப்பிலை மஞ்சளை கன்னத்தில் தடவி பழைய நடைமுறையை கடைபிடித்து வருகின்றனர். ஒரு சிலரே மருத்துவமனைகளுக்கு கூட்டி சென்று சிகிச்சை அளிக்கின்றனர்.

அதே நேரத்தில் இந்த பாதிப்பு குறித்து சுகாதாரத்துறை அதிகாரிகளுக்கு அல்லது கல்வித்துறை அதிகாரிகளுக்கு தெரிவிக்க வேண்டிய அரசு பள்ளி ஆசிரியர்களும் அலட்சியமாக இருக்கிறார்கள். தங்கள் பள்ளியில் படிக்கும் குழந்தைகள் அனைவருக்கும் இந்த பாதிப்பு இருக்கும் நிலையில், இது தொடர்பாக எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை என குற்றம் சாட்டுகின்றனர் பெற்றோர்கள். மேலும் பள்ளிக்கு திடீர் திடீரென மாணவிகள் விடுப்பு எடுப்பது குறித்தும் பள்ளி நிர்வாகமோ, அங்கன்வாடி நிர்வாகிகளோ கண்டு கொள்ளவில்லை என கூறப்படுகிறது.
பாரசிட்டமல் உள்ளிட்ட சாதாரண மருந்துகளை எடுத்துக் கொண்டாலே இந்த நோய் பரவலில் இருந்து தற்காத்துக் கொள்ள முடியும் உரிய சிகிச்சை எடுக்காவிட்டால் பெரிய பாதிப்பை சந்திக்க வேண்டி இருக்கும் என எச்சரிக்கின்றனர் மருத்துவர்கள். இதுதொடர்பாக மருத்துவர் சரவணனிடம் பேசிய போது," பொன்னுக்கு வீங்கி (MUMPS) நோய் பரவல் பாராமிக்சோ எனும் வைரஸால் பரவுகிறது. இது காற்றில் எளிதாக பரவக்கூடியது.

இந்த நோய் காதுக்கு முன்பாக இருபுறமும் உமிழ்நீர் சுரப்பியின் வீக்கம் தான் இந்த நோயின் அறிகுறி ஆகும், இந்த நோய் பாதிக்கப்பட்டவர்கள் இடது அல்லது வலது காதுக்கு கீழே பெரிய வீக்கம் தென்படும், காது கீழே வலி ஏற்படும், மேலும் காய்ச்சல், உடல் சோர்வு ஏற்படும். இந்த நோய் அறிகுறி தென்படுவதற்கு முன்னதாக மற்றவருக்கு அந்த நோய் பரவும் வாய்ப்பு உள்ளது ஒருவர் மூலம் 12 பேருக்கு இது பரவும்.
இந்த நோய் வெகுகாலமாக சமூகத்தில் இருந்து வந்தது. ஆனால் தற்போது மீண்டும் அதிகரித்து வருகிறது. தற்போது கடந்த ஆறு மாதத்தில் மேலும் அதிகரித்து உள்ளது ஒரே ஆண்டில் 8 சகவீதம் அதிகரித்து உள்ளது. உரிய சிகிச்சை அளிக்காவிட்டால், இந்த நோயால் மூளைக்காய்ச்சல் பாதிப்பு ஏற்படும், அதனை தொடர்ந்து மூளை மற்றும் தண்டுவடம் சுற்றியுள்ள ஜவ்வுகள் பாதிப்பு, கணையம் பாதிப்பு, ஆண்களுக்கு மலட்டுத்தன்மை, பெண்களுக்கு கர்ப்பப்பை பாதிப்பு ஆகியவை ஏற்படும்.

இந்த நோய்க்கு எதிராக குழந்தைகளுக்கு 15 மாதத்திற்கு பின்பு, அதனை தொடர்ந்து 5 வயதுக்குள் தடுப்பூசி போட வேண்டும் தற்போது மந்தை நோய் எதிர்ப்பு சக்தி குறைந்து வருகிறது. (HERD IMMUNITY) இதனால் இந்த நோய் அதிகரித்து வருகிறது. குறிப்பாக இந்த நோய் பாதிக்கப்படும் இடங்களை கண்டறிந்து மருத்துவ முகாம் நடத்தி தடுப்பூசிகளை போட வேண்டும். ஏனென்றால் வரும் முன்பே நோய்களைத் தடுப்பது நல்லது" என கூறியுள்ளது.
-
டாஸ்மாக்கில் ரூ.3,600 கோடி ஊழல்.. லிஸ்ட் எடுத்த தவெக.. அமைச்சர் விக்னேஷ் திடுக் தகவல் -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தலை எதிர்கொள்ள திமுகவின் இரட்டை வியூகம்.. இள ரத்தத்திற்கு முக்கியத்துவம்! -
96,000 வாக்குகள் வித்தியாசத்தில்.. தவெக வேட்பாளரை ஜெயிக்க வைத்த தொகுதிக்கு இந்த நிலைமையா? -
இந்தியாவை தாக்கும் பெரிய ஆபத்து.. விஷயம் கேட்டு எலான் மஸ்க் கூட அதிர்ந்து போனார்! பேரழிவு கன்பார்ம்? -
அதிகாலையே கணக்கில் வரவு வைக்கப்பட்ட ரூ.3000.. வந்தது மே மாதம் பேமெண்ட்.. அரசின் அசத்தல் மூவ்! -
சொத்துகளை மறைக்கும் சென்னை மேயர் பிரியா.. துணை மேயர் உள்பட 75% கவுன்சிலர்கள் 4 ஆண்டுகளாக ‘டிமிக்கி' -
அதிமுக + திமுகவிற்கு ஷாக்.. 4 மாஜி அமைச்சர்கள் - 8 எம்எல்ஏக்கள் உள்பட 60 பேர் தவெகவில் ஐக்கியம் -
அடித்து ஆடும் விஜய்.. வருகிறது ராமநாதபுரம் புதிய விமான நிலையம்.. பொருளாதார புரட்சிக்கு அடித்தளம்! -
ரஷ்யா வச்ச ஆப்பு.. தள்ளுபடிலாம் தர முடியாது.. பிரீமியம் கட்டணம்! கச்சா எண்ணெய்க்கு 425% கூடுதல் தொகை -
ரூ.15 லட்சம் கோடி பஸ்பம் ஆகும்? சரிகிறது இந்தியாவின் தங்க’ சாம்ராஜ்யம்.. நாட்டையே உலுக்கும் சம்பவம் -
"அண்ணாமலை வந்ததால் பாஜக ஒன்னும் பலமாகவில்லை".. ஒரு இதழை கூட அசைக்க முடியாது.. தமிழிசை ‘அட்டாக்' -
நாங்க தோத்துட்டோம்.. ஆனா சாகலை! விஜய்க்கு ஏதாவது ஆச்சுனா கம்பெனி பொறுப்பில்லை! மாஜி கொடுத்த வார்னிங்












Click it and Unblock the Notifications