100% கண்டிப்பா வேணும்.. ஸ்டிரிக்ட்டாக சொன்ன ஸ்டாலின்.. உள்ளே வந்த ஐ பேக் டீம்.. என்ன நடக்கிறது?
சென்னை: நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலுக்காக ஆளும் திமுக தரப்பு மிக தீவிரமாக தயாராகி வருகிறது. அனைத்து மாநகராட்சி பதவிகளையும் கைப்பற்ற வேண்டும் என்பதில் உறுதியாக உள்ளது.
நடந்து முடிந்த ஊரக உள்ளாட்சி தேர்தலில் திமுக அபார வெற்றிபெற்றது. இந்த நிலையில் நகராட்சி தேர்தலிலும் இதே வெற்றியை தக்க வைக்க வேண்டும் என்பதில் திமுக உறுதியாக உள்ளது. நகராட்சி தேர்தலில் வெற்றிபெறுவது தனது ஆட்சிக்கு மக்கள் கொடுக்க போகும் ரிப்போர்ட் கார்ட் போல இருக்கும் என்று முதல்வர் ஸ்டாலின் கருதுகிறாராம்.
திமுக ஆட்சி குறித்து மக்கள் தரப்போகும் feedback ஆக இந்த தேர்தல் இருக்கும். இதனால் கண்டிப்பாக இந்த தேர்தலில் நாம் தீவிரமாக உழைத்து வெற்றிபெற வேண்டும் என்று நிர்வாகிகளுக்கு நடந்து முடிந்த கட்சி கூட்டத்தில் முதல்வர் ஸ்டாலின் வலியுறுத்தி இருக்கிறாராம்.

100% வெற்றி முக்கியம்
நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் 100 சதவீத வெற்றி கண்டிப்பாக வேண்டும். கடந்த 6 மாதமாக நல்ல ஆட்சி கொடுத்து இருக்கிறோம். அதை மக்கள் மத்தியில் கொண்டு செல்லுங்கள். உங்கள் தொகுதியில், மாவட்டங்கள் என்ன பிரச்சனை, ஆட்சி மாறிய பின் ஏதாவது மனக்குறை இருக்கிறதா என்று விசாரித்து நடவடிக்கை எடுங்கள் என்று அறிவாலயத்தில் சமீபத்தில் நடந்த திமுக மா.செ.க்கள், எம்.பி.க்கள், எம்.எல்.ஏ.க்கள் கூட்டத்தில் கண்டிப்புடன் முதல்வர் ஸ்டாலின் கூறியுள்ளார்.

80 சதவிகிதம்
இந்த கூட்டத்திற்கு பின் பணிகளை தொடங்கி மா. செக்கள் மற்றும் நிர்வாகிகள் மிக வேகமாக செயல்பட்டு வருகிறது. அந்த வகையில் தேர்தலை எதிர்கொள்ள 80 சதவீத பணிகளை திமுக நிர்வாகிகள் ஏற்கனவே முடித்துவிட்டதாக கூறப்படுகிறது. இதற்கிடையே, தமிழகம் முழுவதும் நடக்கவிருக்கும் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் வார்டு வாரியாக போட்டியிட தகுதியுள்ள திமுக நிர்வாகிகளின் பட்டியலை எடுத்துள்ளது ஐ-பேக் டீமில் பணிபுரிந்த பணியாளர்கள் டீம் என்ற தகவல் நமக்கு வெளியாகி இருக்கிறது.

இன்டர்வியூ
ஏற்கனவே இந்த முறை திமுகவில் நேர்முக தேர்வு நடக்காது. மாறாக விண்ணப்பங்களை வைத்து முதல்வரே நேரடியாக வேட்பாளர்களை தேர்வு செய்வோம் என்று நாம் செய்தி வெளியிட்டு இருந்தோம். இந்த நிலையில்தான் விண்ணப்பதாரர்களின் உள்ளூர் செல்வாக்கை தெரிந்து கொள்ள ஐ-பேக் டீமில் பணிபுரிந்த பணியாளர்கள் டீமை திமுக தலைமை களமிறக்கி உள்ளதாக திமுகவிற்கு நெருக்கமான வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

துரிதமாக செயல்பட்ட ஐ பேக்
இதையடுத்து துரிதமாக செயல்பட்ட ஐ பேக் டீம், ஏரியா மக்களிடம் செல்வாக்கு, சாதி வலிமை, வார்டில் உள்ள மொத்த வாக்குகள் என்பதையெல்லாம் கணக்கில் கொண்டு தகுதியுள்ள 3 பேர் கொண்ட பட்டியலை தயாரித்துள்ளது டீம். இந்த பட்டியல் விரைவில் கட்சி தலைமையிடம் ஒப்படைக்கவிருக்கிறதாம். இதில் சில முக்கிய நபர்களின் பெயர்கள் இடம்பெற்றுள்ளதாகவும், சில தலைகளின் பெயர்கள் விடுபட்டுள்ளதாகவும் தகவல்கள் வருகின்றன.

விவாதம்
அந்த பட்டியலை ஆராய்ந்த பிறகு, அந்த பட்டியலை வைத்து மா.செ.க்களிடம் கட்சி தலைமை விவாதிக்கவிருக்கிறது. பின்னர் அதில் இருந்து பெயர்கள் லிஸ்ட் இறுதி செய்யப்பட்டு, தேவையானவர்களை முதல்வர் ஸ்டாலின் தேர்வு செய்வார். அதன் பிறகு வேட்பாளர் லிஸ்ட் தயாராகும் என்று அறிவாலய வட்டாரங்கள் நம்மிடம் தெரிவித்துள்ளன.












Click it and Unblock the Notifications