உச்சிக்கு ஏறிய காமம்.. என்ன ஆனாலும் சரி.. விட்டுதர முடியாது.. எடுத்தார் கத்தியை.. பரிதாப சார்லஸ்!

கள்ளக்காதல் விபரீதத்தால் மனைவியை குத்தி கொலை செய்தார் கணவர்

Subscribe to Oneindia Tamil

சென்னை: என்ன ஆனாலும் சரி, கள்ள புருஷனை விட்டு தர முடியாது என்று மனைவி பிடிவாதமாக சொன்னார்.. இதனால் பொறுத்து பொறுத்து பார்த்த கணவர், கத்தியை எடுத்து மனைவியை குத்தி கொன்றுவிட்டார்.

சென்னை எம்கேபி நகரை சேர்ந்தவர் சார்லஸ்... 32 வயதாகிறது.. இவரது மனைவி பெயர் பவித்ரா.. ஆனால் கருத்து வேறுபாடு காரணமாக, சண்டை போட்டுக் கொண்டு பிரிந்து விட்டனர்.

murder: husband killed wife near chennai

அதனால், சார்லஸ், ரமணி என்ற பெண்ணை 2வது கல்யாணம் செய்து கொண்டார்.. ரமணிக்கு 35 வயதாகிறது.. கடந்த 2019ம் ஆண்டு இவர்கள் திருமணம் செய்தனர்.. ஆனால், இவர்களுக்குள்ளும் சண்டை வந்து கொண்டே இருந்தது.. ரமணியும் அம்மா வீட்டுக்கு அடிக்கடி கோபித்து கொண்டு போவார்.

அப்படி ஒரு சண்டை வந்து, தாய் வீட்டுக்கு போன மனைவியை, நேற்றுதான் சமாதானம் செய்து கூட்டி வந்தார் சார்லஸ்.. வீட்டுக்குள் நுழைந்ததுமே திரும்பவும் தகராறு ஆரம்பமானது... இதனால் ஆத்திரமடைந்த சார்லஸ, கிச்சனுக்கு ஓடிப்போய் கத்தியை எடுத்து வந்து ரமணியை சரமாரியாக குத்தினார். இதில் ரமணி துடிதுடித்து அதே இடத்தில் உயிரிழந்தார்.

சத்தம்கேட்டு ஓடி வந்த அக்கம்பக்கத்தினர், இதை பாரத்து அதிர்ச்சி அடைந்து எம்கேபி நகர் போலீஸ் ஸ்டேஷனுக்கு தகவல் தந்தனர். அதன்பேரில் அங்கு வந்த எம்கேபி நகர் போலீசார், சடலத்தை கைப்பற்றி ஸ்டான்லி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்... பிறகு வழக்கு பதிவு செய்து சார்லஸை கைது செய்து விசாரித்தனர். அப்போதுதான் ரமணியின் கள்ளக்காதல் விவகாரம் வெளியே வந்தது. அந்த கள்ளக்காதலன் வியாசர்பாடியில் இருக்கிறாராம்.

அவருடன் தொடர்பில் இருப்பதற்காகவே, அடிக்கடி வீட்டில் சண்டை போட்டு கோபித்து கொண்டு அங்கு அம்மா வீட்டுக்கு சென்றுவிடுவாராம்.. இந்த விஷயம் தெரிந்து சார்லஸ் கண்டித்தும் அவர் கேட்கவில்லையாம்.. சம்பவத்தன்றும் காதலனைவிட முடியாது என்று ரமணி கறாராக சொல்லவும்தான் கத்தியை எடுத்து குத்தியதாக வாக்குமூலம் தந்துள்ளார் சார்லஸ்.. தொடர் விசாரணை நடந்து வருகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+