முருகனின் வேல் வன்முறை ஆயுதமா? கேஎஸ் அழகிரி நிரூபிக்கத் தயாரா? முருக பக்தர்கள் கொதிப்பு
வேல் என்றால் வன்முறைக்கான ஆயுதம் என்று ஆக்ஸ்போர்டு டிக்ஸ்னரியில் கூறியிருப்பதாக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி கருத்து கூறியுள்ளதாற்கு முருகபக்தர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
சென்னை: வேல் ஒரு வன்முறை ஆயுதம் என்றும் எதிரிகளை வீழ்த்தி சாகடிக்கிற ஒரு ஆயுதம்..! மற்றவர்களை போருக்கு கூவி அழைக்கிற ஆயுதம்..! என்று ஆக்ஸ்போர்டு டிக்ஸ்னரியில் விளக்கம் சொல்லி இருக்கிறார்கள் என்று கூறினார் கே.எஸ்.அழகிரி அவரது இந்த கருத்துக்கு முருக பக்தர்களிடையே கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. கே.எஸ் அழகிரி ஆதாரத்துடன் நிரூபிக்க வேண்டும் என்றும் கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.
கந்த சஷ்டி கவசம் தொடங்கி வேல் ஆயுதம் வரை கடந்த சில மாதங்களாகவே இந்துக்களுக்கு எதிராக பல கருத்துக்கள் பதிவிடப்படுகின்றன. கறுப்பர் கூட்டம் கந்த சஷ்டி கவசத்திற்கு சர்ச்சையான அர்த்தங்களை கூற அதனை கையில் எடுத்துக்கொண்டது பாஜக.
சஷ்டி நாட்களில் கந்த சஷ்டி கவசம் பாராயணமும் வேல் பூஜையும் நடத்த ஆரம்பித்தனர். இதனைத் தொடர்ந்து நவம்பர் 6ஆம் தேதி தொடங்கி டிசம்பர் 6ஆம் தேதி வரை வேல் யாத்திரை நடத்தப்போவதாக அறிவுத்து பரபரப்பை ஏற்படுத்தினர். ஆங்காங்கே வேல் யாத்திரையும் நடத்தும் பாஜகவினர் காவல்துறையினரால் கைது செய்யப்படுகின்றனர்

அதிமுக பற்றி சர்ச்சை கருத்து
சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த காங்கிரஸ் தலைவர் கே.எஸ் அழகிரி, தமிழக அரசு ஒரு விசித்திரமான ஜந்து என்று கடுமையாக விமர்சித்தார். அவர்களுக்கு எந்தவிதமான உருவம் கொடுப்பது என்றே நம்மால் சொல்ல முடியாது என்று கூறியதோடு ஐ சி எம் ஆர் மற்றும் உலக சுகாதார அமைப்பு கூறியிருப்பதாவது வைரஸ் தொற்று ஒவ்வொரு நேரத்திற்கும் உருமாறும் வைரஸ் தொற்று உருமாறுவது போலதான் அதிமுகவும் என்றார்

தமிழகத்தில் மாற்றம் வராது
வேல் யாத்திரை அல்ல வாள் யாத்திரை செய்தாலும் தமிழகத்தில் எந்த மாற்றமும் வந்துவிடாது, ஆன்மீகம் என்பது இறை நம்பிக்கை உடையது. மகாத்மா காந்தி ஆன்மீகத்தை கற்பித்தார், ஆர்எஸ்எஸ் மதவெறியை ஊட்டினார்கள் என்று கூறிய கே.எஸ். அழகிரி, தமிழ்நாட்டில் கிருபானந்த வாரியார் கையில் முருகப்பெருமான் இருந்தவரை இந்த நாடு நல்லா இருந்தது என்றார்.

வேலை கையில் எடுத்த பாஜக
முருகப்பெருமானை தோளிலும் கையில் வைத்துக் கொண்டு அவர் நாடு முழுவதும் சுற்றி வந்தார். மக்கள் முருகர் மேல் நம்பிக்கை வைத்திருந்தனர் என்று கூறினார் பாரதிய ஜனதா முருகரை விட்டுவிட்டு, கையிலுள்ள வேலை மட்டும் எடுத்துக்கொண்டனர், இவர்களுக்கு வன்முறையின் மீது நம்பிக்கை அதிகரித்துள்ளது என்றார்.

வேலாயும் வன்முறை
ஆக்ஸ்போர்டு டிக்ஸ்னரியில் பார்த்தால், வேலுக்கு என்ன விளக்கம் சொல்லி இருக்கிறார்கள் என்றால் வேல் ஒரு வன்முறை ஆயுதம்..! எதிரிகளை வீழ்த்தி சாகடிக்கிற ஒரு ஆயுதம்..! மற்றவர்களை போருக்கு கூவி அழைக்கிற ஆயுதம்..! என்று சொல்லி இருக்கிறார்கள் என்று கூறினார் கே.எஸ்.அழகிரி.

கொதிக்கும் முருக பக்தர்கள்
காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரியின் இந்த கருந்து முருகபக்தர்களிடையே கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. ஆக்ஸ்போர்டு டிக்ஸ்னரியில் வேல் என்ற சொல்லுக்கு அப்படி அர்த்தம் ஏதும் குறிப்பிடபடவில்லை என்ற தகவல் வெளியாகி உள்ளது.
கே.எஸ்.அழகிரி எந்த ஊரு ஆக்ஸ்போர்டு டிக்ஸ்னரியில் வேல் குறித்து வன்முறை ஆயுதம் என்று அவதூறாக குறிப்பிட்டு உள்ளது என்பதை ஆதாரத்தோடு நிரூபிக்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளனர்.

பண்டைய தமிழர்கள் ஆயுதம்
வேல் என்பதற்கு இந்து தெய்வமான முருகனின் தெய்வீக ஈட்டி என்றும் பண்டைய தமிழர்கள் போரில் பயன்படுத்திய ஈட்டி பொதுவாக வேல் என்று அழைக்கப்படுவதாக அகராதியில் குறிப்பிடப்பட்டுள்ளது, என்றும் சுட்டிக்காட்டுகின்றனர் முருகபக்தர்கள்
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications