ஐயகோ.. சிதைச்சுட்டாரு பாடகர் கார்த்திக்! டென்சனான ஜேம்ஸ் வசந்தன்! இசைமைப்பாளரையும் விட்டு வைக்கலயே
சென்னை: யாதும் ஊரே யாவரும் கேளிர் என்ற ஆல்பம் பாடலில் பாடகர் கார்த்திக் தவறாக தமிழை உச்சரித்து இருப்பதாக இசையமைப்பாளர் ஜேம்ஸ் வசந்தன் குற்றம்சாட்டியுள்ளார்.
"யாதும் ஊரே யாவரும் கேளிர்
தீதும் நன்றும் பிறர்தர வாரா
நோதலும் தணிதலும் அவற்றோ ரன்ன
சாதலும் புதுவது அன்றே, வாழ்தல்
இனிதென மகிழ்ந்தன்றும் இலமே முனிவின்
இன்னா தென்றலும் இலமே, மின்னொடு
வானம் தண்துளி தலைஇ யானாது
கல் பொருது மிரங்கு மல்லல் பேரியாற்று
நீர்வழிப் படூஉம் புணைபோல் ஆருயிர்
முறை வழிப் படூஉம் என்பது திறவோர்
காட்சியில் தெளிந்தனம் ஆகலின், மாட்சியின்
பெரியோரை வியத்தலும் இலமே,
சிறியோரை இகழ்தல் அதனினும் இலமே." என்ற கனியன் பூங்குன்றனாரின் வரிகளை ஆல்பம் பாடலாக தயாரித்து கடந்த 2019 ஆம் ஆண்டில் ஒரு வீடியோ யூடியூபில் வெளியானது.

ராஜா சோமசுந்தரம், இசையில் பாடகர்கள் கார்த்திக், பாம்பே ஜெயஸ்ரீ, தேர்டீன் பீட்ஸ், சார்லெட் கார்டினல், ராஜன் சோமசுந்தரம் ஆகியோர் பாடியுள்ளனர். இந்த நிலையில் இந்த பாடலை பேஸ்புக்கில் பதிவிட்டு உள்ள இசையமைப்பாளர் ஜேம்ஸ் வசந்தன் கடுமையாக விமர்சித்துள்ளார்.
அதில், "தற்செயலாக இந்தக் காணொலி பார்த்தேன். நம்ம முப்பாட்டன் கணியன் பூங்குன்றனார் பாடல் என்கிற ஆர்வம். பிரம்மாண்ட சிம்ஃபனி இசைக்குழு. பெரிய பாடகர்கள் என்றவுடன் கூடுதல் ஆர்வம். முதல் வரியைக் கேட்டவுடன் பரவசம். இரண்டாவது வரியைக் கேட்டவுடன் அதிர்ச்சி. "யாவரும் கேளீர்" என்று பாடுகிறார் கார்த்திக்.
பாதி அவர் தவறு. மீதி இசையமைப்பாளர் தவறு. பாட்டின் அடிப்படைத் தத்துவத்தையே விளங்கிக்கொள்ளாமல் எப்படி இந்தப் பாடலை இசையமைக்க முடியும்? பாடமுடியும்? இவ்வளவுதான் தமிழரின் மொழியுணர்வு, மொழியறிவு. கேளிர் - உறவினர், சுற்றத்தார். யாதும் ஊரே
யாவரும் கேளிர் என்கிற அற்புத உலகத் தத்துவத்தையே சிதைத்துவிட்ட பிறகு எதற்கு இந்தப் படைப்பு! ஐயகோ!" என்று தெரிவித்து உள்ளார்.
இதற்கு முன்பாக சூப்பர் சிங்கரில் வெற்றிபெற்ற அருணாவின் வரிகளையும் இதேபோல் விமர்சித்து பதிவிட்டு இருந்தார் ஜேம்ஸ் வசந்தன். அதில், பாடிய காணொலி அது. அவர்தான் பட்டம் வென்றவர் என்பதையும் தெரிந்துகொண்டேன்.
வெள்ளிப் பனிமலையின் மீதுலவு வோம் - அடி
மேலைக் கடல்முழுதும் கப்பல் விடுவோம்
பள்ளித் தலமனைத்தும் கோயில் செய்கு வோம் - எங்கள்
பாரத தேசமென்று தோள்கொட்டுவோம்
என்கிற 'கப்பலோட்டிய தமிழன்' படத்தில் இடம்பெற்ற பெரும்புலவன் பாரதியின் பாடலைப் பாடினார். அருமையாகப் பாடினார். இயல்பானத் திறமை கொண்டவர். சங்கீதம் படித்தவரா என்பதெல்லாம் தெரியாது.
ஆனால் நல்ல இயற்கை ஞானம் உள்ளவர் என்பது தெள்ளத்தெளிவாய் தெரிந்தது. ஆனால், தமிழைக் கொன்று பட்டம் வென்றுள்ளார் என்பது தெரிந்து வேதனையாக இருந்தது. இன்னும் எத்தனைக் காலந்தான் "நாட்டுப்புறப் பாடகர்கள் கொச்சையாகத்தான் பாடுவார்கள்' என்று விட்டுக்கொண்டிருக்க முடியும்?
அவர்கள் நாட்டுப்புறப் பாடல்களைப் பாடும்போது அது இயல்பான இசை என சொல்லி அவர்களை ஊக்குவிக்கும் எண்ணத்தில் அவற்றைக் கடக்கிறோம். இவர் திரைப்படப் பாடல்களைப் பாட முன்வந்திருக்கிறார். அதுவும் ஒரு போட்டித் தளத்தைத் தேர்ந்தெடுத்திருக்கிறார். இந்தப் பாடல்களிலுள்ள இசை நுணுக்கங்களை அட்சரம் பிசகாமல் பாடக் கற்றுக்கொள்பவருக்கு அவருடைய மொழியின் நுணுக்கம் மட்டும் தெரியாதாமாம். நாமும் அதைக் கண்டுகொள்ளக் கூடாதாம். என்ன பெரிய நுணுக்கம்?
ல, ள, ழ வை வேறு எப்படி உச்சரிக்க முடியும்? உச்சரிக்க வரவில்லையென்றால் பொதுமேடைக்கு வராதீர்கள். கற்றுக்கொண்டு பிறகு வாருங்கள். வாய்ப்பாட்டு இசை என்பது இசையும் மொழியும் இரண்டறக் கலந்தது. சொற்கள் இல்லாமல் பாடல் இல்லை. அப்படியிருக்க, இசையால் மயக்கி, செவிகளை ஏமாற்றி, நம் மொழியைக் கொன்றுதான் நீங்கள் வெல்லவேண்டுமா?
பாடகர் இப்படியென்றால் அங்கு உட்கார்ந்து தலையாட்டிப் பொம்மை போல ரசித்துக்கொண்டிருந்த மொழிசெவிட்டு நடுவர்கள்தான் பெரிய குற்றவாளிகள். அங்கிருந்த ஒரு நட்சத்திர நடுவர் கூட இவர் செய்த பிழைகளைச் சுட்டிக்காட்டவில்லை. மொழி தெரிந்தால்தானே பிழை தெரியும்!
இது வேறு எந்த மாநிலத்திலும் நடக்க வாய்ப்பில்லை. இதே சூப்பர் சிங்கர் பாடகர் சிலர் ஹிந்தி நிகழ்ச்சிகளில் சென்று பங்கெடுத்தபோது பிசகின்றி அவர்கள் மொழியைப் பாடியது பாராட்டுக்குரியது. ஆனால் தமிழ் என்றால் நம் பாடகர்களுக்கு அவ்வளவு இளக்காரம்." என்று குறிப்பிட்டு உள்ளார்.
-
பணிகள் கிட்டத்தட்ட ஓவர்.. இனி 4 வழி இல்லை.. சென்னையின் முக்கிய பகுதியில் மிகப்பெரிய 6 வழி சாலை -
அலர்ட்..! 10000 ரூபாய்க்கு மேல் பணம் அனுப்பினால் 'லாக்'.. ஆர்பிஐ கொண்டு வரும் புது ரூல்ஸ்! -
தங்கத்தை மிஞ்சப்போகும்.. பலரின் வீட்டிலேயே இருக்கும் ஒரு குட்டி உலோகம்.. அடிக்குது ஜாக்பாட்! -
தென்னிந்திய தர்காக்கள் மற்றும் பள்ளி வாசல்கள் சங்கம் அதிமுகவிற்கு ஆதரவு! -
கடலூரில் நாளை விஜய் பிரச்சாரத்தால் உதயநிதி ஸ்டாலின் பிரச்சாரத்திற்கு அனுமதி மறுப்பு.. நடந்தது என்ன? -
ஐடி ஊழியர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த TCS.. மாச மாசம் பணம் சொளையா வரப்போகுது! -
சிறகடிக்க ஆசை: மீனாவிடம் முத்து மறைக்கும் உண்மை! விஜயா பற்றி அண்ணாமலைக்கு தெரிந்த பெரிய ரகசியம்! -
அமெரிக்காவை அலறவிட்ட பிரான்ஸ்! 129 டன் தங்கத்தை மீட்க "கோல்டன்" ஸ்கெட்ச்.. அப்போ இந்தியா பிளான் என்ன -
விஜய்யுடன் சேர்ந்து முதல்வராக முயன்ற எடப்பாடி! நான்தான் முறியடித்தேன்.. போட்டு உடைத்த செங்கோட்டையன் -
சிறகடிக்க ஆசை: விஜயாவின் மாற்றம்! முத்து, மீனாவை பெருமையாக பேசுறாங்களே! குடும்பத்தில் கொண்டாட்டம் -
ஈரான் வேலையை காட்டியது.. ஹார்முஸ்-ல் கப்பல் செல்ல அனுமதி மறுப்பு.. அமெரிக்கா ஷாக்! -
ரஷ்யா மாஸ்டர் பிளான்: இந்தியாவுக்கு ஜாக்பாட்.. சீனா உதவி.. ஒன்று கூடிய BRICS நாடுகளால் டிரம்ப் ஷாக்!












Click it and Unblock the Notifications