மேடைக்கு வராதீங்க.. டென்சனான ஜேம்ஸ் வசந்தன்! சூப்பர் சிங்கர் அருணா தமிழை கொன்று பட்டம் வாங்கினாராம்
சென்னை: சூப்பர் சிங்கர் சீனியரின் இறுதிப்போட்டி கடந்த சில வாரங்களுக்கு முன் நடந்து முடிந்த நிலையில் அதில் வெற்றிபெற்ற அருணா பாடும் விதத்தை விமர்சித்து இருக்கிறார் இசையமைப்பாளர் ஜேம்ஸ் வசந்தன்.
இசையமைப்பாளர் ஜேம்ஸ் வசந்தன் சுப்ரமணியபுரம் உள்ளிட்ட பல திரைப்படங்களுக்கு இசையமைத்து இருக்கிறார். விஜய் டிவியில் பல்வேறு நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி உள்ளார். குறிப்பாக சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியிலும் நடுவராக செயல்பட்டு உள்ளார். இந்த நிலையில் அண்மையில் சூப்பர் சிங்கரில் வென்ற முதல் பெண் என்ற பெருமையை பெற்ற சீர்காழியை சேர்ந்த அருணாவை இவர் விமர்சித்துள்ளார்.

இதுகுறித்து பேஸ்புக்கில் பதிவிட்டு இருக்கும் அவர், "சூப்பர் சிங்கர் வெற்றியாளர் இவர்தான் பாருங்கள் என ஒருவர் யூ-டியூப் இணைப்பு ஒன்று அனுப்பினார். 'அருணா சிவயா' என்பவர் பாடிய காணொலி அது. அவர்தான் பட்டம் வென்றவர் என்பதையும் தெரிந்துகொண்டேன்.
வெள்ளிப் பனிமலையின் மீதுலவு வோம் - அடி
மேலைக் கடல்முழுதும் கப்பல் விடுவோம்
பள்ளித் தலமனைத்தும் கோயில் செய்கு வோம் - எங்கள்
பாரத தேசமென்று தோள்கொட்டுவோம்
என்கிற 'கப்பலோட்டிய தமிழன்' படத்தில் இடம்பெற்ற பெரும்புலவன் பாரதியின் பாடலைப் பாடினார். அருமையாகப் பாடினார். இயல்பானத் திறமை கொண்டவர். சங்கீதம் படித்தவரா என்பதெல்லாம் தெரியாது.
ஆனால் நல்ல இயற்கை ஞானம் உள்ளவர் என்பது தெள்ளத்தெளிவாய் தெரிந்தது. ஆனால், தமிழைக் கொன்று பட்டம் வென்றுள்ளார் என்பது தெரிந்து வேதனையாக இருந்தது. இன்னும் எத்தனைக் காலந்தான் "நாட்டுப்புறப் பாடகர்கள் கொச்சையாகத்தான் பாடுவார்கள்' என்று விட்டுக்கொண்டிருக்க முடியும்?
அவர்கள் நாட்டுப்புறப் பாடல்களைப் பாடும்போது அது இயல்பான இசை என சொல்லி அவர்களை ஊக்குவிக்கும் எண்ணத்தில் அவற்றைக் கடக்கிறோம். இவர் திரைப்படப் பாடல்களைப் பாட முன்வந்திருக்கிறார். அதுவும் ஒரு போட்டித் தளத்தைத் தேர்ந்தெடுத்திருக்கிறார். இந்தப் பாடல்களிலுள்ள இசை நுணுக்கங்களை அட்சரம் பிசகாமல் பாடக் கற்றுக்கொள்பவருக்கு அவருடைய மொழியின் நுணுக்கம் மட்டும் தெரியாதாமாம். நாமும் அதைக் கண்டுகொள்ளக் கூடாதாம். என்ன பெரிய நுணுக்கம்?
ல, ள, ழ வை வேறு எப்படி உச்சரிக்க முடியும்? உச்சரிக்க வரவில்லையென்றால் பொதுமேடைக்கு வராதீர்கள். கற்றுக்கொண்டு பிறகு வாருங்கள். வாய்ப்பாட்டு இசை என்பது இசையும் மொழியும் இரண்டறக் கலந்தது. சொற்கள் இல்லாமல் பாடல் இல்லை. அப்படியிருக்க, இசையால் மயக்கி, செவிகளை ஏமாற்றி, நம் மொழியைக் கொன்றுதான் நீங்கள் வெல்லவேண்டுமா?

பாடகர் இப்படியென்றால் அங்கு உட்கார்ந்து தலையாட்டிப் பொம்மை போல ரசித்துக்கொண்டிருந்த மொழிசெவிட்டு நடுவர்கள்தான் பெரிய குற்றவாளிகள். அங்கிருந்த ஒரு நட்சத்திர நடுவர் கூட இவர் செய்த பிழைகளைச் சுட்டிக்காட்டவில்லை. மொழி தெரிந்தால்தானே பிழை தெரியும்!
இது வேறு எந்த மாநிலத்திலும் நடக்க வாய்ப்பில்லை. இதே சூப்பர் சிங்கர் பாடகர் சிலர் ஹிந்தி நிகழ்ச்சிகளில் சென்று பங்கெடுத்தபோது பிசகின்றி அவர்கள் மொழியைப் பாடியது பாராட்டுக்குரியது. ஆனால் தமிழ் என்றால் நம் பாடகர்களுக்கு அவ்வளவு இளக்காரம்." என்று குறிப்பிட்டு உள்ளார்.
சூப்பர் சிங்கரில் வென்ற அருணாவை பொறுத்தவரை அவர் கோயில்களில் திருமுறை பாடி பயிற்சி பெற்று சூப்பர் சிங்கரில் திரைப்பாடல்களை பாட வந்தவர். பானை தயாரிக்கும் குடும்பத்தில் இருந்து பிறந்த இவரது பாடலை கேட்பதை விட சாதி என்ன என்று கேட்டு பலர் காயப்படுத்தியதாக விஜய் டிவியிலேயே வெளிப்படையாக பேசியது குறிப்பிடத்தக்கது.
-
மகளிருக்கு டபுள் ஜாக்பாட்.. மகளிர் உரிமை தொகை + ரூ.8000.. மொத்தம் ரூ.10,000! திமுக மெகா ப்ளான்! -
சென்னை எல்லையில் புது பேருந்து நிலையம்! பிரம்மாண்ட கிரீன்ஃபீல்ட் பஸ் ஸ்டாண்ட்! எங்க இருக்கு தெரியுமா -
2030-க்கு பிறகும் இந்திய IT துறை காணாமல் போய்விடும்.. டிசிஎஸ் சிஇஓ கிருதிவாசன் சொன்ன முக்கிய விஷயம்! -
"நீங்களே 4 முறை ஆர்எஸ்எஸ் நிகழ்ச்சிக்கு போனீங்கள்!" நீதிபதியை பார்த்து கெஜ்ரிவால் சொன்ன வார்த்தை! -
படுபாவி எதுக்கு வந்தீங்க? லெஃப்ட் ரைட் வாங்கிய ராமதாஸின் செல்ல மகள்! ஸ்டன்னாகி நின்ற ஜிகே மணி? -
அஜிதாவை திமுகவில் சேர்ப்பதற்கு முன்.. ஸ்டாலின் டீமிடம் இருந்து சென்ற வார்னிங்.. என்ன நடந்தது? -
நீலாங்கரை வீட்டில் ஏணி போட்டு காம்பவுண்ட் சுவரில் ஏறிய விஜய்! மரக்கிளையை பிடித்து கொண்டு செய்த செயல் -
சிறகடிக்க ஆசை: ரோகிணி சொன்ன ஒரே ஒரு உண்மை! விஜயா வசமா சிக்கியாச்சு.. அண்ணாமலை எடுத்த முடிவு -
திடீர் அதிமுக சப்போர்ட்.. என்னாச்சு திருமாவளவனுக்கு.. குழப்பி எடுக்கும் விசிக.. அறிவாலயம் குழப்பம்! -
தங்கம் விலையில் நடக்க போகும் சுனாமி.. எச்சரித்த பிரபல வங்கி.. கிராமிற்கு ரூ.2500க்கும் மேல் குறையும்.! -
தமிழ் புத்தாண்டு பலன் 2026: மேஷம் முதல் மீனம் வரை.. 12 ராசிகளுக்கான பலன்கள்.. யாருக்கு அதிர்ஷ்டம்? -
நல்ல பாம்பு கடித்த சிறுவனை கங்கையில் 12 மணி நேரம் மிதக்க விட்ட பெற்றோர்.. உடனே அதிசயம் நடந்ததா












Click it and Unblock the Notifications