நீங்க எந்த வாட்ச் கட்டுறீங்க? முள் கடிகாரத்துல இவ்ளோ “மேட்டரா” - ஜேம்ஸ் வசந்தன் சொல்றாரு கேளுங்க
சென்னை: டிஜிட்டல் கடிகாரத்தைவிட முள் கடிகாரத்தை பயன்படுத்துவதால் ஏற்படும் பயன்கள் குறித்து அறிவியல்பூர்வமான சுவாரஸ்ய தகவலை பகிர்ந்து இருக்கிறார் இசையமைப்பாளர் ஜேம்ஸ் வசந்தன்.
ஒரு காலத்தில் கவுரவமான பொருளாக பார்க்கப்பட்டு வந்த கடிகாரம் தற்போது செல்போனில் வருகையால் அதிகம் பயன்படுத்தப்படாமல் உள்ளது. திருமணம், பணி நேர்காணல், தேர்வு போன்ற முக்கிய தருணங்களுக்கு மட்டுமே பலரும் கடிகாரம் அணிகிறார்கள்.
அதுவும் இப்போதெல்லாம் ஸ்மார்ட் வாட்ச் வந்துவிட்டதால் பெரும்பாலானோர் அதை அணிந்துகொண்டு இருக்கிறார்கள். இதனால் காலம்காலமாக இருந்து வரும் முள் கடிகாரங்களின் பயன்பாடு குறைந்து இருக்கிறது.

ஜேம்ஸ் வசந்தன்
இந்த நிலையில் இசையமைப்பாளர் ஜேம்ஸ் வசந்தன் முள் கடிகாரத்தின் சிறப்புகள் குறித்து பேஸ்புக்கில் அவர் வெளியிட்டு இருக்கும் பதிவு நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. அதில், "எந்தவிதக் கடிகாரத்தைப் (Analog or Digital) பயன்படுத்துகிறோம் என்பது அவ்வளவு பெரிய விஷயமா எனா? ஆம், பெரிய விஷயந்தான்.

அறிவியல் - உளவியல்
இன்றைய Digital கடிகாரங்களைப் பார்ப்பவரைக் காட்டிலும், பழைய (Analog) தொழில்நுட்பக் கடிகாரத்தை பார்ப்பவர்க்கு எவ்வளவு நேரம் செலவழித்திருக்கிறோம்; இன்னும் எவ்வளவு நேரம் இருக்கிறதென்கிற தகவல்களும் கூடவே உணர்த்தப்படும். இது அறிவியல் - உளவியல் ஆய்வு. எப்படி என்று பார்ப்போம்.

வித்தியாசம்
எடுத்துக்காட்டாக, டிஜிட்டல் கடிகாரத்தைப் பாருங்கள். அது 9:30 என்கிற நேரத்தைக் காட்டுகிறது. அது இப்போது என்ன நேரம் என்பதைச் சொல்கிறது. அவ்வளவுதான். அனலாக் எனப்படும் முள் கடிகாரத்தைப் பாருங்கள். அதிலுள்ள தகவலின் ஆழத்தைப் பாருங்கள். இங்கு நாம் என்ன காண்கிறோம்? 11:55 அவ்வளவுதானா? இல்லை, அதோடு கூட வேறு சில செய்திகளும் உணர்த்தப்படுகின்றன.

கூடுதல் தகவல்
இந்த படத்தை பாருங்கள். காலை எவ்வளவு நேரம் செலவழித்தோம், இரவுக்கு இன்னும் எவ்வளவு நேரம் உள்ளது. மாலையாக இன்னும் எவ்வளவும் நேரம் உள்ளது என்பதை அது முள் கடிகாரம் காட்டுகிறது. அதுதான் நம்மையும் அறியாமல் நம் மூளை புரிந்துகொள்கிற, கணக்கிடுகிற தகவல். இதற்கு நாம் தனிப்பட்ட சிரத்தை எடுத்துக்கொள்ள வேண்டியதில்லை. தானாக இயல்பாக நம் வாழ்க்கை முறையால் நம் மூளை கிரகித்துக்கொள்கிற விஷயம். அதுவே, டிஜிட்டல் கடிகாரத்தைப் பார்க்கும்போது இந்த பிற தகவல்களை நாம் சிரத்தை எடுத்து, சிந்தித்து, கணக்கிட வேண்டியதாய் இருக்கும்." என்று குறிப்பிட்டு உள்ளார்.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications