இசையமைப்பாளர் சங்கர் கணேசுக்கு திடீர் மூச்சுத்திணறல்.. ஐசியூவில் அனுமதி.. சென்னையில் தீவிர சிகிச்சை

Subscribe to Oneindia Tamil

சென்னை: பிரபல இசையமைப்பாளர் சங்கர் கணேஷ் திடீர் மூச்சுத்திணறால் பாதிக்கப்பட்டுள்ளார். இதையடுத்து அவர் சென்னை வடபழனியில் உள்ள சிம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டள்ளார். ஐசியூவில் அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. திமுகவின் முப்பெரும் விழா இன்று கரூரில் நடைபெற உள்ளது. அங்கு பாடல் பாடுவதற்காக அவர் புறப்பட்டு சென்ற நிலையில் மூச்சுத்திணறலால் பாதிக்கப்பட்டுள்ளார்.

தமிழ் சினிமாவில் முன்னணி இசையமைப்பாளராக வலம் வந்தவர் சங்கர் கணேஷ். தற்போது வயது முதிர்வால் அவருக்கு வாய்ப்புகள் குறைந்துள்ளது. சங்கர் கணேஷ் சென்னையில் வசித்து வருகிறார். திரைப்படங்களில் வாய்ப்பு இல்லாவிட்டாலும் கூட இசை நிகழ்ச்சி உள்பட பிற நிகழ்ச்சிகளில் அவர் தொடர்ந்து பங்கேற்று வருகிறார்.

music-director-shankar-ganesh-admitted-hospital-due-to-breathing-issue

இப்படி மிகவும் ஆக்டிவ்வாக இருந்து வருகிறார் சங்கர் கணேஷ்க்கு இன்று திடீரென்று அவருக்கு மூச்சுத்திணறல் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து அவர் வடபழனியில் உள்ள சிம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு ஐசியூவில் அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

கரூரில் இன்று மாலையில் திமுகவின் முப்பெரும் விழா நடைபெற உள்ளது. இந்த விழாவில் பாடல் பாடுவதற்காக சங்கர் கணேஷ் சென்னையில் இருந்து காரில் புறப்பட்டார். அந்த சமயத்தில் அவருக்கு மூச்சுத்திணறல் ஏற்பட்ட நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

சங்கர் கணேஷ் தனது இளமை பருவத்தில் விஸ்வநாதன் - ராமமூர்த்தி ஆகியோரிடம் உதவியாளராக சேர்ந்தார். அதன்பிறகு 1967ம் ஆண்டு ‛மகராசி' திரைப்படத்தின் வாயிலாக இசையமைப்பாளராக திரைப்பயணத்தை தொடங்கினார். எம்ஜிஆரின் ‛ஆட்டுக்கார அலமேலு' திரைப்படத்தில் அவர் பெயர் பெற்றார். அதன்பிறகு 1980, 1990 காலக்கட்டத்தில் கொடிக்கட்டி பறந்தார்.

குறிப்பிட்டு சொல்ல வேண்டும் என்றால் தமிழில் ‛மகராசி, ஆட்டுக்கார அலமேலு, சிவப்பு மல்லி, நீதி பிழைத்தது, சட்டம் ஒரு இருட்டறை, சிதம்பர ரகசியம், ஆனந்த் கண்ணீர், சம்சாரம் அது மின்சாரம், ஊர்க்காவலன், என் ரத்தத்தின் ரத்தமே உள்பட 80க்கும் அதிகமான திரைப்படங்களுக்கு இசையமைத்துள்ளார். மொத்தமாக பார்த்தால் தமிழ், தெலுங்கு, கன்னடம் என்று சுமார் 100க்கும் அதிகமான திரைப்படங்களுக்கு இசையமைத்தார்.

அதன்பிறகு தற்போது இசை நிகழ்ச்சிகளில் பங்கேற்று வரும் நிலையில் மூச்சுத்திணறலால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இதனால் அவரது ரசிகர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+