முஸ்லிம்கள்,கிறிஸ்துவர்கள் சாத்தான் பிள்ளையா மாறிட்டாங்க.. அக்கிரமங்களுக்கு அவர்களே பொறுப்பு -சீமான்
சென்னை: இஸ்லாமியர்களும், கிறிஸ்துவர்களும் சாத்தானின் பிள்ளைகள் என்றும், அவர்களால்தான் நாடு வீணாகிவிட்டது என்றும் நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் பேசி இருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
சென்னை வள்ளுவர் கோட்டத்தில் நேற்று மணிப்பூரில் குகி பழங்குடியின மக்களுக்கு எதிரான அநீதியை கண்டித்து நாம் தமிழர் கட்சி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் கலந்துகொண்டு உரையாற்றினார். அப்போது அவர் பேசிய கருத்து பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

அவர் பேசுகையில், "இலங்கையில் நம் தமிழின மக்களுக்கு நேர்ந்த கொடுமைகளையும், பெண்களுக்கு எதிரான அக்கிரமங்களையும் கண்கூடாக பார்த்தோம். எந்த கொடுமைகள் என்றால் என்ன என்று நமக்கு தெரியும். எனவே எங்கோ ஒரு மூளையில் உள்ள மணிப்பூருக்காக பேசுகிறோம். அதனால் நமக்கு எந்த லாபமும் இல்லை.
மணிப்பூரில் இருந்து வந்து நமக்கு யாரும் ஓட்டு போடப்போவதும் இல்லை. இங்கு இருக்கக்கூடிய கிறிஸ்துவர்களும் நமக்காக வாக்களிக்கப்போவது கிடையாது. நாம் நினைத்துக்கொண்டு இருக்கிறோம், இஸ்லாத்தையும் கிறிஸ்துவத்தையும் ஏற்றுக்கொண்டவர்கள் தேவனின் பிள்ளைகள் என்று. அவர்கள் சாத்தானின் குழந்தைகளாக மாறி பல ஆண்டுகளாகிவிட்டது.
சும்மா போய் தேவாலயத்தில் தேவரே வாரீர் வாரீர் என்று பாடிவிட்டு, கடைசியில் யார் யாருக்கோ நாட்டை கொடுத்து இருக்கிறார்கள். இந்த நாட்டில் நடந்திருக்கும் அநீதி அக்கிரமங்களுக்கு பெரிய பொறுப்பு ஏற்க வேண்டியதே இஸ்லாமியர்களும், கிறிஸ்துவ மக்களும் தான். தொடர்ச்சியாக பல ஆண்டுகள் 18 விழுக்காடு வாக்குகளை திமுகவுக்கும் காங்கிரஸுக்கும் போட்டு போட்டு இந்த நாட்டை தெருவில் போட்டவர்கள் இவர்கள்தான்.
சகிக்க முடியாத ஊழல், லஞ்சம், சீர்கேடான நிர்வாகத்துக்கு காரணம் இவர்கள்தான். இவர்களிடம்போய் நாம் எங்கு பாவத்தை கொடுப்பது. பாவங்கள் மன்னிக்கப்படுகிறது என்றும். பெரும்பாவமே அவர்கள்தான். அவர் எங்கு மன்னிப்பது. இன்னும் பாருங்கள், இவர்கள்தான் எங்களை பாதுகாப்பார்கள்.

இஸ்லாமியர்களுக்கு திமுகதான் பாதுகாப்பு. ஆமா. 20 வருடமாக வெளியில் விடாமல் சிறைக்கு உள்ளேயே வைத்து இருப்பது எவ்வளவு பெரிய பாதுகாப்பு. மறுபடியும் இஸ்லாமிய மக்களிடம் வாக்கு கேட்பார்கள். இந்த நாடாளுமன்ற தேர்தலில் பேசுவார்களா இல்லையா என்று பாருங்கள். அப்பாவி இஸ்லாமிய சிறைவாசிகளை விடுதலை செய்ய என்று.
நீங்கள் விடுதலை செய்யுங்கள். நாங்கள் நாம் தமிழர் கட்சியினரும் உங்களுக்கு வாக்களிக்கிறோம். விடுதலை செய்யுங்கள்! செய்ய மாட்டீர்கள். 7 தமிழர் விடுதலையில் நீங்கள் காங்கிரஸுக்கு பயந்தீர்கள். இஸ்லாமிய சிறை கைதிகள் விடுதலையில் நீங்கள் பாஜகவுக்கு பயந்தீர்கள். நாம் எதிர்த்து அழிக்க வேண்டியது காங்கிரஸையும் பாஜகவையும் மட்டுமல்ல. அவர்களை தோலில் தூக்கி வைத்திருக்கும் திமுகவையும் அதிமுகவையும் சேர்த்து அழிக்க வேண்டிய கடமை நமக்கு உள்ளது.
அவன் தேவையே இல்லாதவன். இந்திய நாட்டுக்கே தேவை கிடையாது. எந்த மாநிலத்துக்கும் தேவை கிடையாது. குறிப்பாக தமிழ்நாட்டுக்கு சுத்தமாக தேவை இல்லை. எதற்காக அவர்கள் நிற்பார்கள். உன் மொழிக்காக. உன் மொழி செத்துப்போனது. அப்போது வந்தார்களா? கச்சத்தீவு மீட்பதில் உன் நிலைபாடு? காவிரியில் காங்கிரஸ் பாஜகவின் நிலைபாடு? மேகதாது அணையில் இருவருக்கும் ஒரே நிலைபாடுதான். அணு உலை திறந்ததுதான். ஒரு இடத்தில் உனக்காக நின்றிருக்கிறார்களா? எதற்காக இவர்கள்?" என்று கேள்வி எழுப்பினார்.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications