Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

இஸ்லாமிய முறையில் ஜாதி வேற்றுமை இல்லையே? எதுக்காக இட ஒதுக்கீடு? பாயிண்ட்டை புட்டு புட்டு வைத்த பாஜக

Subscribe to Oneindia Tamil

சென்னை: இஸ்லாமிய மற்றும் கிருஸ்துவ மதங்களில் / வாழ்க்கை முறையில் ஜாதிய வேற்றுமைகளே இல்லை எனும் போது எதற்காக இட ஒதுக்கீடு?" என்று கேள்வி எழுப்பியிருக்கிறது தமிழக பாஜக.

மேற்கு வங்கத்தில் கடந்த 2010-ம் ஆண்டுக்கு பிறகு வழங்கப்பட்ட அனைத்து ஒபிசி சான்றிதழ்களும் ரத்து செய்யப்படுவதாக கொல்கத்தா உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்திருக்கிறது. இந்த தீர்ப்பின்மூலம் சுமார் 5 லட்சம் சான்றிதழ்கள் செல்லாததாக மாறும் நிலைமை ஏற்பட்டுள்ளது.

Muslims Reservation and Tamil Nadu BJP Narayanan Thirupathy says about Kolkata High Court judgement

தீர்ப்பு: இந்த தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்யவோம் என்றும், இதர பிற்படுத்தபட்டோர் இடஒதுக்கீடு தொடரும் என்றும் முதல்வர் மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார்.. வீடு வீடாக ஆய்வு நடத்தி, மசோதாவை தயாரித்து, சட்டசபையில் நிறைவேற்றியிருப்பதாகவும், மத்திய அமைப்புகளை பயன்படுத்தி சட்டத்தை முடக்க பாஜக முயற்சிப்பதாகவும் மம்தா குறறஞ்சாட்டியிருக்கிறார்.

இப்படிப்பட்ட சூழலில், இந்த தீர்ப்பு குறித்த விளக்கப்பதிவு ஒன்றினை தமிழக பாஜக துணைத்தலைவர் நாராயணன் திருப்பதி பதிவிட்டுள்ளார்.. அந்த பதிவில் உள்ளது இதுதான்:

ஹைகோர்ட்: "மம்தாவின் திரிணமுல் காங்கிரஸ் அரசு 2010லிருந்து பல சமூகங்களை இதர பிற்பட்ட வகுப்புகள் என அறிவித்தது சட்ட விரோதம் என கொல்கத்தா உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

ஒரு சமூகத்தை பிற்படுத்தப்பட்ட சமூகம் என தரவுகளின் அடிப்படையிலோ, விஞ்ஞான பூர்வமாகவோ, சமுக ரீதியாக முன்னேறவில்லை என்ற ஆய்வின் அடிப்படையில் அறிவிக்காமல், அரசு வேலைகளில் பிரதிநிதித்துவம் இல்லை என்பதால் பின்தங்கிய சமூகமாக அறிவித்தது செல்லாது என்றும், அப்படி அது தான் அளவுகோல் என்றால், பொது பட்டியலில் உள்ள அனைத்து சமூகத்தினரையும் ஆய்வு செய்திருக்க வேண்டும் என்றும் கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.

இஸ்லாம் மதம்: 2011 க்கு முன்னர், மேற்கு வங்காளத்தில் 108 இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் பட்டியலில், 55 ஹிந்து மதத்தை சேர்ந்தவர்களும், 53 இஸ்லாமிய மதத்தை சேர்ந்தவர்களும் இருந்தார்கள்.

அப்போதே மத ரீதியான இட ஒதுக்கீட்டை பாஜக எதிர்த்தது குறிப்பிடத்தக்கது. மம்தா பானர்ஜி ஆட்சிக்கு வந்த பின் 2011ல் ஏற்கனவே இருந்த இதர பிற்படுத்தப்பட்ட ஜாதிகள் பட்டியலில் மேலும் 71 வகுப்பினரை சேர்த்ததில், 65 ஜாதிகள் இஸ்லாமிய மதத்தை சேர்ந்தவை என்பதும் 6 வகுப்பினர் மட்டுமே ஹிந்துக்கள் என்பதும் கவனத்தில் கொள்ள வேண்டியவை.

இந்துக்கள்: தற்போதைய பட்டியலின் படி 179 ஜாதிகளில், 118 இஸ்லாமிய மதத்தை சேர்ந்தவர்களும், 61 ஹிந்து மதத்தை சேர்ந்தவர்களும் உள்ளனர். மேற்கு வங்காளத்தில் சுமார் 70 சதவீதம் ஹிந்துக்களும், 30 சதவீதம் இஸ்லாமியர்களும் உள்ளனர் என்ற நிலையில் இட ஒதுக்கீட்டில் இஸ்லாமியர்களுக்கு அதிக பெரும்பான்மை அளிக்கப்பட்டுள்ளது.

இஸ்லாமியர்களின் ஓட்டுக்காக சட்ட விரோதமாக செயல்பட்டுள்ளது திரிணமுல் காங்கிரஸ் அரசு. ஓட்டுக்காக, அது தரும் பதவிக்காக, அந்த பதவி தரும் வசதிக்காக எதிர்க்கட்சிகள் இதர பிற்படுத்தப்பட்ட மக்களின் உரிமைகளை பறித்து, சட்ட விரோதமாக இஸ்லாமியர்களுக்கு வழங்குவதாக பிரதமர் நரேந்திர மோடி குற்றம் சாட்டியதை, மத ரீதியாக பேசுகிறார் என்று விமர்சித்தவர்களின் முகமூடியை கிழித்தெறிந்துள்ளது கொல்கத்தா உயர்நீதி மன்றம்.

காங்கிரஸ்: மத ரீதியிலான இட ஒதுக்கீடு இந்த நாட்டை பிளக்கும் என்று அண்ணல் அம்பேத்கர் சொன்னதை ஏற்க மறுக்கின்றன திமுக, காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள். கர்நாடாகாவிலும் இதே போன்றதொரு சட்ட விரோத செயலை காங்கிரஸ் செய்திருக்கிறது. அதற்கும் இதே நிலை தான் வரப்போகிறது. மதம் மாறிய இஸ்லாமியர்களுக்கு பெருமளவில் பிற்படுத்தப்பட்ட சமூகம் என்ற சான்றிதழ்கள் வழங்கப்பட்டிருக்கின்றன.

'இது பாஜகவின் தீர்ப்பு' என்றும் 'நீதிமன்றம் எப்படி இந்த தீர்ப்பை வழங்கலாம்? இது பிரிவினையை உருவாக்கும்' என்றும் பிரிவினையை விதைத்த, ஓட்டுக்காக இதர பிற்படுத்தப்பட்ட மக்களின் உரிமைகளை பறித்த மம்தா பானர்ஜி கூறியிருக்கிறார். மதம் என்பது வாழ்க்கை முறை. ஹிந்து மதத்தில் இருந்த, இருக்கிற ஜாதிய ஏற்ற தாழ்வுகளால் தான் இட ஒதுக்கீடு உள்ளது என்பது அனைவரும் அறிந்த ஒன்று.

ஜாதிய வேறுபாடுகள்: ஆனால், இஸ்லாமிய மற்றும் கிருஸ்துவ மதங்களில் / வாழ்க்கை முறையில் ஜாதிய வேற்றுமைகளே இல்லை எனும் போது எதற்காக இட ஒதுக்கீடு? ஓட்டுக்காக, பதவிக்காக இதர பிற்படுத்தப்பட்ட மக்களின் உரிமைகளை பறித்து சிறுபான்மையினருக்கு சட்டவிரோதமாக வாரி வழங்கியுள்ளது மேற்கு வங்காள அரசு என்பதை தெளிவாக்கியுள்ளது அம்மாநில உயர்நீதி மன்றம்.

பாஜக மற்றும் பிரதமர் நரேந்திர மோடி நாட்டு மக்களிடையே சில நாட்களாக முன்வைத்த உண்மையை உரக்க சொல்லியிருக்கிறது கொல்கத்தா உயர்நீதிமன்றம்" என நாராயணன் திருப்பதி குறிப்பிட்டிருக்கிறார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+