சேர்ந்த வேகத்தில் பாஜகவில் இருந்து விலகிய இஸ்லாமியர்கள்.. 12 மணி நேரத்தில் அண்ணாமலைக்கே ‘ட்விஸ்ட்’!
சென்னை: அண்ணாமலை முன்னிலையில் பாஜகவில் சேர்ந்த இஸ்லாமியர்கள் 12 மணி நேரத்தில் பாஜகவின் அடிப்படை உறுப்பினர் பதவியில் இருந்து விலகி உள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
நாகப்பட்டினம் லோக்சபா தொகுதியில் திமுக கூட்டணியில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் வை. செல்வராஜ், அதிமுக சார்பில் சுர்சித் சங்கர், பாஜக சார்பில் எஸ்.ஜி.எம் ரமேஷ், நாம் தமிழர் கட்சி சார்பில் கார்த்திகா உள்ளிட்டோர் களமிறங்கி உள்ளனர்.

இந்நிலையில், பாஜக வேட்பாளர் எஸ்.ஜி.எம் ரமேஷை ஆதரித்து பாஜக மாநில தலைவர் அண்ணாமலை நேற்று முன்தினம் பிரச்சாரம் மேற்கொண்டார். நாகை அவுரி திடலில் பாஜக வேட்பாளர் ரமேஷை ஆதரித்து பாஜக தலைவர் அண்ணாமலை பிரச்சாரம் மேற்கொண்டார்.
அப்போது நாகூர் பகுதியை சேர்ந்த சமது என்பவர் மேலும் சில இஸ்லாமியர்களோடு பாஜகவில் இணைந்தார். இந்நிலையில், அண்ணாமலை முன்னிலையில் பாரதிய ஜனதா கட்சியில் இணைந்து 12 மணி நேரத்தில் அவர் பாஜகவில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார்.
ஒட்டுமொத்த சமுதாயமும், தனது குடும்பமும் பாஜகவில் இணைந்ததற்கு எதிர்ப்பு தெரிவித்ததால் பாஜகவில் இருந்து விலகுவதாக கூறியுள்ளார் சமது. நாகூர் தர்காவில் பரம்பரை ஆதினமாக இருக்கும் சமது, அதிமுகவில் இருந்து, அமமுகவுக்கும், பின்னர் காங்கிரஸ் கட்சிக்கும் மாறினார்.
தேர்தல் சமயத்தில், காங்கிரஸ் கட்சியில் இருந்து பாஜகவுக்கு மாறிய நிலையில், தனது குடும்பத்தினரே எதிர்ப்பு தெரிவித்ததால் பாஜகவில் இருந்தும் விலகியுள்ளார். தனது அடுத்தகட்ட அரசியல் நகர்வை விரைவில் தெரிவிக்கப் போகிறாராம்.
-
காங்கிரஸின் டபுள் கேம்.. வேலையை காட்டிய ராகுல் காந்தியின் டீம்! கேரளாவில் ஷாக் -
திராவிட நடுக்கம்! அண்ணாமலையின் வலையில் விழும் திமுக, அதிமுக புள்ளிகள்.. களமிறங்கும் மாஜி IAS, IPS! -
அண்ணாமலையின் ஸ்கெட்ச்.. பாஜகவுக்கு இல்லை! அதிமுகவுக்குதான்! எடப்பாடி பழனிசாமி ஷாக்! -
22 எம்பிக்கள் உள்ள திமுக ஏன் பாஜகவை நோக்கி போகணும்? டெல்லி லாபிக்கு பிரபலம் கொடுத்த நச்சுப் பதிலடி -
"அண்ணாமலையை விட்ற கூடாது!" புதிய இயக்கத்தில் முதல் ஆளாக இணைந்த கூமாபட்டி தங்கபாண்டி! பின்னணி என்ன? -
இசட் பிரிவு பாதுகாப்பு விவகாரம்.. கட்சி தொடங்கிய கையோடு மத்திய அரசுக்கு அண்ணாமலை கடிதம்? -
தாமரையை கழட்டி வெச்சிட்டு அண்ணாமலை பின்னாடி போகும் ஃபேன்ஸ்.. 2 நாளில் திருப்பம்! பாஜக எதிர்பார்க்கல -
விஜய் Vs உதய் Vs அண்ணாமலை? திராவிடக் கடப்பாரைகளை வளைத்த Gen Z! இளைஞர்களால் மாறும் அரசியல் களம்! -
அண்ணாமலையை நம்பி ஏமாறாதீங்க! ஆற்றில் ஒரு கால், சேற்றில் ஒரு கால் வேண்டாம்! நயினார் அட்வைஸ் -
அண்ணாமலை மாயமான்.. ஆர்எஸ்எஸ்-இன் புதிய அவதாரம்.. வீரமணி விமர்சனம் -
கமல், கார்த்திக் கூடதான் கட்சி ஆரம்பிச்சாங்க! என்னாச்சு? அண்ணாமலைலாம் ஒரு ஆளே இல்லை! முஸ்தபா விமர்சனம் -
"தமிழகத்தில் அண்ணாமலைக்கும் மன்சூர் அலிகானுக்கும் தான் போட்டி!" நக்கலடித்த தவெக எம்எல்ஏ முஸ்தபா












Click it and Unblock the Notifications