நல்லகண்ணுவை காப்பாற்ற அரசு மருத்துவர்கள் எடுத்த பெரு முயற்சி - முத்தரசன் சொன்ன முக்கிய தகவல்
சென்னை: இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் நல்லகண்ணு இன்று சென்னை ராஜீவ் காந்தி மருத்துவமனையில் காலமானார். அவருக்கு வயது 101. உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டிருந்த நல்லகண்ணு சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். நல்லகண்ணுவை காப்பாற்ற அரசு மருத்துவமனை மருத்துவர்கள் மிகப்பெரிய முயற்சி எடுத்தனர். இதுவே தனியார் மருத்துவமனை என்றால் 6 மாதங்களுக்கு முன்பே ஐயா இறந்திருப்பார் என்று சிபிஐ கட்சியின் முத்தரசன் கூறியுள்ளார்.
இந்தியாவின் மூத்த அரசியல் தலைவரும், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் நிர்வாகியுமான நல்லகண்ணு உடல்நலக் குறைவால் சென்னையில் காலமானார். எளிமை, நேர்மைக்கு பெயர் பெற்ற நல்லகண்ணு மறைவுக்கு அனைத்துக் கட்சி தலைவர்களும் இரங்கல் தெரிவித்து வருகிறார்கள். நல்லகண்ணு கடந்த சில மாதங்களாகவே உடல்நலக் குறைவால் பாதிக்கப்பட்டு சென்னை ராஜீவ் காந்தி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார்.

அரசு மருத்துவர்களின் முயற்சி
இந்நிலையில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் முன்னாள் மாநிலச் செயலாளர் முத்தரசன் சென்னையில் செய்தியாளர்களிடம் கூறுகையில், "ஐயா நல்லகண்ணு ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் தொடர்ந்து சிகிச்சை பெற்று வந்தார். உண்மையில் இந்த சந்திப்பில் ராஜீவ் அரசு மருத்துவமனை முதல்வர், மருத்துவர்கள், செவிலியர்கள், ஊழியர்களை ஆகியோரை நான்கு வெகுவாக பாராட்ட கடமைப்பட்டுள்ளேன்.
இதுவே அவர் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தால் 6 மாதங்களுக்கு முன்னரே இறந்திருப்பார். இங்குள்ள மருத்துவர்கள் நல்லகண்ணுவை காப்பாற்றுவதற்காக மிகப்பெரிய முயற்சி எடுத்தனர் சவாலான பணியை அர்ப்பணிப்புடன் செய்தார்கள். அவர்களின் முயற்சி தோற்று போகவில்லை. இயற்கையின் அழைப்பை யாராலும் நிராகரிக்க முடியாது. அதனடிப்படையில் நல்லகண்ணு இயற்கையின் அழைப்பில் இருக்கிறார்.
முதல்வருக்கு நன்றி
அவரின் உடல் பாலன் இல்லத்தில் நாளை மாலை 3.30 மணி வரை பொது மக்களின் அஞ்சலிக்காக வைக்கப்படும். அதன் பிறகு அவரின் உடல் அரசு மருத்துவமனை மருத்துவக்கல்லூரிக்கு தானமாக ஒப்படைக்கப்படும். முதலமைச்சர் பலமுறை இங்கு வந்து நல்லகண்ணு ஐயாவின் உடல்நலம் குறித்து கேட்டறிந்தார். அவரின் உடலை அரசு மரியாதையுடன் அடக்கம் செய்வேன் என்று முதலமைச்சர் அறிவித்திருப்பது மிக்க மகிழ்ச்சி. அவருக்கு இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்" என்றார்.
-
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்! -
அழுதபடி அலிசா அப்துல்லா புகார்.. ஒரே நாளில் திருச்சி சூர்யாவை தூக்கிய போலீஸ்! தலைமறைவான முக்தார்? -
பயங்கரமான ஆளுங்க விஜய்! காங்கிரஸுக்கு தான் சீட்டு.. ஆனா எம்பி எங்களுங்க! ராஜ்சபா சீட்டு யாருக்கு? -
துன்பத்திலும் ஒரு இன்பம்.. மத்திய அமைச்சராகும் நயினார்! தமிழக பாஜக புதிய தலைவர் இவரா? கலகல கமலாலயம்! -
ரூ.72 லட்சம் பணம் அக்கவுண்டில் ஏறியதும் ஊரைவிட்டே ‘எஸ்கேப்’.. மோசடி புகாரில் தவெக நிர்வாகி கைது! -
தவெக பெண் எம்எல்ஏவை அவமானப்படுத்திய சென்னை மேயர் பிரியா? குத்துவிளக்கேற்றுவதில் வெடித்த மோதல்!












Click it and Unblock the Notifications