நேதாஜி + பசும்பொன் முத்துராமலிங்க தேவர்+ முக்குலத்தோர்- அப்படி என்னதான் தொடர்பு? வரலாறுதான் என்ன?
சென்னை: இந்திய விடுதலை வரலாற்றில் மகத்தான அத்தியாயத்தை எழுதியவர் மாவீரன் நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ். 1897-ம் ஆண்டு இதே ஜனவரி 23-ந் தேதி பிறந்து இந்திய சரித்திரத்தில் அழியா பக்கங்களாக தலைமுறைகள் பல கடந்தும் எழுச்சியின் வீரத்தின் அடையாளமாக திகழ்கிறவர் நேதாஜி சுபாஷ் சந்திர போஸ். நேதாஜி சுபாஷ் சந்திரபோஸுக்கும் தமிழ்நாட்டுக்கும் குறிப்பாக பசும்பொன் முத்துராமலிங்க தேவர், முக்குலத்தோர் சமூகத்துக்குமான தொடர்பு விரிவாக பேசப்பட வேண்டியதும் ஆவணப்படுத்தப்பட வேண்டியதுமானதுமாகும்.

மேற்கு வங்கம் மாநிலம் கொல்கத்தாவில் ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர்
30-ந் தேதி ஆயிரக்கணக்கான தமிழர்கள் பால் குடம், முளைப்பாரி ஆகியவற்றுடன் ஊர்வலமாக சென்று "வழிபாடு" நடத்தக் கூடிய இடமாக இருப்பது கொல்கத்தாவில் உள்ள அகில இந்திய பார்வார்டு பிளாக் கட்சி அலுவலகத்தின் அருகே உள்ள முத்துராமலிங்க தேவர் சிலைதான். கொல்கத்தாவில் வசிக்கும் முக்குலத்து ஜாதியினரால் இந்த விழா கொண்டாட்டங்கள் நடத்தப்படுகின்றன என ஒதுங்கி செல்ல முடியாது. ஏனெனில் நேதாஜியின் பிறந்த மண்ணாகிய மேற்கு வங்கம், பார்வார்டு பிளாக், பசும்பொன் முத்துராமலிங்க தேவர், முக்குலத்தோர் ஜாதி ஆகியவற்றுடனான தொடர்பும் இணைப்பும் முக்கியமானதாகும்.

தேச விடுதலைக்கான அறவழிப் போராட்டத்தை காந்தியடிகள் தலைமையில் காங்கிரஸ் நடத்திய காலத்தில் நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் ஆயுதப் போராட்டத்தை கையில் எடுத்தார். ஜெர்மனியின் ஹிட்லர், ஜப்பான் ஆதரவுடன் நேதாஜி கட்டமைத்தது இந்திய தேசிய ராணுவம். இந்திய தேசிய ராணுவத்தில் பெருமளவு இணைந்தவர்கள் சிங்கப்பூர், மலேசியா உள்ளிட்ட தென்கிழக்கு ஆசியநாடுகள் வாழ் இந்தியர்கள். இவர்களில் பெரும்பகுதியானோர் தமிழர்கள். தமிழ்நாட்டின் தென்மாவட்டங்களை சேர்ந்த முக்குலத்தோர் எனப்படுகிற தேவர் ஜாதியினர் வாழ்வாதாரத்துக்காக பிரிட்டிஷ் இந்தியா காலத்தில் சிங்கப்பூர், மலேசியா உள்ளிட்ட நாடுகளில் உழைத்து வந்தனர். பிரிட்டிஷ் இந்தியாவுக்கு எதிரான விடுதலைப் போராட்டத்தில் தங்களது காத்திரமான பங்களிப்பை வழங்கி சிறையேகி மாண்டவர்கள் பல்லாயிரம் பேர். இப்படியானவர்கள் நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் தலைமையிலான இந்திய தேசிய ராணுவத்தில் பெருந்திரளாக திரண்டு வலிமை சேர்த்தனர். அவர்கள் மட்டுமல்ல தமிழ்நாட்டில் இருந்தும் பெரும் எண்ணிக்கையில் நேதாஜியின் இந்திய தேசிய ராணுவத்தில் இணைந்தவர்கள் முக்குலத்தோர். தமிழ்நாட்டு முக்குலத்தோர், நேதாஜி படையில் இணைய முதன்மை காரணமாக இருந்தவர்தான் பசும்பொன் முத்துராமலிங்க தேவர். நேதாஜி தொடங்கிய பார்வார்டு பிளாக் கட்சியின் தமிழ்நாட்டு முகமாக இருந்தவர். அக்கட்சியில் அகில இந்திய பொறுப்பு வகித்தவர். அதனால் பார்வார்டு பிளாக் கட்சியின் நிழல் இன்னமும் முக்குலத்தோர் வாழும் தென் தமிழ்நாட்டு மக்களிடம் நீடித்தபடியே இருக்கிறது.

நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் தமிழ்நாட்டு வருகைக்கு காரணமாக இருந்தவர்- அரவணைத்தவர்; அவருடன் பயணித்த முத்துராமலிங்க தேவர். நேதாஜியுடன் மிக நெருக்கமாக, வலதுகரங்களில் ஒருவராக திகழ்ந்தவர் முத்துராமலிங்க தேவர். நேதாஜி விமான விபத்தில் காலமானார் என்ற செய்தியை இன்றளவும் முக்குலத்தோர் மக்கள் ஏற்க மறுப்பார்கள். காரணம் நேதாஜி மறைந்துவிட்டார் என சொல்லப்பட்ட பல ஆண்டுகளுக்கு பின்னர் கூட நான் அவருடன் பேசிக் கொண்டிருக்கிறேன் என பகிரங்கமாக சொன்னவர் முத்துராமலிங்க தேவர். இத்தகைய பிணைப்பால்தான் தென் தமிழ்நாட்டு முக்குலத்து ஜாதியினரிடத்தில் சுபாஷ் என்கிற பெயரும் "போஸ்" என்பதும் குலப் பெயராகவே இணைந்து நிற்கிறது!

-
பணிகள் கிட்டத்தட்ட ஓவர்.. இனி 4 வழி இல்லை.. சென்னையின் முக்கிய பகுதியில் மிகப்பெரிய 6 வழி சாலை -
அலர்ட்..! 10000 ரூபாய்க்கு மேல் பணம் அனுப்பினால் 'லாக்'.. ஆர்பிஐ கொண்டு வரும் புது ரூல்ஸ்! -
தங்கத்தை மிஞ்சப்போகும்.. பலரின் வீட்டிலேயே இருக்கும் ஒரு குட்டி உலோகம்.. அடிக்குது ஜாக்பாட்! -
தென்னிந்திய தர்காக்கள் மற்றும் பள்ளி வாசல்கள் சங்கம் அதிமுகவிற்கு ஆதரவு! -
கடலூரில் நாளை விஜய் பிரச்சாரத்தால் உதயநிதி ஸ்டாலின் பிரச்சாரத்திற்கு அனுமதி மறுப்பு.. நடந்தது என்ன? -
ஐடி ஊழியர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த TCS.. மாச மாசம் பணம் சொளையா வரப்போகுது! -
சிறகடிக்க ஆசை: மீனாவிடம் முத்து மறைக்கும் உண்மை! விஜயா பற்றி அண்ணாமலைக்கு தெரிந்த பெரிய ரகசியம்! -
அமெரிக்காவை அலறவிட்ட பிரான்ஸ்! 129 டன் தங்கத்தை மீட்க "கோல்டன்" ஸ்கெட்ச்.. அப்போ இந்தியா பிளான் என்ன -
விஜய்யுடன் சேர்ந்து முதல்வராக முயன்ற எடப்பாடி! நான்தான் முறியடித்தேன்.. போட்டு உடைத்த செங்கோட்டையன் -
சிறகடிக்க ஆசை: விஜயாவின் மாற்றம்! முத்து, மீனாவை பெருமையாக பேசுறாங்களே! குடும்பத்தில் கொண்டாட்டம் -
ஈரான் வேலையை காட்டியது.. ஹார்முஸ்-ல் கப்பல் செல்ல அனுமதி மறுப்பு.. அமெரிக்கா ஷாக்! -
ரஷ்யா மாஸ்டர் பிளான்: இந்தியாவுக்கு ஜாக்பாட்.. சீனா உதவி.. ஒன்று கூடிய BRICS நாடுகளால் டிரம்ப் ஷாக்!












Click it and Unblock the Notifications