கறிக்கடைக்குள் காலையிலேயே கிளம்பிய பரபர.. நாளை கறிக்கடை லீவு.. திடீர்னு ஓடிவந்து தமிழக அரசு விளக்கம்
சென்னை: ஜனவரி 15ம் தேதி இறைச்சி கடைகளை மூட வேண்டும் என்று சென்னை மாநகராட்சி தரப்பில் ஏற்கனவே அறிக்கை வெளியாகியிருந்தது. இந்நிலையில், திடீரென புது புரளி ஒன்று சோஷியல் மீடியாவில் பரவி, பெரும் பரபரப்பை ஏற்படுத்திவிட்டது. ஆனால், இதற்கும் உரிய விளக்கம் அரசு தரப்பில் உடனடியாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
பொங்கல் பண்டிகையை இன்று தமிழர்கள் கோலாகலமாக கொண்டாடி வருகிறார்கள்.. தமிழ்நாட்டில் இந்த பண்டிகை இன்று முதல் 4 நாட்கள் சிறப்பாக கொண்டாடப்படுகிறது. இந்த பொங்கல் பண்டிகையானது விவசாயத்திற்கு உதவிய சூரியன், ஆடு, மாடு போன்ற கால்நடைகளுக்கு நன்றி செலுத்தும்விதமாக சிறப்பிக்கப்படுகிறது.

நாளை மாட்டு பொங்கல் கொண்டாடப்படுகிறது. விவசாயத்திற்கு மிக முக்கிய பங்கு ஆற்றிய மாடுகளை வணங்கக்கூடிய நாளாகும். எனவே, மாடுகளை குளிப்பாட்டி, கொம்புகளில் வண்ணம் பூசி, அலங்காரம் செய்து, பொங்கல் வைத்து கொண்டாடுவார்கள்... மாடுகளுக்கு நன்றி செலுத்தக்கூடிய இந்த தினத்தில்தான், தமிழர்களின் வீரத்தை போற்றக்கூடிய ஜல்லிக்கட்டு போட்டிகளும் நடத்தப்படும்.
திருவள்ளுவர் தினம்: இதே நாளில்தான் திருவள்ளுவர் தினமும் கொண்டாட்டப்படுகிறது. திருவள்ளுவரின் கருத்துகளைப் போற்றி, அவரது நெறிமுறைகளைப் பின்பற்றுவதற்கான அறிகுறியாகும். ஆடு, மாடு, பன்றி மற்றும் கோழி ஆகியன வதை செய்வதும், அவற்றின் இறைச்சியை விற்பனை செய்வதும் தடை செய்யப்படுகிறது. அன்றைய தினம், மாநகராட்சி பகுதியில் உள்ள இந்த இறைச்சி கடைகள் அனைத்தும் மூடப்பட வேண்டும் என்பது விதியாகும்.
அந்தவகையில், சென்னை மாநகரின் முக்கிய பகுதியிலுள்ள இறைச்சி கடைகள் மூடப்படுவதாக சென்னை மாநகராட்சி சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. சென்னை மாநகராட்சி அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது அந்த அறிவிப்பில் கூறியிருப்பதாவது:
அறிவிப்பு: "திருவள்ளுவர் தினத்தை முன்னிட்டு வரும் 15ஆம் தேதி சென்னை மாநகராட்சியில் ஒரு சில கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது அந்த கட்டுப்பாட்டில் அவர்கள் கூறியிருப்பதாவது சென்னை மாநகராட்சியின் கட்டுப்பாட்டில் உள்ள புளியந்தோப்பு, வில்லிவாக்கம், சைதாப்பேட்டை மற்றும் கள்ளிக்குப்பம் ஆகிய இறைச்சி கூடங்கள் அரசு உத்தரவின்படி மூடப்பட உள்ளது.
இறைச்சிக் கடைகள் வியாபாரிகள் பொதுமக்கள் அனைவரும் இந்த உத்தரவினை செயல்படுத்த முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் எனவும் கேட்டுக் கொண்டுள்ளனர். ஆண்டுதோறும் பொங்கல் பண்டிகை விமர்சையாக கொண்டாடப்படுகின்றது தை ஒன்றாம் தேதி தைத்திருநாள், தை இரண்டாம் தேதி திருவள்ளுவர் தினம், தை மூன்றாம் தேதி காணும் பொங்கல் என மூன்று நாட்களும் வெகு விமர்சியாக கொண்டாடப்படும் நிலையில் சென்னையில் இருந்து பலரும் தங்களது சொந்த ஊருக்கு செல்கின்றனர்.
இறைச்சி கடைகள்: திருவள்ளுவர் தினத்தை முன்னிட்டு ஜனவரி 15ஆம் தேதி தை இரண்டாம் நாள் இறைச்சி கடைகள் மூடவேண்டும் என சென்னை மாநகராட்சி நிர்வாகம் தெரிவித்துள்ளது. தடையை மீறி யாரேனும் திருவள்ளுவர் தினத்தன்று இறைச்சி கடைகள் நடத்தினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்" என்று சென்னை மாநகராட்சி நிர்வாகம் தெரிவித்துள்ளது.
இந்நிலையில், இந்த வருடம்தான் இப்படியொரு உத்தரவு பிறப்பித்திருப்பதாக, திடீரென சோஷியல் மீடியாவில் செய்திகள் பரவ தொடங்கியது.. இதனைத்தொடர்ந்து தமிழக அரசின் உண்மை சரிப்பார்ப்புக்குழு சார்பில் புதிய விளக்கம் ஒன்று தற்போது தரப்பட்டுள்ளது.
திடீர் புரளி: "அதில், திருவள்ளுவர் தினத்தை முன்னிட்டு 15-01-2025 அன்று பெருநகர மாநகராட்சியின் கட்டுப்பாட்டில் இயங்கும் புளியந்தோப்பு, வில்லிவாக்கம், சைதாப்பேட்டை, மற்றும் கள்ளிக்குப்பம் ஆகிய இறைச்சிக் கூடங்கள் அரசு உத்தரவின்படி மூடப்பட உள்ளன என்று பெருநகர சென்னை மாநகராட்சி வெளியிட்ட அறிவிப்பு சமூக வலைத்தளங்களில் அதிகம் பகிரப்படுகிறது.. இது புதிய உத்தரவல்ல. 1980-ம் ஆண்டில் இருந்து வெளியாகும் அறிவிப்பே.
ஊரக வளர்ச்சி மற்றும் உள்ளாட்சித்துறையின் சார்பில் ஜனவரி 23, 1980 தேதியிட்ட அரசாணை 45-ன் படி, திருவள்ளுவர் தினம், வள்ளலார் தினம் மற்றும் மகாவீர் ஜெயந்தி ஆகிய 3 நாட்களில் இறைச்சிக்கடைகள் மற்றும் இறைச்சி கூடங்களை மூடுவதற்கு மாநில அரசு உத்தரவிட்டுள்ளது" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
மது விற்பனை: அதேபோல, திருவள்ளுவர் தினத்தன்று, மது விற்பனையில் ஈடுபட்டால், ஒரு இடத்தில் இருந்து இன்னொரு இடத்திற்கு எடுத்துச் சென்றால், பதுக்கி வைத்து கள்ள சந்தையில் விற்பனை செய்தால், சம்பந்தப்பட்டவர்கள் மீது மதுவிலக்கு சட்டத்தின் கீழ் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்பதும் குறிப்பிடத்தக்கது.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications