கண்ட இடத்தில் மாணவிகளை தொடுவது.. மேலாடை தெரிந்தால் இழுத்து விடுவது.. ஆனந்த் செய்த பாலியல் சேட்டைகள்
சென்னை: சென்னை மகிரிஷி வித்யா மந்திர் பள்ளி ஆசிரியர் ஆனந்த், மாணவிகளை கண்ட இடத்தில் தொடுவார் என பாதிக்கப்பட்ட மாணவி புகார் கூறியுள்ளார்.
Recommended Video
சென்னை மகரிஷி வித்யா மந்திர் பள்ளி ஆசிரியர் ஆனந்த் மீது பாலியல் புகார் எழுந்துள்ளது. இந்த புகாரில் முன்னாள் மாணவி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கூறுகையில் நான் சேத்துப்பட்டு மகரிஷி வித்யா மந்திர் பள்ளியில் மாநில பாடப்பிரிவில் படித்துக் கொண்டிருந்தேன். எங்களுக்கும் இது போன்ற பாலியல் சீண்டல்கள் நடந்துள்ளன.
அவரது பெயர் ஆனந்த், காமர்ஸ் துறை ஆசிரியர். இவர் எங்களிடம் பாலியல் சீண்டல்களில் ஈடுபட்டுள்ளார். அவரது தவற்றை புகாரளிக்க சென்றால் எப்படியாவது வகுப்பில் சென்டிமென்ட்டலாக பேசி விடுவார். இல்லாவிட்டால் தான் செய்தது தவறு என்பதே அவருக்கு தெரியாதது போல் நடிப்பார்.

மாணவிகள்
இதனால் அவரை பற்றி புகாரளிக்க மாணவிகள் பயந்து கொண்டிருந்தோம். கண்ட இடத்தில் அடிப்பது, பின்புறத்தில் தட்டுவது, மேலாடை தெரிந்தால் அதை அவராகவே இழுத்து உள்ளே விடுவது, எங்கள் கைகளுக்குள் அவருடைய கைகளை கோர்ப்பது உள்ளிட்ட செயல்களில் ஈடுபடுவார். இது போன்ற தவறான செயல்களுக்கு யாராவது எதிர்ப்பு தெரிவித்தால் உடனே நான் உங்களுக்கு தந்தை போன்றவர் என கூறிவிடுவார்.

பின்புறம்
நான் ஒரு நாள் பள்ளி காரிடாரில் நடந்து சென்று கொண்டிருந்தேன். அப்போது அவர் எனது பின்புறத்தில் தட்டிவிட்டு காலையிலேயே தூக்கக் கலக்கத்தில் இருப்பது போல் இருக்காதே என்றார். இதுகுறித்து நான் தலைமை ஆசிரியர் ப்ரீத்தி நாராயணனிடம் புகாரளித்தேன். ஆனால் அவர் எந்த நடவடிக்கையையும் எடுக்கவில்லை.

பாலியல் சீண்டல்கள்
ஆண்டுதோறும் அவரிடம் படிக்கும் அனைத்து மாணவர்களும் தேர்ச்சி பெற்று வந்தார்கள். இதனால் அவர் மீது நடவடிக்கை எடுக்க பள்ளி நிர்வாகம் முன்வரவில்லை. இவரது செயல் குறித்து அனைத்து ஆசிரியர்களுக்கும் தெரியும். அண்மையில் இறந்த பள்ளியின் டீனாக இருந்த நமச்சிவாயம் சாருக்கும் ஆனந்தின் பாலியல் சீண்டல்கள் தெரியும்.

அவமானம்
அவர் ஆனந்தை என்னிடம் மன்னிப்பு கேட்க சொல்லவா என எனது பெற்றோரிடம் கேட்டார். ஆனால் நான் பிளஸ் 2 படித்துக் கொண்டிருந்ததால் எனது தந்தை மன்னிப்பெல்லாம் வேண்டாம், இது போல் மீண்டும் நிகழாமல் பார்த்துக் கொள்ளுமாறு கேட்டார். அதையேற்று நமச்சிவாயம் சாரும் அவரை எச்சரித்து அனுப்பினார். ஆனால் இத்தகைய மோசமான மனிதரான ஆனந்த் இன்னும் பள்ளியில் இருந்து கொண்டு மற்ற மாணவிகளிடம் பாலியல் சீண்டல்களை செய்து வருவது அவமானமாக உள்ளது என மாணவி தெரிவித்துள்ளார்.
-
வள்ளுவருக்கு காவி சாயம்.. பதிலளிக்காமல் சென்ற அமைச்சர் செங்கோட்டையன்! வெடிக்கும் விமர்சனம் -
ஆம்னி பஸ் மாதிரியே.. சென்னைக்கு வரும் விமானங்களில் கட்டணம் 3 மடங்கு உயர்வு! மக்கள் ஷாக் -
சென்னை புதிய ஆட்சியர் எஸ். மாலதி ஹெலன் IAS.. விஜய் களமிறக்கிய மாஸ்டர்மைண்ட்.. யார் இவர்? -
தாய் இறந்த துக்கத்திலும்! பாதுகாப்பு கொடுத்த போலீஸாருக்கு கையெடுத்து கும்பிட்டு நன்றி சொன்ன அஜித் -
10 மாதம் சுமந்த தாய் மோகினியின் உடலை! பெசன்ட் நகர் மின்மயானத்தில் சுமந்த அஜித்! முகம் முழுக்க சோகம் -
சென்னை கோயம்பேடு பாரில் டான்ஸ் ஆடும் போது தகராறு: கார் ஏற்றி இளம்பெண் கொலை! 6 பேர் கைது! பரபர தகவல் -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
ஆளுநரின் தனி செயலாளர் உட்பட.. தமிழகம் முழுவதும் ஐஏஎஸ் அதிகாரிகள் பலர் பணியிட மாற்றம்! -
விஜய்-க்கு புது சவால்.. 13 மாசமாச்சு.. சென்னை ஏர்போர்ட் - கிளாம்பாக்கம் மெட்ரோ திட்டத்தை மறந்த மத்திய அரசு! -
கத்திரி முடிந்தும்.. குறையாத வெப்பத்தின் தாக்கம்! 14 மாவட்டங்களில் செஞ்சுரி போட்ட வெயில்!












Click it and Unblock the Notifications