பாத்ரூம் செல்லும் போது கூட விடமாட்டார்.. ரிதன்யாவிற்கு நேர்ந்த கொடுமை.. அம்மாவே போட்டுடைத்த தகவல்
சென்னை: வரதட்சணைக் கொடுமையால் தற்கொலை செய்துகொண்ட ரிதன்யா குறித்து அவரது தாயார் பல ஊடகங்களுக்குப் பேட்டி அளித்து வருகிறார். தனது மகள் கடுமையாகக் கொடுமைப்படுத்தப்பட்டதாகவும், உடல் ரீதியாகவும் கடுமையான பாதிப்புகளுக்கு உள்ளானார் என்றும் அவர் கூறியுள்ளார்.
ரிதன்யாவின் தாயார் சில ஊடகங்களுக்கு அளித்த பேட்டியில், "என் மகள் குளியலறைக்குச் செல்லும்போது கூட கவின் தனியாக விடமாட்டார். கூடவே செல்வார். உள்ளே சென்று பின்னால் நின்று பார்ப்பாராம். நீங்கள் இப்படிச் செய்யக்கூடாது என்று சொன்னாலும் கேட்க மாட்டார்" என்று தெரிவித்தார்.

மேலும், "எனக்கு கூச்சமாக இருக்கிறது, இப்படிச் செய்யாதீர்கள், நாம் காதலித்து திருமணம் செய்யவில்லை, வீட்டில் பார்த்து முடிவு செய்த திருமணம். அதனால் எல்லாவற்றிற்கும் கொஞ்சம் நேரம் கொடுங்கள் என்று சொன்னாலும் கூட அவர் கேட்க மாட்டார். பலமுறை கெஞ்சியும், அவர் பின்தொடர்ந்து அத்துமீறியதாக என் மகள் என்னிடம் தெரிவித்தார்" என்று ரிதன்யாவின் தாயார் கூறினார்.
ரிதன்யா தற்கொலை பின்னணி
ரிதன்யாவிற்கும், கவினுக்கும் கடந்த 2025 ஏப்ரல் 11-ம் தேதி திருமணம் நடைபெற்றது. ரிதன்யாவின் பெற்றோர் 300 சவரன் நகை மற்றும் 70 லட்சம் ரூபாய் மதிப்பிலான வால்வோ சொகுசு கார் ஆகியவற்றை வரதட்சணையாக கொடுத்ததாக கூறப்படுகிறது. திருமணமான முதல் இரண்டு வாரங்கள் அமைதியாக இருந்ததாகவும், மூன்றாவது வாரத்தில் இருந்து வாக்குவாதங்கள் தொடங்கியதாகவும் பெண்ணின் அப்பா அண்ணாதுரை தெரிவித்துள்ளார். இதையடுத்து அண்ணாதுரையும், அவரது ரிதன்யா அம்மாவும் தலையிட்டு ரிதன்யாவை வீட்டிற்கு அழைத்து வந்துள்ளனர்.
ரிதன்யா மரணம்
கவின் அவ்வப்போது ரிதன்யாவைப் பார்க்க வந்துள்ளார். 20 நாட்களுக்குப் பிறகு, கவின் அவளை மீண்டும் தன்னுடைய வீட்டிற்கு அழைத்துச் சென்றுள்ளார். ஜூன் 22-ம் தேதி கவின், ரிதன்யாவை அவரது பெற்றோரின் வீட்டிற்கு அழைத்து வந்தபோது, ரிதன்யா சோகமாகவும், மன அமைதி இழந்தும் காணப்பட்டார். அப்போது எங்களுக்குள் எந்த சண்டையும் இல்லை என்றும், நான் எனது பெற்றோர் வீட்டில் தங்க விரும்புவதாகவும் கணவர் கவினிடம் ரிதன்யா கூறி உள்ளார்.
இந்த நிலையில்தான் ஜூன் 28ம் தேதி நாள் காலை 9.30 மணியளவில் ரிதன்யா தனது அப்பாவின் காரில் மொண்டிபாளையம் கோவிலுக்கு சென்றுள்ளார். பிற்பகல் 1 மணியளவில் ரிதன்யாவின் தொலைபேசியிலிருந்து அவரது தாய்க்கு ஒரு அழைப்பு வந்தது. அதில் ரிதன்யாவின் கார் சாலையில் கண்டுபிடிக்கப்பட்டதாகவும், அவர் ஓட்டுநர் இருக்கையில் ரிதன்யா மயக்க நிலையில் இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டது. அண்ணாதுரை உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றுள்ளார். அங்கு அவரது மகள் எந்தவித அசைவும் இன்றி இருந்துள்ளார். உடனடியாக அவர் அவிநாசி அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். ஆனால் அங்கு ரிதன்யா ஏற்கனவே இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.
கணவர் வீட்டு கொடுமை
கணவர் வீட்டு கொடுமையால் கடுமையாக பாதிக்கப்பட்ட ரிதன்யா.. மனமுடைந்து கடந்த 28 ஆம் தேதி கோவிலுக்குச் செல்வதாகக் கூறிவிட்டு காரில் சென்று, செட்டிபுதூர் பகுதியில் விஷம் குடித்து, காருக்குள்ளேயே தற்கொலை செய்து கொண்டார். தனது தற்கொலைக்கு முன்பு ரிதன்யா தனது தந்தைக்கு வாட்ஸ்-அப்பில் அழுதபடி தன் சாவுக்கு தனது கணவன் மற்றும் மாமனார், மாமியார் தான் காரணம் என்று உருக்கமாக அனுப்பிய ஆடியோ பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. மணமகன் வீட்டார் மனதளவிலும், உடலளவிலும் கொடுமைப்படுத்துவதாக கூறி ரிதன்யா தனது அப்பாவுக்கு வாட்ஸ் அப்பில் வாய்ஸ் மெசேஜ் அனுப்பி உள்ளார்.
மரணத்திற்கு முன் ரிதன்யா தனது அப்பாவிற்கு அனுப்பிய பல ஆடியோக்கள் இணையம் முழுக்க வைரலாகி வருகின்றன. தனது கணவர் குடும்பத்தினர் தன்னை எப்படி எல்லாம் கொடுமைப்படுத்தினர் என்று ரிதன்யா அனுப்பிய ஆடியோக்கள் பெரிய அளவில் பரபரப்பை ஏற்படுத்தியது.
-
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்!












Click it and Unblock the Notifications