என் அப்பா என் ஹீரோ என் இன்ஸ்பிரேசன் - பிரபலங்களில் தந்தையர் தின பதிவு
சர்வதேச தந்தையர் தினம் இன்று கடைபிடிக்கப்படுகிறது. இந்த நாளில் பிரபலங்கள் தனது அப்பாவைப் பற்றி ட்விட்டரில் பதிவிட்டுள்ளனர்.
சென்னை: அப்பாவின் பாசத்தை எல்லோராலும் புரிந்து கொள்ள முடியாது. மகனாக இருக்கும் போது அப்பாவின் பாசத்தை உணர முடியாது தான் அப்பாவான பின்னர்தான் ஒரு தந்தையாக தனது தந்தையின் கஷ்ட நஷ்டங்களை உணர முடியும். எல்லோருக்குமே அவரது அப்பாதான் முதல் ஹீரோதான். சர்வதேச தந்தையர் தினத்தில் பல பிரபலங்கள் தனது தந்தையை பற்றி தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளனர்.
அப்பாவின் அழகான முரட்டு மீசைக்குப் பின்னே ஒளிந்திருப்பது பாசமும் நேசமும்தான். சாமி பார்க்க தோள் மீது ஏறிய போது பலருக்கும் தெரியாது ஏறியிருப்பது சாமி மீதுதான் என்று. சந்தோஷமாக சிரித்தாலும் அந்த சிரிப்புக்கு பின்னே தனது கஷ்டங்களை மறைத்திருப்பார் தந்தை.
அப்பாதான் பலருக்கும் ஆதர்ஷ்ச நாயகர்கள். தந்தையர் தினம் கொண்டாடப்படும் இந்த நேரத்தில் பிரபலங்களின் தந்தையர்களை பார்க்கலாம்.

சுதர்சன் பட்நாயக்
மணற் சிற்ப கலைஞரின் தந்தையர் தின சிற்பம் ஒடிசாவில் உள்ள பூரி கடற்கரையை அலங்கரிக்கிறது. அப்பாவும் மகனும் அதில் மாஸ்க் அணிந்திருப்பதுதான் கூடுதல் சிறப்பு.

எஸ்வி சேகர்
நடிகரும் அரசியல்வாதியுமான எஸ்வி சேகர் தனது அப்பாவின் நினைவுகளையும், மகன், பேரன் என அனைவரின் புகைப்படங்களையும் பதிவிட்டு தந்தையர் தின வாழ்த்துக்களை கூறியுள்ளார்.

அன்கண்டிசனல் லப்
அன்பான அப்பாவின் பாசமும் நேசமும் அளவிடமுடியாதது அது அன்கண்டிசனல் லவ் வாழ்க்கைக்கு வழிகாட்டக்கூடியது என்று கூறி ராஜீவ் காந்தி அவரது மகள் பிரியங்கா வதேராவின் படங்களை பதிவிட்டுள்ளார் ஒரு பதிவர்.

சச்சின் டெண்டுல்கர்
My First Hero and My Inspiration Forever, My Dad
என் முதல் ஹீரோ என் இன்ஸ்பிரேசன் எப்போதுமே என் அப்பாதான் என்று பதிவிட்டுள்ளார் சச்சின் டெண்டுல்கர்.
உங்களுடைய அட்வைஸ் எப்போதுமோ விலைமதிப்பற்றவை. அதை நான் எப்போதுமே நினைவுபடுத்திக்கொள்வேன். எப்போதுமே நீங்கள் சிறந்தவர்தான் என்று பதிவிட்டுள்ளார் சச்சின் டெண்டுல்கர்

அப்பாவிடம் என்ன கேட்பார்
தந்தையர் தினத்தில் அனைவரின் மனதையும் நெகிழச்செய்யும் பதிவு ஒன்றை ஒரு ட்விட்டர்வாசி போட்டிருக்கிறார். எல்லையை காக்க உயிரை தியாகம் செய்த ராணுவ வீரரின் மகன் தந்தையர் தினத்தை என்ன கேட்பார் என்று பதிவில் கூறியிருக்கிறார்.

அஜீத் ரசிகர்களின் பதிவு
நடிகர் அஜீத் தனது மகளோடு இருக்கும் புகைப்படத்தையும் தெலுங்கு நடிகர் பவன் கல்யாண் தனது மகளோடு இருக்கும் புகைப்படங்களையும் பகிர்ந்துள்ள ரசிகர்கள் தந்தையர் தின வாழ்த்துக்களை பதிவிட்டுள்ளனர்.

அல்லு அர்ஜூன்
தெலுங்கு பட உலக நடிகர் அல்லு அர்ஜூன் தனது அப்பா உடன் இருக்கும் புகைப்படத்தையும் தனது குழந்தைகளுடன் தான் இருக்கும் புகைப்படங்களையும் பகிர்ந்து தந்தையர் தின வாழ்த்துக்களை கூறியுள்ளார்.

பிறந்த குழந்தையோடு ஏ.எல் விஜய்
சமீபத்தில் அப்பாவான இயக்குநர் ஏஎல் விஜய் தனது குட்டி குழந்தையோடு இருக்கும் போட்டோவை போட்டு தந்தையர் தின வாழ்த்துக்களை பகிர்ந்திருக்கிறார். எல்லோருக்குமே அவரது அப்பாதான் முதல் ஹீரோதான்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications