என்னோட பலமும் பலவீனமும் இதுதான்.. ஓபனாக பதில் சொன்ன விஜயகாந்த்.. ட்ரெண்ட் ஆகும் பழைய வீடியோ
சென்னை: தேமுதிக தலைவரும் நடிகருமான விஜயகாந்த் உயிரிழந்ததையடுத்து அவர் குறித்த பழைய நினைவுகளை ரசிகர்களும் திரைப்பிரபலங்களும் பகிர்ந்து வருகிறார்கள். அந்த வகையில் விஜயகாந்த் தனது பலம், பலவீனம் குறித்து பேசிய பழைய வீடியோ சமூக வலைத்தளங்களில் அதிகம் பரவி வருகிறது.
தேமுதிக தலைவரும் நடிகருமான விஜயகாந்த் சில காலமாகவே உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டு இருந்தார். சமீபத்தில் உடல்நலக்குறைவால் அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், நேற்று காலை அவர் காலமானார். விஜயகாந்த் உடல் சென்னை கோயம்பேட்டில் உள்ள தேமுதிக அலுவலகத்தில் நல்லடக்கம் செய்யப்படுகிறது. முன்னதாக நேற்று காலை கோயம்பேடு அலுவலகத்தில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது.

பின்னர் தீவுத்திடலுக்கு இன்று காலை கொண்டு வரப்பட்டது. முக்கிய பிரமுகர்களும் பொதுமக்களும் விஜயகாந்த் உடலுக்கு அஞ்சலி செலுத்தினர். தீவுத்திடலில் இருந்து தேமுதிக அலுவலகத்திற்கு ஊர்வலமாக கொண்டு வரப்பட்டு இன்று மாலை அடக்கம் செய்யப்பட உள்ளது. கோயம்பேடு பகுதியில் கடுமையான போக்குவரத்து நெரிசலும் நிலவுவதோடு பொதுமக்கள் கூட்டமும் அதிகமாக உள்ளது.
விஜயகாந்த் நினைவுகள்: இதனால், அடக்கம் செய்யப்படும் போது பொதுமக்களுக்கு அனுமதி கிடையாது என்று போலீசார் கூறியுள்ளனர். அங்கிருந்த கூட்டத்தினரை கலைந்து செல்லுமாறும் போலீசார் அறிவுறுத்தி வருகிறார்கள். இதனிடையே, விஜயகாந்த் குறித்த தங்கள் நினைவுகளை பலரும் பகிர்ந்து வருகின்றனர். அதேபோல், விஜயகாந்தின் கடந்த கால பேச்சுக்களும் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
பழைய வீடியோ: அந்த வகையில், தன்னோட பலம், பலவீனம் எது என்ற கேள்விக்கு விஜயகாந்த் பதிலளித்துள்ளார். சமூக வலைத்தளங்களில் பரவும் அந்த பழைய வீடியோவில் கூறப்பட்டு இருப்பதாவது:- எனக்கு நடிப்பதிலும் திருப்தி உள்ளது. தயாரிப்பாளர் என்ற முறையில் நிறைய பேரை அறிமுகப்படுத்துகிறேன் என்ற திருப்தி உள்ளது.
புதுமுகங்களுக்கு முக்கியத்துவம்: எத்தனையோ எண்ணங்களை மனதில் வைத்துக்கொண்டு அந்த இளைஞர்கள் நம் வாழ்க்கையில் எதையாவது சாதிக்கனும்னு நினைக்கிற அத்தனை இளைஞர்களுக்கும் என்னை பொறுத்தமட்டில் வாய்ப்பு கொடுக்கிறேன். ராவுத்தர் புரடொக்ஷன்ஸ் ஆக இருக்கட்டும், கேப்டன் சினி கிரியேஷன் ஆக இருக்கட்டும் புது முகங்களுக்குதான் முக்கியத்துவம் கொடுத்து இருக்கிறேன்.
பலவீனம் எது: அந்த வகையில் அது ஒரு வகையான் திருப்திதான். பலம் பலவீனம் எது என்று கேட்டீர்கள் என்றால் அந்த இரண்டுமே நான் தான்” என்றார். பல ஆண்டுகளுக்கு முன்பாக விஜயகாந்த் மிகவும் எதார்த்தமாக பேசும் இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவி வருகிறது. விஜயகாந்தின் ரசிகர்களும் இந்த வீடியோக்களை பகிர்ந்து உருக்கத்துடன் கருத்துக்களை பதிவிட்டு வருகிறார்கள்.












Click it and Unblock the Notifications